Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsWired

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கார் – BLOODHOUND SSC

By MR.Durai
Last updated: 4,October 2015
Share
SHARE
உலகின் அதிவேக பிளட்ஹவுண்ட் SSC சூப்பர்சோனிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளட்ஹவுண்ட் சூப்பர்சோனிக் காரின் இலக்கு மணிக்கு 1609கிமீ  வேகத்தில் இயக்குவதாகும்.
BLOODHOUND SSC

சூப்பர்சோனிக் ரக கார்கள் மிக அதிவேகத்தினை அசாத்தியமாக சில விநாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டதாகும். தற்பொழுது உருவாகி வரும் பிளட்ஹவுண்ட் சூப்பர்சோனிக் காரின் குதிரை திறன் 1,35,000 எச்பி ஆகும்.

தோற்றம்

எரோடைனமிக்ஸ் அடிப்படையில் உருவாக்கப்படும் பிளட்ஹவுண்ட் சூப்பர்சோனிக் காரின் முன்பக்க தோற்றம் ராக்கெட்டினை போல விளங்குகின்றது.

ராக்கெட் இயக்க தத்துவம் , ஃபார்முலா பந்தய கார்களின் இயக்கம் என இரண்டின் அடிப்படையில் இந்த சூப்பர்சோனிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

என்ஜின்

ரோல்ஸ்ராய்ஸ் EJ-200 ஜெட் என்ஜின் மற்றும் ஜாகுவார் வி8 சூப்பர் சார்ஜ்டு என்ஜின் என இரண்டு என்ஜின் ஆற்றல்களும் ஒருமுகப்படுத்தி ராக்கெட் ஆக்சிடைசர் வழியாக பிளட்ஹவுண்ட் சூப்பர்சோனிக் காருக்கு இயக்க ஆற்றலாக மாறுகின்றது.  இதன் உச்சகட்ட ஆற்றல் 1,35,000 எச்பி ஆகும்.

17747 ej200

பிளட்ஹவுண்ட் சூப்பர்சோனிக் காருக்காக HTP (High Test Peroxide) liquid oxidiser எர்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது. வெறும் 17 விநாடிகளில் 1 டன் எரிபொருளினை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 1000 (1609கிமீ) மைல் வேகத்தினை எட்டுவதற்க்கு வெறும் 42 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

ஏர் பிரேக்

1609கிமீ வேகத்தில் பயணிக்கும்பொழுது சாதரன பிரேக்குகளை பயன்படுத்த இயலாது என்பதனால் பிரத்யேக 2 ஹைட்ராலிக் ரேம்களை கொண்டு செயல்படும். பிரேக் செய்து உடன் 8.8கிமீ தூரத்திற்க்குள் வாகனம் நிற்க்கும்.

சூப்பர்சோனிக் கார்

சோதனை ஓட்டம்

பிளட்ஹவுண்ட் SSC சூப்பர்சோனிக் காரின் முதற்கட்ட சோதனை ஒட்டம் வரும் ஆண்டில் 1288கிமீ வேகத்தில் இயக்க திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து 2017ம் ஆண்டில் 1609கிமீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரத்யேக சோதனை ஓட்ட களத்தினை தென் ஆப்பரிக்காவில் உள்ள ஹக்ஸ்கீன் பகுதியில் 19கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

BLOODHOUND SSC

ஓட்டுநர் யார் ?

1000 மைல் வேகத்தில் இயக்கினால் ரத்தம் உறைவதற்க்கான வாய்ப்புகள் உள்ளதால் இதற்க்காக ஓட்டுநருக்கு சிறப்பு பயற்சி அளித்து வருகின்றனர். ரிச்சர்ட் நோபுள் அல்லது ஆன்டி கீரின் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம் என தெரிகின்றது.

BloodHound SSC unveiled details

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
hero motocorp passion plus
Hero Motocorp
ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
KTM 160 Duke onroad price
KTM bikes
கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms