Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டொயோட்டா ஹைலக்ஸ் சேம்ப் பிக்கப் டிரக் அறிமுகமானது

by MR.Durai
27 November 2023, 4:47 pm
in Car News
0
ShareTweetSend

toyota hilux champ

டொயோட்டா நிறுவனத்தின் IMV 0 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட ஹைலக்ஸ் சேம்ப் குறைந்த விலை கொண்ட பிக்கப் டிரக் மாடலாக ஹைலக்ஸ் பிராண்டின் கீழ் தாய்லாந்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் பிரசத்தி பெற்ற ஹைலக்ஸ் பிராண்டில் வந்துள்ள குறைந்த விலை ஹைலக்ஸ் சேம்ப் டிரக் மாடலில் மிக இலகுவாக 11 விதமான கஸ்டமைஸ் வசதிகளை வர்த்தக ரீதியாக மட்டுமல்லாமல் தனிநபர்களுக்கு ஏற்ற வகையிலும் மாற்றிக் கொள்ளலாம்.

Toyota Hilux Champ

புதிய ஹைலக்ஸ் சேம்ப் மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷனை பெறும் நிலையில் அதன் விபரம் பின் வருமாறு ;- 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 137 bhp மற்றும் 183 Nm டார்க் வெளிப்படுத்தி 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது.

2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 166 bhp மற்றும் 245 Nm டார்க் வழங்கும் மாடல் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இறுதியாக, 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் 148 bhp மற்றும் 343 Nm டார்க் வெளிப்படுத்தும் மாடல் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது.

பல்வேறு வர்த்தக ரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் 5,300 mm நீளத்துடன் 3,085 mm லாங் வீல்பேஸ் மற்றும் ஷாட் வீல்பேஸ் 4,970 mm நீளத்துடன் 2,750 mm வீல்பேஸ் என இருவிதமாக உள்ள சேம்ப் மாடல் தயாரிக்கப்பட உள்ளது.

Toyota Hilux Champ shot wheelbase

தாய்லாந்தில் டொயோட்டா ஹைலக்ஸ் சேம்ப் டிரக் விலை 459,000 முதல் 577,000 பாட் வரை (ரூ 10.90 லட்சம் முதல் ரூ 13.70 லட்சம் வரை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹைலக்ஸ் சேம்ப் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை.

toyota hilux champ

Related Motor News

No Content Available
Tags: Toyota Hilux Champ
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

அடுத்த செய்திகள்

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan