Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

2016 ஹோண்டா அக்கார்டு கார் அறிமுகம்

By MR.Durai
Last updated: 28,July 2015
Share
SHARE
மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா அக்கார்டு மீண்டும் இந்திய சந்தைக்கு அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம். 9வது தலைமுறை ஹோண்டா அக்கார்டு தோற்றம் மற்றும் உட்புறம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா அக்கார்டு கார்
2016 ஹோண்டா அக்கார்டு கார்

புதிய அக்கார்டு காரின் வெளிதோற்றம் மற்றும் உட்புறத்தில் கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

தோற்றம்

அக்கார்டு தோற்றத்தில் முன் மற்றும் பின் பம்பர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முகப்பில் டாப் வேரியண்டில் புதிய எல்இடி முகப்பு விளக்கு மற்ற வேரியண்ட்களில் சாதரன விளக்குகளுடன் பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி பனி விளக்குகளை பெற்றுள்ளது.

www.automobiletamilan.blogspot
அக்கார்டு கார்

பக்கவாட்டில்  நேர்த்தியான வளைவுகளை பெற்றுள்ளது. 19 இஞ்ச் ஆலாய் வீலை பெற்றுள்ளது.

பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான அகலமான குரோம் பட்டை முன் மற்றும் பின் பக்கங்களில் பெற்றுள்ளது.

2016 ஹோண்டா அக்கார்டு கார்

உட்புறம்

நவீன காலத்திற்க்கு ஈடுகொடுக்கும் வகையில் பல புதிய வசதிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 7 இஞ்ச் (மற்ற வேரியண்ட் ) தொடுதிரை அமைப்பு மற்றும் டாப் வேரியண்டில் 7.7 இஞ்ச் தொடடுதிரை அமைப்புடன் கூடிய ஆண்ட்ராய்டு  ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆப்பினை பெற்றுள்ளது.

ஹோண்டா அக்கார்டு கார்
2016 ஹோண்டா அக்கார்டு கார்

முந்தைய ட்வீன் ஸ்கிரின் சென்ட்ர்ல் கன்சோல் , ஏசி கன்ட்ரோல் யூனிட் போன்றவற்றில் மாற்றங்கள் இல்லை. பிளாக் ஃபினிஷ் கொண்டுள்ளது.

என்ஜின்

ஹோண்டா அக்கார்டு காரில் 2.4 லிட்டர் மற்றும் 3.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக சிவிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்

புதிய அக்கார்டு காரில் ரியர் வியூ கேமரா அனைத்து வேரியண்டிலும் இருக்கும். மேலும் கூடுதல் ஹைபீம் முகப்பு விளக்குகள் , லேன் கீப் உதவி , லேன் வார்னிங் , அடாப்ட்டிவ் க்ரூஸ் கட்டுப்பாடு , மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர் , முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகள் டாப் வேரியண்டில் இருக்கும்.

2016 ஹோண்டா அக்கார்டு கார்
2016 ஹோண்டா அக்கார்டு கார்

ஹோண்டா அக்கார்டு காரினை மேம்படுத்தப்பட்ட ஹைபிரிட் மாடலும் வரவுள்ளது.  அமெரிக்காவின் ஹோண்டா அக்கார்டு மாடல் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஹோண்டா அக்கார்டு மாடல் சில மாறுதல்களை பெற்றிருக்கும்.

2016 Honda Accord Facelift details revealed

renault lodgy
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
TAGGED:Honda
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 honda activa 125
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ்
Honda Bikes
2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
All new TVS Jupiter 110 2 1
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms