Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டொயோட்டா ருமியன் காரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

by MR.Durai
26 August 2023, 12:02 pm
in Car News
0
ShareTweetSend

toyota rumion mpv

எர்டிகா காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்டுள்ள டொயோட்டா ருமியன் காரில் 7 இருக்கைகளை பெற்றதாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் G, S மற்றும் V என மூன்று பிரிவில் 6 விதமான வேரியண்ட் கிடைக்க உள்ளது.

டொயோட்டா ருமியன் என்ஜின்

ருமியன் காரில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் டூயல் ஜெட் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருவதால், 6000rpm-ல் 103 hp பவரையும், 4400rpm-ல் 136.8 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு கூடுதலாக, பேடல் ஷிஃப்டர்டன் புதிய 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகவும் கிடைக்கின்றது.

எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 20.51kpl மற்றும் ஆட்டோமேட்டிக் 20.30kpl மைலேஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷன் பெறும் பொழுது ருமியன் CNG பயன்முறையில் இயங்கும் போது 87hp மற்றும் 121.5Nm டார்க் ஆகும். சிஎன்ஜி 5 ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே வருகிறது. கிலோவிற்கு 26.11 கிமீ மைலேஜ் என்று கூறப்படுகிறது.

அனைத்து வேரியண்டிலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக இரண்டு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ISOFIX குழந்தை இருக்கை அம்சம் (இரண்டாவது வரிசை) சீட் பெல்ட் ரிமைன்டர் (அனைத்து இருக்கைகளும்)
பின்புற பார்க்கிங் சென்சார் உள்ளது.

Toyota Rumion varaints explained

Toyota Rumion S

1.5 பெட்ரோல் MT/AT மற்றும் 1.5 CNG MT என இரண்டிலும் கிடைக்க உள்ளது.
  • ஆடியோ அமைப்பு
  • 4 ஸ்பீக்கர்கள்
  • ஆடியோ மற்றும் USB இணைப்பு
  • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் அழைப்பு கட்டுப்பாடு
  • ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்
  • 15 அங்குல ஸ்டீல் வீல்
  • டூயல் டோன் இன்டிரியர்
  • கியர் ஷிப்ட் காட்டி (MT மட்டும்)
  • ஹெட்லேம்ப் எச்சரிக்கை
  • எரிபொருள் இருப்பு (பெட்ரோல் மட்டும்)
  • மேனுவல் ஏசி
  • இரண்டாவது வரிசைக்கு 3-வேக ஏசி
  • குளிரூட்டப்பட்ட கப் ஹோல்டர்
  • முதல் மற்றும் இரண்டாவது வரிசையில் 12V பவர் சாக்கெட்டுகள்
  • பவர் விண்டோஸ்
  • டிரைவர் விண்டோ தானாக மேலே/கீழே (ஆன்டி-பிஞ்ச் உடன்)
  • ரிமோட் கீலெஸ் என்ட்ரி
  • பவர் மற்றும் டில்ட் ஸ்டீயரிங்
  •  மின்சாரம் சரிசெய்யக்கூடிய இறக்கை கண்ணாடிகள்
  • பேடல் ஷிஃப்டர்கள் (AT மட்டும்)

2023 Toyota Rumion Dashboard

Toyota Rumion G

1.5 லிட்டர் பெட்ரோல் MT மட்டும் பெறுகின்ற வேரியண்ட் ருமியன் S வசதிகளுடன்,

  • கிளைமேட் கன்ட்ரோல்
  • 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
  • இரண்டு ட்வீட்டர்
  • உயரத்தை சரிசெய்யக்கூடிய முன் இருக்கை பெல்ட்
  • உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை
  • முன் மூடுபனி விளக்குகள்
  • டொயோட்டா இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம்
  • டூயல்-டோன் 15-இன்ச் அலாய் வீல்
  • குரோம் கதவு கைப்பிடி
  • பின்புற வாஷர், வைப்பர் மற்றும் டிஃபோகர்
  • டேஷ்போர்டு மற்றும் முன் கதவு டிரிம்களில் தேக்கு மர பூச்சு
  • டூயல்-டோன் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி
  •  ஆர்ம்ரெஸ்ட் (முன் வரிசை)
  • எஞ்சின் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப்

toyota rumion

Toyota Rumion V

1.5 லிட்டர் பெட்ரோல் MT/AT பெறுகின்ற வேரியண்ட் ருமியன் G வசதிகளுடன்,

  • லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்
  • விங் மிரர்
  • க்ரூஸ் கண்ட்ரோல்
  • ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்
  • முன் பக்க ஏர்பேக்
  • பின்புற பார்க்கிங் கேமரா வசதி ஆகியவற்றை பெற உள்ளது.

மாருதி எர்டிகா விலை ரூ. 8.64 லட்சம் முதல் 13.08 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் இதனை விட சற்று கூடுதாக டொயோட்டா ருமியன் விலை சற்று கூடுதலாக அமையலாம்.

toyota rumion
Toyota Rumion
2023 Toyota Rumion Dashboard 150x150
toyota rumion
toyota rumion
Toyota Rumion Side 150x150
Toyota Rumion Rear 150x150
Toyota Rumion Tail Light 150x150
Toyota Rumion Front View 150x150
toyota rumion mpv india launch

Related Motor News

No Content Available
Tags: Toyota Rumion
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

upcoming electric suv

அடுத்தடுத்து வரவிருக்கும் XEV 9s, eVitara, Sierra.EV என மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவிகள்.!

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம்

ஓலா எலக்ட்ரிக்கின் பட்ஜெட் விலை காரின் காப்புரிமை படம் வெளியானது

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்

டிசம்பர் முதல் வாரத்தில் e Vitara எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் மாருதி சுசூகி

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan