Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் மைலேஜ், டாப் ஸ்பீடு விபரம்

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 2,August 2023
Share
0 Min Read
SHARE

x440

ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் உருவான X440 மோட்டார்சைக்கிள் பட்ஜெட் விலையில் வந்துள்ள ஒற்றை சிலிண்டர் பெற்ற ஹார்லி-டேவிட்சன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

எக்ஸ்440 டெனிம் விலை ரூ.2,29,000, விவிட் ரூ.2,49,000 மற்றும் டாப்-ஸ்பெக் எஸ் வேரியண்ட் ரூ.2,69,000 என மூன்று வகைகளில் கிடைக்கிறது. (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்)

Faq ஹார்லி-டேவிட்சன் X440

ஹார்லி-டேவிட்சன் X440 என்ஜின் விபரம் ?

ஹார்லி 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் வேரியண்ட் விபரம் ?

X440 பைக்கில் Denim, Vivid, மற்றும் S என மூன்று வேரியண்ட்கள் இடம்பெற்றுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் டாப் ஸ்பீடு எவ்வளவு ?

ஹார்லியின் X440 பைக்கின் டாப் ஸ்பீடு 146Kmph ஆகும்.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

இந்நிறுவனம், X440 பைக்கின் மைலேஜ் 35kmpl வரை வெளிப்படுத்தும் என தெரிவித்துள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் கெர்ப் எடை ?

190.5 கிலோ கிராம் கெர்ப் எடை X440 பைக் கொண்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 இருக்கை உயரம் எவ்வளவு ?

எக்ஸ் 440 இருக்கை உயரம் 805 mm ஆகும்.

ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கில் ஏபிஎஸ் உள்ளதா ?

320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

ஹார்லி-டேவிட்சன் X440 சஸ்பென்ஷன் விபரம்

முன்பக்கத்தில் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாக எக்ஸ் 440 உள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஜாவா 350, ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 மற்றும் ட்ரையம்ப் 400cc ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

ஹார்லி-டேவிட்சன் X440 டயர் மற்றும் வீல் அளவு ?

100/90 - 18 முன்பக்கத்தில் மற்றும் பின்பக்கத்தில் 140/70 - 17 ஆக உள்ளது.

ஹார்லி X440 பைக்கில் உள்ள நிறங்கள் எத்தனை ?

Harley-Davidson X440 ஆனது மெட்டாலிக் திக் ரெட், மஸ்டர்டு டெனிம், மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் டார்க் சில்வர் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது.

ஹார்லி-டேவிட்சன் X440 ஆன்ரோடு விலை எவ்வளவு ?

தோராயமான தமிழ்நாடு ஆன்-ரோடு விலை
X440 Denim ₹. 2,73,656 லட்சம்
X440 Vivid ₹. 307,540 லட்சம்
X440 S ₹. 3,37,645 லட்சம்

ஹார்லி-டேவிட்சன் X440 எரிபொருள் கொள்ளளவு எவ்வளவு ?

13.5 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் வழங்கப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X440 ஏன் போட்டியாளர்களை விட சிறந்தது ?

ஹார்லி-டேவிட்சன் பிராண்டு மதிப்பு சிறப்பாக உள்ள நிலையில், சிறப்பான டார்க், லாங்க் ஸ்ட்ரோக் என்ஜின், தரமான பாகங்கள் கொண்டதாகவும், இந்தியாவின் மிகவும் நம்பகமான ஹீரோ மோட்டோகார்ப் தயாரிப்பதால் எக்ஸ் 440 சிறந்த பைக் மாடலாக உள்ளது.

ஹார்லி எக்ஸ் 440 குறிப்பிடதக்க வசதிகள் ?

எல்இடி ஹெட்லைட், யூஎஸ்பி போர்ட், டூயல் சேனல் ஏபிஎஸ், ஆட்டோ ஹெட்லேம்ப் ஒளிரும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.
யூசிக் கண்ட்ரோல், அழைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் நிராகரிப்பது, ஸ்மார்ட்போன் பேட்டரி நிலை, தவறவிட்ட அழைப்பு எச்சரிக்கை, செய்தி எச்சரிக்கை மற்றும் நெட்வொர்க் ஸ்டெர்ன்த் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு ஹீரோ கனெக்ட் வசதிகள் உள்ளன.

 

2023 yamaha r15 v4
புதிய 2023 யமஹா R15 V4, R15S பைக்குகள் விற்பனைக்கு வந்தது
கவாஸாகி KLX 230 பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை
ரேசிங் பெர்ஃபாமென்ஸ் டிவிஎஸ் அப்பாச்சி RTR 165 RP அறிமுகம் எப்போது?
ராயல் என்பீல்டு புல்லட் 500
2025 சுசூகி ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 வெளியானது.!
TAGGED:Harley-Davidson X440
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2025 ஹோண்டா லிவோ 110
Honda Bikes
2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved