Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2016

by MR.Durai
11 July 2016, 7:07 am
in Auto Industry
0
ShareTweetSend

இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சி சிறப்பான முறையில் வளர்ந்து வருகின்ற நிலையில் கடந்து போன 2016 ஜூன் மாத விற்பனையில் முன்னனி வகித்த டாப் 10 கார்கள் பற்றி  தெரிந்து கொள்ளலாம். இன்னோவா க்ரிஸ்ட்டா பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.

டாப் 10 பட்டியலில் தொடர்ச்சியாக பல மாதங்களாகவே மாருதி சுசூகி நிறுவனத்தின் 4 கார்கள் முதலிடத்தினை பிடிப்பது வழக்கமாக இருந்துவந்த நிலையில் தற்பொழுது பட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கி மாருதி ஆல்ட்டோ பயணித்து வருகின்றது. மாதந்தோறும்தொடர்ச்சியாக 20,000 கார்களுக்கு மேலாக விற்பனை ஆகி வந்த நிலையில் தற்பொழுது ஜூன் 2016யில் 15,750 கார்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. மேலும் மாருதி ஸ்விஃப்ட் காரும் 10,000 கார்களுக்கு குறைவாகவே 9,033 கார்களை விற்பனை செய்து பட்டியலில் 6வது இடத்தினை பெற்றுள்ளது. மாருதி நிறுவனத்தின் பராமரிப்பு பணிகளின் காரணமாக உற்பத்தி இழப்பினை பெற்றிருக்கலாம். ஆனாலும் மாருதி தொடக்கநிலை கார் சந்தையில் சரிவினை சந்திக்க தொடங்கியுள்ளது.

மிகப்பெரிய வளர்ச்சியாக இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ரெனோ க்விட் கார்களின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. ஜூலை மாத விற்பனையில் 10,000 இலக்கினை ரெனோ க்விட் கார் கடக்கலாம் மேலும் சமீபத்தில் வெளிவந்த செய்தியின் வாயிலாக ரெனோ க்விட் 1.50 லட்சம் முன்பதிவுகளை பெற்றுள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2016

வ.எண்   கார் மாடல் விபரம் ஜூன் -2016
1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 15,750
2  மாருதி சுஸூகி டிசையர் 15,560
3 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,678
4 மாருதி சுஸூகி வேகன்ஆர் 11,962
5  ரெனோ க்விட் 9,459
6 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 9,033
7 ஹூண்டாய் எலைட் ஐ20 8.990
8 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா 8,171
9 ஹூண்டாய் க்ரெட்டா 7,700
10 மாருதி சுஸூகி பலேனோ 6,967

Related Motor News

2025 மாருதி சுசூகியின் பலேனோ காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகம்

6 ஏர்பேக்குடன் புதிய மாருதி சுசூகி எர்டிகா விற்பனைக்கு வெளியானது

6 இருக்கை டெஸ்லா மாடல் Y L எஸ்யூவி அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விற்பனைக்கு அறிமுகமானது

டெஸ்லா மாடல் ஓய் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை.!

ஜீப் மெர்டியன், காம்பஸ் ட்ரெயில் எடிசன் வெளியானது

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

ஹைட்ரஜன் வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் நிறங்கள் தெரியுமா.?

நார்டன் எலெக்ட்ரா, காம்பேட் அறிமுகம் எப்பொழுது.?

32 மாதங்களில் 3 லட்சம் விற்பனை இலக்கை கடந்த கிராண்ட் விட்டாரா.!

அமோக ஆதரவுடன் 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ஏதெர் ரிஸ்டா

அடுத்த செய்திகள்

2025 Maruti Suzuki Baleno

2025 மாருதி சுசூகியின் பலேனோ காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகம்

மாருதி எர்டிகா

6 ஏர்பேக்குடன் புதிய மாருதி சுசூகி எர்டிகா விற்பனைக்கு வெளியானது

டெஸ்லா model y l

6 இருக்கை டெஸ்லா மாடல் Y L எஸ்யூவி அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விற்பனைக்கு அறிமுகமானது

tesla model y on road price

டெஸ்லா மாடல் ஓய் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை.!

Jeep Compass and Meridian Trail Editions

ஜீப் மெர்டியன், காம்பஸ் ட்ரெயில் எடிசன் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan