Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsBusWired

உலகின் முதல் டிரைவரில்லா பேருந்து – யூடாங் பஸ்

By MR.Durai
Last updated: 23,October 2015
Share
SHARE
உலகின் முதல் டிரைவரில்லா பேருந்தினை சீனாவின் முன்னனி பஸ் தயாரிப்பாளரான யூடாங் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. டிரைவரில்லா யூடாங் பஸ்சின் உச்சகட்ட வேகம் மணிக்கு 68கிமீ ஆக பதிவு செய்துள்ளது.
டிரைவரில்லா பேருந்து - யூடாங் பஸ்
டிரைவரில்லா பேருந்து – யூடாங் பஸ்

ஒட்டுநர் இல்லாத கார்கள் தொடர்ந்து பஸ் மற்றும் டிரக்குகளை முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றன. சீனாவின் யூடாங் பஸ் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டில் 60,000 பேருந்துகளை 120க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்து விற்பனையில் முன்னனி நிறுவனமாக உள்ளது.

10.5 மீட்டர் நீளமுள்ள யூடாங் ஹைபிரிட் பேருந்து மூலம் செங்ஷோ நகரத்திலிருந்து கைஃபெங் நகருக்கு இடையிலான பொது போக்குவரத்து சாலையில் 32.6 கிமீ தூரத்தினை சாரதியில்லாமல் வெற்றிகரமாக கடந்துள்ளது.

டிரைவரில்லா பேருந்து - யூடாங் பஸ்
டிரைவரில்லா பேருந்து - யூடாங் பஸ்

32.6 கிமீ தூரத்தில் மொத்தம் 26 போக்குவரத்து சிக்கனல்கள் உள்ளதாம் இவற்றில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை முந்துவது , மற்ற வாகனங்களுக்கும் பேருந்துக்கும் இடையில் சரியான தூரத்தில் போக்குவரத்து சிக்கனலில் நிற்பது போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாம்.

சோதனை ஓட்டத்தின்பொழுது யூடாங் ஓட்டுநர் இல்லா பேருந்தின் அதிகபட்சமாக மணிக்கு 68 கிமீ வேகத்தினை பயணித்துள்ளது.

டிரைவரில்லா பேருந்தில் இரண்டு கேமரா,  4 லேசர் ரேடார்கள் , ஒரு செட் மில்லிமீட்டர் வேவ் ரேடார் மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் போன்றவற்றின் உதவியுடன் கணிப்பொறி காட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக யூடாங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

விபத்துகளே இல்லாமல் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளால் எவ்விதமான விபத்துகளும் ஏற்படாதாம். மேலும் கணிப்பொறி உதவியுடன் செயல்படுதவதனால் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை வழங்கும்.

டிரைவரில்லா பேருந்து - யூடாங் பஸ்

2012ம் ஆண்டு முதல் ஓட்டுநர் இல்லா பேருந்து திட்டத்தினை செயல்படுத்தி வரும் யூடாங் நிறுவனம் தற்பொழுது தனது கடுமையான முயற்சியால் முதற்கட்ட சோதனை ஓட்டத்தினை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

உலகின் முதல் ஓட்டுநர் இல்லா பஸ் வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=lceQtP1-h5Y]

world’s first driverless bus successful testing begins in China

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
honda sp160 price
Honda Bikes
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms