Skip to content

ராயல் என்ஃபீல்டு பாபர் 350, கிளாசிக் 650 பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது

re bobber 350 testing

பல்வேறு மாடல்களை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பாபர் 350 மற்றும் கிளாசிக் 650 பைக்கின் சாலை சோதனை ஓட்ட படங்கள் வெளியானது.

450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்ட ஹிமாலயன் அட்வென்ச்சர், ரோட்ஸ்டெர் மாடல்களை ஒருபுறம் ராயல் என்ஃபீல்டு சோதனை செய்து வரும் நிலையில், மற்றபடி 350சிசி என்ஜின் பெற்ற பாபர், புதிய புல்லட் 350, 650சிசி என்ஜின் பெற்ற ஷாட்கன் 650, கிளாசிக் 650 ஆகியவற்றையும் அறிமுகம் செய்ய உள்ளது.

RE Bobber 350

ராயல் என்ஃபீல்டு நிறுவன 350cc J-பிளாட்ஃபார்ம் அடிப்படையில் பாபர்-ஸ்டைல் மோட்டார்சைக்கிளை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. முன்பாக ஒரு இருக்கை பெற்ற பாபர் சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் தற்பொழுது, இரண்டு இருக்கைகள் கொண்ட பதிப்பு முதன்முறையாக கேமராவில் சிக்கியுள்ளது.

வழக்கமான பாபர் பாணியில் பின் சக்கரத்துடன் மேலும் கீழும் நகரும். இது ஃபெண்டருக்கு மேலே நேர்த்தியாக மிதக்கும் கான்டிலீவர்டு பில்லியன் இருக்கை வசதி வழங்கப்பட்டுள்ளது.

மற்றபடி பொதுவான மெக்கானிக்கல் மற்றும் என்ஜின் பாகங்கள் கிளாசிக் 350 பைக்கில் இருந்து பெற உள்ளது.

re bobber 350 and classic 650 testing

RE Classic 650

கிளாசிக் 350 அடிப்படையில் கிளாசிக் 650 மாடல் ஆனது தயாரிக்கப்பட்டு வருகின்றது. கிளாசிக் 650 பைக்கில் சிறிய 350 மாடலை போலவே தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பருடன் ஸ்பீளிட் சீட் ஆனது வழங்கப்பட்டு, இரு பக்கத்திலும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது.

Image source