Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 ஹூண்டாய் வெர்னா கார் விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
22 August 2017, 4:20 pm
in Car News
0
ShareTweetSend

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள 2017 ஹூண்டாய் வெர்னா கார் முற்றிலும் மேம்பட்ட புத்தம் புதிய டிசைன் மற்றும் கூடுதல் வசதிகளுடன் ரூ. 7.99 லட்சம் முதல் ரூ. 12.61 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

2017 ஹூண்டாய் வெர்னா கார்

புதிய எலன்ட்ரா மற்றும் எக்ஸென்ட் போன்ற கார்களில் இடம்பெற்றுள்ள மிக அகலமான அறுங்கோண வடிவிலான கிரில் முகப்பை பெற்று விளங்குகின்ற புதிய வெர்னா கார் K2′ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு உறுதியான கட்டுமானம் மற்றும் டிசைன் பெற்றதாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் வசதியுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்சிலும் கிடைக்கப் பெறுகின்றது.

ஒற்றை பாகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள அறுங்கோண வடிவிலான கிரிலுடன் புராஜெக்டர் ஹெட்லேம்ப், புதுப்பிக்கப்பட்ட க்ரோம் பூச்சினை பெற்ற ஹவுசிங் வசதியுடன் கூடியதாக கிடைக்கின்றது.  16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் பெற்று பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குகளை கொண்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் பீஜ் மற்றும் கருப்பு என இரு நிற கலவையை பெற்று மிக தாரளமான இடவசதியை வழங்குகின்ற வகையில் 2600 மிமீ வீல்பேஸ் பெற்றுள்ள வெர்னாவில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவற்றுடன் ஹூண்டாய் ஐபுளூ ஆடியோ ஸ்மார்ட்போன் இணைப்பினை பெற்று  க்ரூஸ் கன்ட்ரோல், சன் ரூஃப், போன்றவற்றுடன் இரு ஏர்பேக் ஏபிஎஸ் மற்றும் இபிடி அனைத்து வேரியன்டிலும் உயர்ரக வேரியன்டில் 6 காற்றுப்பைகள் வழங்கப்பட்டுள்ளது.

Dimensions ஹூண்டாய் வெர்னா
நீளம் 4,440 mm
அகலம் 1,729 mm
உயரம் 1,475 mm
வீல்பேஸ் 2,600 mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 mm

எஞ்சின்

123 hp பவர் மற்றும் 151Nm டார்க் வெளிப்படுத்தும் 1.6 L காமா பெட்ரோல் மற்றும் 128hp பவர் மற்றும் 260 NM டார்க் வெளிப்படுத்தும் 1.6 L U2 CRDi டீசல் என இரு எஞ்சின் ஆப்ஷன்களை பெற்றுள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மேனுவல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

  விபரம்
Hyundai Verna 2017 Petrol Hyundai Verna 2017 Diesel
எஞ்சின் 1,591 cc Gamma Dual VTVT 1,582 cc U2 CRDi
பவர் 123 PS 128 PS
டார்க் 151Nm 260 NM
கியர்பாக்ஸ் 6-speed MT/6-speed AT 6-speed MT/6-speed AT
மைலேஜ் 17.70 km/l (MT)15.92 km/l (AT) 24.75 km/l (MT)21.02 km/l (AT)

போட்டியாளர்கள்

மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட்  போன்றவற்றுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக 2017 ஹூண்டாய் வெர்னா வந்துள்ளது.

விலை

2017 ஹூண்டாய் வெர்னா கார் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பட்டியல் விபரம்

வேரியன்ட் பெட்ரோல் டீசல்
E ₹ 7,99,900 ₹ 9,19,900
EX ₹ 9,06,900 ₹ 9,99,900
SX ₹ 9,49,900 ₹ 11,11,900
SX (O) ₹ 11,08,900 ₹ 12,39,900
EX AT ₹ 10,22,900 ₹ 11,39,900
SX+ AT – ₹ 12,61,900
SX (O) AT ₹ 12,23,900 –

 

Related Motor News

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கான செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி.!

தமிழ்நாட்டில் ஹூண்டாய் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுகிறது

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ஹூண்டாய் வெனியூ அட்வென்ச்சர் எடிசன் வெளியானது

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

அடுத்த செய்திகள்

ஜூலை 17 ., கைனெடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

ஜூலை 17 ., கைனெடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

yamaha fz-x hybrid

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan