புதுப்பிக்கப்பட்ட சூப்பர் ஆட்டோ மாடலை மோன்ட்ரா எலக்ட்ரிக் விற்பனைக்கு ரூ. 3,79,500 (எக்ஸ்-ஷோரூம், சப்ஸிடிக்கு பிறகு) விலையில் வெளியிட்டுள்ள நிலையில் முழுமையான சார்ஜில் முந்தைய மாடலை போலவே 160 கிமீ கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
புதிய சூப்பர் ஆட்டோவில் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைப்பதுடன் கூடுதலாக பிளாக் எடிசனில் டைனமிக் பாடி ஸ்டிக்கரிங் பெற்றதாக குறிப்பிடத்தக்க அம்சத்தை பெற்றுள்ளது.
Montra Electric Super Auto
ஏற்கனவே சந்தையில் கிடைத்து வந்த மாடலின் அடிப்படையான வசதிகளில் சிறிய மேம்பாட்டினை பெற்று இருளாக உள்ள பகுதிகளில் சிறந்த முறையில் ஓட்டுநருக்கான வெளிச்சத்தை வழங்க சிறந்த-இன்-கிளாஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. இந்த வாகனத்தில் ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன, அவை பராமரிப்பு செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில் மேம்பட்ட நிலைத்தன்மையையும் வழங்குவதற்கான சேஸிஸ் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பின் மூலம் சிறந்த பயண அனுபவத்தை வழங்குகின்றது.
மணிக்கு 55 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றுள்ள சூப்பர் ஆட்டோவில் 10.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டு 10Kw பவர் மற்றும் 60 என்எம் டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சார்ஜி 239 கிமீ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில், உண்மையான ரேஞ்ச் 160 கிமீ வரை வழங்கலாம்.
மோன்ட்ரா எலக்ட்ரிக்கின் “ஒன் மோன்ட்ரா எலக்ட்ரிக்” (1M) இணைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வகையில் ஓட்டுநருக்கான வாகன செயல்திறன் தரவு, அருகிலுள்ள சார்ஜிங் நிலைய இடங்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் அம்சங்களை மொபைலில் பெற முடியும்.
தற்பொழுது நாடு முழுவதும் 13,000க்கு மேற்பட்ட சூப்பர் ஆட்டோ விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், மிக சிறப்பான உரிமையாளர்களுக்கான பலனை வழங்கி வருவதாக முருகப்பா குழுமத்தின் TI க்ளீன் மொபிலிட்டி தெரிவித்துள்ளது.