Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

தினமும் பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயரும் ?

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 9,June 2017
Share
2 Min Read
SHARE

வருகின்ற ஜூன் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் பெட்ரோல் , டீசல் விலை தினந்தோறும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாறுதலுக்கு ஏற்ப தினமும் மாறுகின்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளது.

தினமும் பெட்ரோல் டீசல் விலை

தற்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக கடந்த மே 1ந் தேதி முதல் புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர்,  ஜெம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என மொத்தம் 5 மாநிலங்களில் உள்ள 200 பங்க்குகளில் தினமும் மாறும் பெட்ரோலிய பொருட்களின் விலையை அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்பொழுது இந்த திட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து தயாரிக்கபட்டுள்ள அடிப்படையில் ஜூன் 16ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படடையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தும்.

இந்த முறை நடைமுறை வரும்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் மற்ற பெட்ரோலிய பொருட்கள் விலையில் தினமும் சில பைசாக்கள் முதல் ரூபாய்கள் வரை குறையவும் அல்லது ஏறும். ஆனால் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பில்லை, என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் இந்த முடிவினை தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் செயல்படுகின்ற மொத்த பெட்ரோல் நிலையங்களில் 95 சதவித பங்களிப்பை  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதாவது நாட்டில் மொத்தமாக  56,190 பெட்ரோலிய டீலர்கள் செயல்படுவதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் சுமார் 52,604 பங்க்குகள் செயல்படுகின்றது.

ஜாகுவார் XE டீசல் கார் விற்பனைக்கு வந்தது
Lexus LM – ஆடம்பர வசதிகளுடன் லெக்சஸ் LM எம்பிவி டீசர் வெளியானது
மாருதியின் பிரபலமான செடான் காரின் அறிமுக தேதி வெளியானது
தீபாவளியை முன்னிட்டு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹோண்டா கார்ஸ்
ஹோண்டா ஜாஸ் ப்ரீவிலேஜ் எடிசன் விற்பனைக்கு வந்தது
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஓலா எஸ்1 புரோ + இ-ஸ்கூட்டர்
Ola Electric
ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்
xtreme 160r 4v
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ola roadster x electric
Ola Electric
ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved