
2027 ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள 0 α (Alpha) என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை ஜப்பான் மொபிலிட்டி கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக ஹோண்டாவின் இந்திய அதிகாரி எலக்ட்ரிக் மாடல் குறித்து உறுதிப்படுத்தியிருந்தார்.
ஹோண்டா தனது மின்சார கார்களுக்கான வரிசை 0 சீரிஸ் கான்செப்ட் என்றே வரிசைப்படுத்தி வரும் நிலையில் முதல் உற்பத்தியை அடைய உள்ள காருக்கு தற்பொழுது 0 α (ஆல்பா) என பெயரிட்டுள்ளது.
Honda 0 α
“Thin, Light, மற்றும் Wise” அதிக உயரம் இல்லாத நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்யூவி ஆனது எந்தவிதத்திலும் கிரவுண்ட் கிளியரண்ஸ் மற்றும் இன்டீரியரில் மிகவும் ஸ்பேஸ் கொண்டதாகவும், நவீனத்துவமான வசதிகளை பெற்றதாகவும் விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசைனை பார்க்கும் பொழுது நவீன டிரென்டிங்கில் ஹோண்டா 0 சீரிஸுக்கு தனித்துவமான டிசைன் மொழி வழங்கபட்டிருப்பதுடன் மிக நேர்த்தியான முன்பக்கத்தில், வழக்கமாக பிரிக்கப்பட்ட கூறுகள் – ஹெட்லைட்கள், சார்ஜிங் மூடி மற்றும் ஒளிரும் லோகோ போன்றவை பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில், டெயில் விளக்குகள், பேக்கப் விளக்குகள் மற்றும் டர்ன் சிக்னல் விளக்குகள் என மூன்றும் இணைக்கும் U- வடிவத்தை வெளிப்படுத்துகின்றது.
ஹோண்டா வடிவமைப்பு நிர்வாகி டக்கு ஃபுகுய் பேசுகையில், ஹோண்டா 0 α கான்செப்ட் அல்ல இது உற்பத்திக்கு மிகவும் நேரடியாக எடுத்துச் செல்ல உள்ளதாகவும், பெரும்பாலான வடிவமைப்பு விவரங்கள் இறுதி உற்பத்தி மாடலில் கண்டிப்பாக காணப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.

இதுவரை அதிகாரபூர்வ நுட்பவிவரங்களை ஹோண்டா வெளியிடவில்லை, ஆனால் கீழே எதிர்பார்க்கப்படும் தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
வீல் பேஸ் ஆனது 2,700-2,800mm வரை அமையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பேட்டரி மற்றும் மோட்டார் விபரங்கள் தகவலின் அடிப்படையில் 50kwh முதல் 65Kwh திறன் பெற்ற பேட்டரியுடன் 450-600 கிமீ ரேஞ்ச் வழங்கலாம்.
இந்திய சந்தையில் ஹோண்டாவின் முதல் பெரும் EV புரட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






