Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய டாடா இன்ட்ரா V70, V20 கோல்டு பிக்கப் & ஏஸ் HT+ அறிமுகம்

by MR.Durai
5 December 2023, 1:56 pm
in Truck
0
ShareTweetSend

tata intra v70

டாடா மோட்டார்ஸ் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் இன்ட்ரா V70, இன்ட்ரா V20 கோல்டு பிக்கப் மற்றும் ஏஸ் HT+ ஆகிய புதிய மாடல்களுடன் மேம்பட்ட V50 மற்றும் ஏஸ் டீசல் ஆகியவை விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

தற்பொழுது டாடா இன்ட்ரா பிக்கப் வரிசையில் V10 , V20, V20 கோல்டு, V20 கோல்டு பை-ஃப்யூவல், V30, V50 மற்றும் V70 ஆகியவற்றுடன் டாடா ஏஸ் வரிசையில் புதிய ஏஸ் HT+ உடன் ஏஸ் இவி, ஏஸ் பெட்ரோல், ஏஸ் கோல்டு சிஎன்ஜி, ஏஸ் கோல்டு டீசல் ஆகியவை உள்ளது.

Tata Intra V70

1700 கிலோ சுமை தாங்கும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா இன்டரா V70 பிக்கப் டிரக்கில் 9.7 மீட்டர் நீளம் (2960mm) உள்ள கார்கோ பாடி கொடுக்கப்பட்டுள்ளது. 80 hp பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 220Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்றது.  மிக சிறப்பான சமை தாங்கும் திறன் பெற்ற இந்த மாடல் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான சேவைக்கு பயன்படுத்தலாம்.

Tata Intra V20 Gold Bi-fuel

இந்தியாவின் முதல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரு எரிபொருள் பயன்படுத்தி பிக்அப் டிரக் டாடா இன்ட்ரா V20 கோல்டு ஆனது அதிகபட்சமாக 1200 கிலோ சுமை தாங்கும் திறனுடன் வந்துள்ளது. 2690mm உள்ள கார்கோ பாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 57.6 hp பவர் மற்றும் 106 Nm டார்க் வழங்குவதுடன், சிஎன்ஜி முறையில் 52 hp பவர் மற்றும் 95 Nm டார்க் வழங்குகின்றது.

முழுமையான சிங்கிள் டிரிப் மூலம் 800 கிமீ வரை பயணிக்கலாம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

tata intra v20 bi fuel

Tata Ace HT+

20 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டாடா ஏஸ் டிரக் வரிசையில் 900 கிலோ அதிக சுமை தாங்கும் திறன் பெற்ற புதிய ஏஸ் HT+ மாடலில் உள்ள 800cc டீசல் என்ஜின் அதிகபட்சமாக 35bhp பவர் மற்றும் 85Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

tata ace ht plus

இதுதவிர, மேம்பட்ட இன்ட்ரா வி50 மற்றும் ஏஸ் டீசல் வந்துள்ளது. இந்த புதிய அறிமுகங்களுடன் மூலம் டாடா மோட்டார்ஸ் சிறிய வணிக வாகனங்கள் மற்றும் பிக்அப்களை வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற மிகவும் உகந்த வாகனத்தை தேர்வு செய்ய உதவுகிறது. இந்த வாகனங்களுக்கான முன்பதிவு இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் டீலர்ஷிப்களிலும் துவங்கப்பட்டுள்ளது.

tata intra v70, intra v20 bifuel and ace ht+
tata intra v70
tata intra v50
tata intra v20 bi fuel
Tata ace diesel
tata ace ht plus

Related Motor News

வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

ரேஞ்ச் 161 கிமீ.., டாடா ஏஸ் EV 1000 விற்பனைக்கு அறிமுகமானது

தமிழ்நாட்டில் JLR எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

6 % வளர்ச்சியில் டாடா மோட்டார்ஸ் விற்பனை நிலவரம் FY23-24

Tags: Tata AceTata IntraTata Motors
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

TVS King Kargo HD EV

ரூ.3.85 லட்சத்தில் டிவிஎஸ் கிங் கார்கோ HD EV டிரக் வெளியானது

Bolero MaXX Pik-Up HD 1.9 CNG

மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது

ஏசி வசதியுடன் டாடா டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது

மாருதி சுசூகி சூப்பர் கேரி டிரக்கில் ESP பாதுகாப்பு வசதி இணைப்பு.!

ரூ.8.99 லட்சத்தில் வந்துள்ள மஹிந்திரா வீரோ சிஎன்ஜி டிரக்கின் சிறப்பம்சங்கள்

மோன்ட்ரா எலெக்ட்ரிக் வெளியிட்ட இவியேட்டர் எலெக்ட்ரிக் டிரக்கின் சிறப்புகள்

₹6.50 லட்சத்தில் அசோக் லேலண்ட் சாத்தி டிரக் விற்பனைக்கு அறிமுகமானது

டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் விலை மற்றும் சிறப்புகள்.!

ரூ.7.52 லட்சத்தில் மஹிந்திரா ‘ZEO’ எலெக்ட்ரிக் மினி டிரக் அறிமுகம்

அதிநவீன பாதுகாப்புடன் வந்த ஸ்டோர்ம் எலெக்ட்ரிக் டிரக் ரேஞ்ச் மற்றும் விலை

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan