ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு உட்பட கூடுதலாக மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.29 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது. மஹிந்திராவின் பொலிரோ, நியோ , XUV 3XO, தார், ஸ்கார்பியோ, ஸ்கார்பியோ-N, தார் ராக்ஸ் மற்றும் XUV700 ஆகிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- பொலிரோ, நியோ: இந்த மாடலுக்கு ஜிஎஸ்டி 2.0 ₹1.27 லட்சம் வரை விலை குறைப்பு மற்றும் ₹1.29 லட்சம் கூடுதல் சலுகைகள் சேர்த்து, மொத்தமாக ₹2.56 லட்சம் வரை பலன்கள் கிடைக்கின்றன.
- XUV 3XO: இந்த புதிய மாடலுக்கு ஜிஎஸ்டி ₹1.56 லட்சம் விலை குறைப்பு மற்றும் ₹ 90,000 கூடுதல் சலுகைகள் என மொத்தமாக ₹2.46 லட்சம் வரை பலன்கள் உண்டு.
- XUV700: இந்த பிரீமியம் எஸ்யூவி-க்கு ஜிஎஸ்டி ₹1.43 லட்சம் விலை குறைப்புடன், ₹81,000 கூடுதல் சலுகைகள் சேர்த்து மொத்தம் ₹2.24 லட்சம் வரை பயன்கள் கிடைக்கும்.
- ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ-N: இந்த இரண்டு மாடல்களுக்கும் ஜிஎஸ்டி 2.0 மூலமாக ₹1 லட்சம் முதல் ₹1.45 லட்சம் வரை விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்த பலன்கள் ₹1.96 லட்சம் மற்றும் ₹2.15 லட்சம் வரை உள்ளன.
- தார் & தார் ராக்ஸ்: இந்த இரண்டு ஆஃப்-ரோடு வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி 2.0 மூலமாக ₹1.35 லட்சம் மற்றும் ₹1.33 லட்சம் வரை விலை குறைப்பு, கூடுதலாக ரூ.20,000 என முறையே ₹1.55 லட்சம் மற்றும் ₹1.53 லட்சம் ஆகும்.
Models | New Ex-Showroom Starting Price (INR Lakh) | Reduction in Ex-Showroom Price (Up to INR Lakh) | Additional Benefits (Up to INR Lakh) | Total Benefits (Up to INR Lakh) |
---|---|---|---|---|
Bolero/Neo | 8.79 | 1.27 | 1.29 | 2.56 |
XUV 3XO | 7.28 | 1.56 | 0.90 | 2.46 |
THAR | 10.32 | 1.35 | 0.20 | 1.55 |
Scorpio Classic | 12.98 | 1.01 | 0.95 | 1.96 |
Scorpio-N | 13.20 | 1.45 | 0.71 | 2.15 |
Thar ROXX | 12.25 | 1.33 | 0.20 | 1.53 |
XUV700 | 13.19 | 1.43 | 0.81 | 2.24 |
சலுகைகள் குறிப்பிட்ட மாடல் மற்றும் வேரியண்ட்களைப் பொறுத்து மாறுபடும். மேலும், இந்த பலன்களின் முழுமையான விவரங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.