இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், செப்டம்பர் 2025 மாதந்திர விற்பனை அறிக்கையின் படி, மொத்தம் 1,00,298 வாகனங்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 16% வளர்ச்சி கண்டுள்ளது.
ஜிஎஸ்டி 2.0 காரணமாக நவராத்திரியின் முதல் ஒன்பது நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்யூவி விற்பனை 60% க்கும் அதிகமாகவும், வணிக வாகன விற்பனை 70% க்கும் அதிகமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
SUV மற்றும் கார் விற்பனை
- உள்நாட்டு சந்தையில் 56,233 SUV விற்பனை, 10% வளர்ச்சி.
- கமெர்ஷியல் வாகன விற்பனை 26,728 யூனிட்கள், 18% அதிகரிப்பு.
- மொத்த ஏற்றுமதி 4,320 யூனிட்கள், 43% உயர்வு.
டிராக்டர் விற்பனை சாதனை
மஹிந்திராவின் Farm Equipment Business இந்த மாதம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- உள்நாட்டு டிராக்டர் விற்பனை 64,946 யூனிட்கள், கடந்த ஆண்டைவிட 50% அதிகம்.
- மொத்த விற்பனை (உள்ளூர் + ஏற்றுமதி): 66,111 யூனிட்கள், 49% வளர்ச்சி.
டிரக் & பஸ் விற்பனை
- மஹிந்திரா Trucks & Buses மற்றும் SML Isuzu இணைந்த விற்பனை: 1,904 யூனிட்கள் – 8% குறைவு.