Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

230 கிமீ ரேஞ்சு.., ₹ 7.98 லட்சத்தில் எம்ஜி காமெட் EV விற்பனைக்கு வந்தது

by MR.Durai
5 May 2023, 9:57 am
in Car News
0
ShareTweetSend

mg comet ev graphics

இந்திய சந்தையில் மற்றொரு காம்பேக்ட் எலக்ட்ரிக் கார் மாடலாக எம்ஜி காமெட் EV விலை ₹ 7.98 லட்சம் முதல் ₹ 9.98 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான வசதிகளை பெற்று நகர்ப்புற மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற காராக விளங்குகின்றது.

வரும் மே 15 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்படுகின்றது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எலக்ட்ரிக் காராக கோமெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் 3 கதவுகளை பெற்று 4 இருக்கைகளை பெற்றதாக வந்துள்ளது. இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர் இல்லையென்றாலும் டிகோர்.ev, டியாகோ.ev, சிட்ரோன் eC3 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

MG Comet EV

விற்பனைக்கு வந்துள்ள காமெட் எலக்ட்ரிக் காரின் பரிமாணங்கள் 2974mm நீளம், 1505mm அகலம், 1640mm உயரம் மற்றும் 2010mm வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த காரின் டர்னிங் ரேடியஸ் வெறும் 4.2 மீ ஆக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் மற்றும் குறுகலான சாலைகளிலும் வாகனத்தை ஓட்டுவதற்கு இலகுவாக இருக்கும்.

டூயல் பிரிவுகளை பெற்ற 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உட்புறத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் கிரே நிறத்திலான இன்டிரியர் ஆப்பிள் ஐபாட் தோற்ற அமைப்பில் கன்ட்ரோல் சுவிட்சுகள் வழங்கப்பட்டு லெதர் சுற்றுப்பட்ட இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பெற்றுள்ளது.

கனெக்டேட் கார் i-smart டெக், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, அதிகபட்ச வேகம் 30 முதல் 80 கிமீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் அமைக்கலாம்,  ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ, டிரைவ் மோடுகள் மற்றும் குரல் கட்டளைகளை பெற்றுள்ளது.

mg comet ev car interior1

காமெட் EV காரின் பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3.3 kW சார்ஜர் வாயிலாக 10 முதல் 80% சார்ஜ் பெற 5 மணிநேரமும், 0 முதல் 100% சார்ஜ் பெற 7 மணிநேரமும்  தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 230 கிமீ தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

நிகழ்நேரத்தில் காமெட் எலக்ட்ரிக் காரை ஓட்டும் பொழுது அதிகபட்சமாக 150 -170 கிமீ ரேஞ்சு வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Specifications MG Comet EV
டிரைவிங் ரேஞ்சு 230 கிமீ
அதிகபட்ச வேகம் 100 km/h
பேட்டரி திறன் 17.3 kWh
மோட்டார் பவர் 42 hp
டார்க் 110 Nm
சார்ஜிங் நேரம் 0-100 % 7 மணி நேரம்

10-80% 5 மணி நேரம்

Dimensions (L x W x H) 2,974 mm x 1,505 mm x 1,640 mm
Wheelbase 2010 mm
கெர்ப் எடை 815 kg
இருக்கை அளவு 4

எம்ஜி காமெட் எலக்ட்ரிக் கார் ரேஞ்சு ?

MG Comet EV காரின் பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் உள்ளதால் 230 கிமீ ரேஞ்சு கிடைக்கும்.

எம்ஜி காமெட் EV விலை எவ்வளவு ?

எம்ஜி காமெட் EV விலை Pace - Rs 7.98 lakh Play - Rs 9.28 lakh Plush- Rs 9.98 lakh

MG காமெட் EV சார்ஜிங் கட்டணம் எவ்வளவு ?

MG Comet EV காரில் 1,000 கிமீ பயணிக்க ரூ.519 கட்டணம் மட்டுமே ஆகும்.

Related Motor News

முழுமையான கருப்பு நிற எம்ஜி காமெட் EV பிளாக்ஸ்ட்ராம் அறிமுகமானது.!

BAAS திட்டத்தை காமெட் இவி, ZS EV என இரண்டுக்கும் விரிவுப்படுத்திய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி

நூற்றாண்டு கொண்டாட்டத்தில் எம்ஜி மோட்டார் சிறப்பு மாடல்கள்

இந்தியாவில் எம்ஜி மோட்டார் விற்பனை நிலவரம் FY’24

2024 எம்ஜி காமெட் EV காரின் மாற்றங்கள், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

எம்ஜி காமெட் EV காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

Tags: MG Comet EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan