ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வெற்றிகரமான விற்பனை எண்ணிக்கை 125 மில்லியன் இலக்கை கடந்ததை கொண்டாடும் வகையில் சிறப்பு ஸ்பிளெண்டர்+, பேஷன் பிளஸ் மற்றும் விடா விஎக்ஸ்2 வெளியிடப்பட்டுள்ளது.
தற்பொழுது ஹீரோ நிறுவனம் 48 நாடுகளில் கிடைத்து வருகின்ற நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் ஹீரோ நிறுவனம் இங்கிலாந்து உட்பட பல்வேறு ஐரோப்பியா சந்தையில் வெளியிடப்பட உள்ளது.
12.5 கோடி வாகனங்கள் விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் கிரே நிறத்துடன் புதிதாக பாடி கிராபிக்ஸ் பெற்றதாக அமைந்துள்ள நிலையில் மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.
E20 ஆதரவை பெற்ற OBD-2B மேம்பாட்டினை 7.91 bhp மற்றும் 8.05 Nm டார்க் வழங்கும் 97.2cc என்ஜின் பெற்று 4 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கின்றது. டிரம் பிரேக் ஆப்ஷனுடன் இரு பக்கத்திலும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றுள்ளது.
- 125 Million Splendor+ – ₹ 76,335
- 125 Million Passion+ – ₹ 77,510
- 125 Million Vida VX2 Plus – ₹ 1,01,413
(Ex-showroom)