Skip to content

மிக்கி மவுஸ் ஸ்கூட்டர் எடிசனை வெளியிட்ட வெஸ்பா

Vespa Mickey Mouse edition scooter

டிஸ்னி உடன் இணைந்து பிரசத்தி பெற்ற மிக்கி மவுஸ் அடிப்படையிலான லெஸ்பா பிரைமவேரா ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 50cc, 125cc, 150cc ஆகிய பிரிவுகளில் கிடைக்கின்ற பிரைமவேரா இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை.

இந்த ஸ்கூட்டரின் மிக்கி மவுஸ் சிறப்பு பதிப்பிற்கு பயன்படுத்தப்படும் Vespa Primavera ஆனது இந்தியாவில் விற்கப்படும் வெஸ்பா VXL பாடி ஸ்டைலை கொண்டுள்ளது. எனவே அந்த மாடலில் வரக்கூடும் அல்லது விற்பனைக்கு வெளியிடப்படாமல் போக வாய்ப்புள்ளது.

Vespa Mickey Mouse edition

வெஸ்பா ஸ்கூட்டர் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை பெற்றுள்ளது.  மிக்கி மவுஸ் கார்ட்டூனின் வண்ணங்களை அடிப்படையாக கொண்டு மஞ்சள் நிற சக்கரங்கள் மிக்கி மவுஸின் காலணிகளை நினைவூட்டுவதாக இந்நிறுவனம் கூறுகிறது.

அதே நேரத்தில், கருப்பு கண்ணாடிகள் தெளிவான வட்டமான காதுகளை நினைவுபடுத்துகின்றன. கதாபாத்திரத்தின் நிழற்படத்தை கோடிட்டுக் காட்டும் கிராஃபிக் பேட்டர்ன் ஸ்கூட்டரின் இருபுறங்களிலும் முன்பக்கத்திலும் காணப்படுகிறது. மிக்கி மவுஸின் கையொப்பம், இருக்கை மற்றும் முன் இடதுபக்க இன்டிகேட்டருக்கு சற்று மேலே இடம்பெற்றுள்ளது.

மிக்கி மவுஸ் பதிப்பு ஆனது டிஸ்னியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில்  வடிவமைத்துள்ளது.

Vespa Mickey Mouse edition

Vespa Mickey Mouse scooter