
யமஹா நிறுவனம் முதலீடு செய்துள்ள ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் இண்டி ஸ்கூட்டரின் அடிப்படையில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்ட EC-06 மின்சார ஸ்கூட்டர் மிக முரட்டுத்தனமான தோற்றத்துடன் அமைந்துள்ளது.
Yamaha EC-06
பெரும்பாலான அடிப்படை நுட்பங்களை இண்டி ஸ்கூட்டரிலிருந்து பகிர்ந்து கொண்டாலும், அதிக பூட்ஸ்பேஸ் பெற்று எலக்ட்ரிக் சந்தையில் 43 லிட்டர் கொண்டுள்ள நிலையில் இசி-06 வெறும் 24.5 லிட்டர் மட்டுமே யமஹா வழங்கியுள்ளது.
இண்டி ஸ்கூட்டரை போல இந்த மாடலிலும் 4.5 kW மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 6.7 kW வெளிப்படுத்தும் நிலையில் மிகவும் சிறப்பான ரேஞ்ச் வழங்கும் 4 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 160 கிமீ சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் வழங்குகிறது. ஆனால் 0-100 % சார்ஜிங் ஏறுவதற்கு 9 மணி நேரம் தேவைப்படும் என யமஹா குறிப்பிட்டுள்ளது.
LED விளக்குகள், LCD டிஸ்ப்ளே, சிம் அடிப்படையிலான டெலிமாடிக்ஸ் சார்ந்த வசதிகளுடன் ர்க்கிங் இடங்களில் ஸ்கூட்டரை எளிதாக நகர்த்துவதற்கு ரிவர்ஸ் பயன்முறையுடன் சேர்த்து, தேர்வு செய்ய மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன.
விற்பனைக்கு அனேகமாக 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விலை ரூ.1.50 லட்சத்துக்குள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

