Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsBus

சென்னையில் இன்ட்ரா-சிட்டி எலக்ட்ரிக் பேருந்து சேவையை துவங்கிய நியூகோ

By MR.Durai
Last updated: 31,May 2023
Share
SHARE

nuego electric bus

க்ரீன்செல் மொபைலிட்டி கீழ் செயல்படும் நியூகோ (Nuego) எலக்ட்ரிக் பஸ் சர்வீஸ் நிறுவனம், சென்னை-பாண்டிச்சேரி, சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-திருப்பதி என சென்னையிலிருந்து மூன்று இடங்களுக்கு நகரங்களுக்கு இடையிலான பேட்டரி மின்சார பேருந்து சேவையை தொடங்கியுள்ளது.

இந்த பேருந்துகள் சிசிடிவி கண்காணிப்பு, ஓட்டுநர் குடிபோதை சோதனை, ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் வேக வரம்பு சோதனை ஆகியவற்றை கொண்டுள்ளன. பேருந்து இயந்திர மற்றும் மின் சோதனை உட்பட 25க்கு மேற்பட்ட கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுகின்றன.

NueGo Electric Bus service

2022 முதல் வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சேவை வழங்கி வரும் நிலையில் தென்னிந்தியாவில் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ளது. சென்னையில், கோயம்பேட்டில் இருந்தும், புதுச்சேரியில், புறப்படும் இடம் பிஆர்டிசி பேருந்து நிலையம் ஆகும். திருப்பதியில், ஆர்டிசி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் பேருந்துகளில் ஏறலாம், பெங்களூரில் பேருந்துகள் மெஜஸ்டிக்கில் இருந்து புறப்படும்.

அனைத்து விதமான போக்குவரத்து நெரிசல்களிலும் ஏர் கண்டிஷனருடன் இயக்கும் போதும், எலக்ட்ரிக் பஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் பயணிக்க முடியும் என நியூகோ குறிப்பிட்டுள்ளது.

neugo ebus side
Redbus, Paytm மற்றும் Abhibus போன்ற பிற டிஜிட்டல் தளங்களுடன் NeuGo இணையதளம் மற்றும் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் பேருந்து சேவையை பெற டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

2025 BMW 2 Series Gran Coupe car
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
எத்தனால் கலந்த E20 பெட்ரோல் ஆபத்தில் கார்கள், பைக்குகள் ..!
பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது
TAGGED:Electric Bus
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
suzuki e access on road
Suzuki
சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved