Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

By MR.Durai
Last updated: 8,July 2019
Share
SHARE

2019 Renault Duster Front

இந்தியாவின் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக மாடல்களில் ஒன்றான ரெனோ டஸ்ட்டர் கார் ரூபாய் 7.99 லட்சம் முதல் ரூ. 12.49 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய மாடலை விட முற்றிலும் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியர் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் வந்துள்ளது. டீசல் என்ஜின் இருவிதமான பவர் முறையில் கிடைக்கின்றது.

வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் பெற்றிருந்தாலும் என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.  BS4 மாசு உமிழ்வு தரத்துக்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 105 bhp குதிரைத்திறன் மற்றும் 142 Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றள்ளது.

அடுத்து, 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இரு விதமான பவர் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. விலை குறைவான மாடல்களில் அதிகபட்சமாக 84 bhp குதிரைத்திறன் மற்றும் 200 Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டிருக்கின்றது. கூடுதல் பவர் வெளிப்படுத்துகின்ற மாடல்களில் அதிகபட்சமாக 108 bhp குதிரைத்திறன் மற்றும் 245 Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மேலும் டாப் வேரியண்டில் மட்டும் தொடர்ந்து ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மேனுவல் கியர்பாக்ஸ் வசதி பெற்ற மாடலில் வழங்ப்பபடுகின்றது.

Renault Duster Headlight

எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்டர் ஹெட்லைட், 16 அங்குல அலாய் வீல், மிக நேர்த்தியான மாற்றியமைக்கப்பட்ட முன்புற கிரில், முன் மற்றும் பின்புற பம்பர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக, புதிய வடிவத்தைப் பெற்ற டிசைன் அலாய் வீல், சன் ரூஃப் அம்சங்களை கொண்டிருப்பதுடன் வரவுள்ளது. இன்டிரியரில் குறிப்பாக மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றிருக்கும்.

2019 Renault Duster price list

RXE Petrol: ரூ. 7.99 லட்சம்
RXS Petrol: ரூ. 9.19 லட்சம்
RXS Petrol CVT: ரூ. 9.99 லட்சம்
RxE 85 PS Diesel: ரூ. 9.29 லட்சம்
RXS 85 PS Diesel: ரூ. 9.99 லட்சம்
RXS 110 PS  MT Diesel: ரூ. 11.19 லட்சம்
RXZ 110 PS MT Diesel: ரூ. 12.09 லட்சம்
RXZ 110 PS AMT Diesel: ரூ. 12.49 லட்சம்
RXZ 110 PS MT Diesel (AWD): ரூ. 12.49 லட்சம்

(ex-showroom, Delhi)

Renault Duster Interior Renault Duster Headlight Renault Duster Wheel Renault Duster Suv

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:renault duster
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை
Bajaj
2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved