 
நாட்டின் முதன்மையான ஸ்கூட்டரான ஹோண்டாவின் ஆக்டிவா வெற்றிகரமான 24 ஆண்டுகளில் சுமார் 3.5 கோடி விற்பனை இலக்கை கடந்து இந்தியாவின் மிகவும் நம்பகமான, அதிகம் விரும்பும் ஸ்கூட்டர்களில் தொடர்ந்து முதன்மையாக விளங்கி வருகின்றது.
2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டிவா தொடர்ந்து பல்வேறு மாறுதல்களை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது எலக்ட்ரிக் வகையிலும் ஆக்டிவா e: விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
2015 ஆம் ஆண்டில் முதல் முறையாக 1 கோடி ஆக்டிவா வாடிக்கையாளர்களை எட்டிய நிலையில், அதைத் தொடர்ந்து 2018ல் 2 கோடி வாடிக்கையாளர்களை எட்டிய நிலையில், தற்பொழுது ஆக்டிவா, ஆக்டிவா 125, நீக்கப்பட்ட ஆக்டிவா ஐ உட்பட ஒட்டுமொத்த எண்ணிக்கை இப்போது 3.50 கோடி யூனிட்டுகளை எட்டியுள்ளதாகவும் ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது.

HMSI ஆகஸ்ட் 2025-ல் ஆக்டிவா மற்றும் ஆக்டிவா 125 ஆண்டுவிழா பதிப்புகளை அறிமுகப்படுத்தியது, இது இந்தியாவின் விருப்பமான ஸ்கூட்டருக்கு புதிய கிராபிக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது.
இந்தியா முழுவதும் HMSI-ன் வலுவான டீலர் நெட்வொர்க் தடையற்ற விற்பனை மற்றும் சேவை அணுகலை உறுதி செய்கிறது, அனைத்து வயதினருக்கும் மற்றும் புவியியல் பகுதிகளில் ஆக்டிவாவின் பரவலான ஈர்ப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.
 

