Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Industry

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் வெளியிட உள்ள முதல் எலக்ட்ரிக் கார் இது தானா..!

By MR.Durai
Last updated: 25,February 2024
Share
SHARE

vinfast auto india

மின்சார வாகனங்களை தயாரிக்க தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் (Vinfast) தொழிற்சாலை கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்துள்ளார். முழு கட்டுமானத்தை அடுத்த 15 மாதங்களில் நிறைவு செய்த முதல் மாடலாக VF e34 வெளியாக வாய்ப்புள்ளது.

சென்னையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.16,000 கோடி திட்டத்தை அறிவித்த மிக குறைந்த நாளிலே அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை துவக்கியுள்ள வின்பாஸ்ட் கார் மட்டுமல்லாமல் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வருகின்றது.

தமிழ்நாட்டின் மூலம் இந்தியாவில் கால்பதித்துள்ள இந்நிறுவனம் இந்திய மதிப்பிற்கு  ரூ.16,000 கோடி முதலீடு செய்து முதற்கட்டமாக ஆண்டுக்கு 150,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைவதால் 3,000 முதல் 3,500 பேருக்கு  நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

Vinfast VF e34

வின்ஃபாஸ்ட்டின் 4.3 மீட்டர் நீளம் பெற்ற VF e34 எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள 42kW பேட்டரி பேக் ஆனது 110 kW/147 HP பவர் மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 285 கிமீ ரேஞ்ச் வழங்கும் என  NEDC  சான்றிதழ் பெற்றுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 18 நிமிடங்களில் 180 கிமீ பயணிக்கும் வரம்பினை பெற உள்ளது. இந்த மாடலின் விலை அனேகமாக 20 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளது.

bmw ix1 electric
இந்தியாவில் 5,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ குழுமம்
மீண்டும் பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டர் உற்பத்தி சீரானது.!
E20 பெட்ரோலுக்கு எதிரான பொது நல வழக்கு தாக்கல்.!
வரத்தக வாகனங்களை டொமினிக்கன் குடியரசில் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
தென்னாப்பிரிக்கா சந்தையில் நுழைந்த டாடா மோட்டார்ஸ்
TAGGED:VinfastVinfast VF3
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved