Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025-ல் வரவுள்ள டாடா அவின்யா எலக்ட்ரிக் காருக்கு ஜேஎல்ஆர் பிளாட்ஃபாரம்

by MR.Durai
4 November 2023, 11:22 pm
in Car News
0
ShareTweetSend

Tata-avinya-electric

டாடா மோட்டார்சின் பிரீமியம் அவின்யா எலக்ட்ரிக் கான்செப்ட் காரினை விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ள இந்த காருக்கான EMA (Electrified Modular Architecture) பிளாட்ஃபாரத்தை ஜாகுவார் லேண்ட் ரோவரிடம் இருந்து பெற உள்ளதை உறுதி செய்துள்ளது.

டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (டாடா மின்சார வாகனப் பிரிவு) மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகியவை JLR இன் எலக்ட்ரிஃபைட் மாடுலர் ஆர்கிடெக்சர் (EMA) தளத்திற்கு ராயல்டி கட்டணத்திற்கு (பேட்டரி, எலக்ட்ரிக்கல் டிரைவ் உட்பட) உரிமம் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது.

Tata Avinya.ev

முற்றிலும் பிரீமியம் வசதிகளை பெற்ற எலக்ட்ரிக் காராக வரவுள்ள அவின்யா காருக்கான பிளாட்ஃபாரத்தை ஜாகுவாரிடம் பெற உள்ளதால், இந்த பிளாட்ஃபாரத்தின் மூலம் மிக நவீனத்துவமான வசதிகள் மற்றும் உயர்தரமான கட்டுமானத்தை கொண்டிருக்கும் என்பதனால் சிறப்பான பாதுகாப்புடன் லெவல்-2 ADAS நுட்பத்தை கொண்டிருக்கும்.

550 கிமீ ரேஞ்ச் அல்லது அதற்கு கூடுதலாக வழங்கும் வகையில் உள்ள அவின்யா மாடலில் 80 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், EMA பிளாட்ஃபாரம் மிக விரைவான அல்ட்ரா டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் 150 kW முதல் 300 kW வரை ஆதரிக்கும் என்பதனால், இந்த மாடல் 150 kW வரையிலான விரைவு சார்ஜரை பெறலாம்.

Tata avinya interior electric concept

தற்பொழுது டாடா மோட்டார்ஸ் GEN 1 அடிப்படையிலான பேட்டரி வாகனங்களை விற்பனை செய்து வரும் நிலையில், GEN 2 அடிப்படையில் ஹாரியர்.இவி மற்றும் கர்வ் எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி 2024 ஆம் ஆண்டில் வரவுள்ளது.

JLR நிறுவனத்தின் முதல் EMA அடிப்படையிலான EV ஆனது லேண்ட் ரோவர் எஸ்யூவி மற்றும்  ஜாகுவார் நான்கு கதவு GT மாடலும் 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டாடா பயன்படுத்திக் கொள்ள உள்ள EMA மூலம் முதல் பீரீமியம் எலக்ட்ரிக் அவின்யா 2025-ல் வரவுள்ளது.

Tata avinya electric concept side Tata avinya electric concept rear

Related Motor News

No Content Available
Tags: Tata Avinya
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

carens clavis price

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan