Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டொயோட்டா கார்கள் ரூ. 2.17 லட்சம் வரை விலை குறைப்பு..! – ஜிஎஸ்டி வரி

by MR.Durai
1 July 2017, 10:32 pm
in Car News
0
ShareTweetSend

டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் மிகவும் கம்பீரமான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஃபார்ச்சூனர் எஸ்யூவி விலை அதிகபட்சமாக ரூ. 2.17 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்னோவா க்ரீஸ்ட்டா ரூ. 98,500 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா கார்கள் – ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரி-க்கு  பிறகு கார்கள் மற்றும் எஸ்யூவி போன்றவை விலை சரிவினை பெற்றுள்ள நிலையில் எஸ்யூவி-களின் விலை மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. முந்தைய வரி விதிப்பின் படி அதிகபட்சமாக 55 % வரை வசூலிக்கப்பட்ட எஸ்யூவி மாடல் வரி தற்போது 43 % என்ற அளவிற்கு குறைந்துள்ளதால் விலை சரிவை பெற்றுள்ளது.

விலை குறைப்பு மாநிலம் மற்றும் டீலர்கள் வாயிலாக மாறுபடும் என நாம் முன்பே குறிப்பிட்டிருந்தபடி இந்தியாவின் பிரிமியம் ரக எஸ்யூவி மாடல்களில்முதன்மையான ஃபார்சூனர் விலை ரூ. 2.17 லட்சம் வரை பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலையில் சரிவை பெற்றுள்ளது.

பிரபலமான இன்னோவா க்ரிஸ்டா மாடல் ரூ. 98,500 வரை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் எட்டியோஸ் லிவா விலை ரூ. 10,500, எட்டியோஸ் விலை ரூ. 24,500 கரோல்லா அல்ட்டிஸ் விலை ரூ. 92,500 வரை சரிந்துள்ளது.

ஆனால் ஹைபிரிட் கார் மாடல்களுக்கு முந்தைய வரி விதிப்பை விட 12.7 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக பிரையஸ் ஹைபிரிட் மாடல் ரூ. 5.24 லட்சம் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஹைபிரிட் மாடலான டொயோட்டா கேம்ரி விலை ரூ. 3.25 லட்சம் வரை அதிகரித்துள்ளது.

டொயோட்டா கார்கள் மற்றும் எஸ்யூவி விலை பட்டியல்

எட்டியோஸ் லிவா – ரூ. 5.17 லட்சம் முதல் ரூ. 6.18 லட்சம் வரை (பெட்ரோல்) , ரூ. 6.50 லட்சம் முதல் ரூ. 7.30 லட்சம் வரை (டீசல்) ,

பிளாட்டினம் எட்டியோஸ் – ரூ. 6.22 லட்சம் முதல் ரூ. 7.48 லட்சம் வரை (பெட்ரோல்) , ரூ. 7.30 லட்சம் முதல் ரூ. 8.55 லட்சம் வரை (டீசல்)

எட்டியோஸ் க்ராஸ் – ரூ. 6.43 லட்சம் முதல் ரூ. 7.80 லட்சம் வரை (பெட்ரோல்) , ரூ. 7.58 லட்சம் முதல் ரூ. 7.88 லட்சம் வரை (டீசல்) ,

டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா – ரூ. 13.49 லட்சம் முதல் ரூ. 19.02 லட்சம் வரை (பெட்ரோல்) , ரூ. 13.70 லட்சம் முதல் ரூ. 29.46 லட்சம் வரை (டீசல்) ,

இன்னோவா டூரிங் ஸ்போர்ட் – ரூ. 16.86 லட்சம் முதல் ரூ. 19.73 லட்சம் வரை (பெட்ரோல்) , ரூ. 17.91 லட்சம் முதல் ரூ. 20.25 லட்சம் வரை (டீசல்) ,

 

கரோல்லா அல்டிஸ் – ரூ. 15.13 லட்சம் முதல் ரூ. 18.92 லட்சம் வரை (பெட்ரோல்) , ரூ. 16.90 லட்சம் முதல் ரூ. 18.52 லட்சம் வரை (டீசல்) ,

ஃபார்ச்சூனர் – ரூ. 24.69 லட்சம் முதல் ரூ. 26.24 லட்சம் வரை (பெட்ரோல்) , ரூ. 26.16 லட்சம் முதல் ரூ. 29.46 லட்சம் வரை (டீசல்)

டொயோட்டா கேம்ரி – ரூ. 28.88 லட்சம் (பெட்ரோல்) , ரூ. 37.49 லட்சம் வரை (ஹைபிரிட்)

டொயோட்டா ப்ரைஸ் – ரூ. 44.96 லட்சம் (ஹைபிரிட்)

டொயோட்டா LC பிராடோ – ரூ. 86.55 லட்சம்

டொயோட்டா LC 200 – ரூ. 1.30 கோடி

(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் சென்னை- டீலர்களை பொறுத்து விலை மாறுபடும் )

 

Related Motor News

கூடுதலாக 5 % மைலேஜ் தரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் 48V அறிமுகம்

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் GX (O) விற்பனைக்கு வந்தது

புதிய அனுபவத்தை டொயோட்டா டைசர் வழங்குமா..!

மீண்டும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் ZX, ZX(O) முன்பதிவு துவங்கியது

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

எரிபொருள் பம்பில் கோளாறு கிளான்ஸாவை ரீகால் செய்த டொயோட்டா

Tags: Toyota
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata altroz 2025 bncap saftey ratings

BNCAP-ல் டாடாவின் அல்ட்ரோஸ் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்!

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan