Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Industry

ஜாவா மோட்டார்சைக்கிள் : 90,000 ஜாவா பைக்குகள் விற்பனை செய்ய திட்டம்

By MR.Durai
Last updated: 3,January 2019
Share
SHARE

மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் சார்பில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஜாவா, ஜாவா 42 என இரண்டு புதிய பைக்குகளை வெளியிட்டுள்ளது.

ஜாவா பைக்கிற்கு கிடைத்த அமோகமான வரவேற்பினால் டிசம்பர் 25, 2018 முதல் ஆன்லைன் புக்கிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது முதல் வருடத்தில் சுமார் 90,000 பைக்குகள் என மாதந்தோறும் 7,500 யூனிட்டுகளை டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. பீதாம்பூரில் அமைந்துள்ள மஹிந்திரா தொழிற்சாலையில் ஒரு ஷிஃப்டிற்கு 200 பைக்குகளை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கபடாமல், தரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதால் சீரான விற்பனையை ஜாவா மோட்டார்சைக்கிள் திட்டமிட்டுள்ளது.

ஜாவா பைக் என்ஜின்

இரண்டு குழல் பெற்ற புகைப்போக்கி கொண்ட 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

கிளாசிக் ரகத்திலான ஜாவா மற்றும் நவீனத்துவத்தை பெற்ற ஜாவா 42 மாடல்களில் தற்போது முன்புறம் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 153 மிமீ டிரம் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் வேரியன்டாக பின்புற டயர்களுக்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் , புதுச்சேரி ஜாவா பைக் டீலர்கள்

தமிழகத்தில் மிக விரைவாக ஜாவா பைக் டீலர்கள் சென்னை (5 டீலர்கள்), புதுச்சேரி, கோவை , மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர் மற்றும் வேலூர் (மார்ச் 2019) ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த டீலர்கள் திறக்கப்பட்ட பின்னரே இனி முன்பதிவு செய்ய இயலும். அடுத்த சில வாரங்களுக்குள் சென்னையில் ஜாவா டீலர் திறக்கப்பட உள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)

(டெல்லி விற்பனையக விலை)

Jawa and Jawa Forty Two Image Gallery

pm modi maruti suzuki e vitara
மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் e Vitara உற்பத்தி துவங்கியது
இந்தியாவில் 5,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ குழுமம்
மீண்டும் பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டர் உற்பத்தி சீரானது.!
E20 பெட்ரோலுக்கு எதிரான பொது நல வழக்கு தாக்கல்.!
வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
TAGGED:Jawa Forty two
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms