Skip to content

ரூ.38.40 லட்சத்தில் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 RS விற்பனைக்கு வந்தது

Ducati Multistrada V4 RS

இந்தியாவில் டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கின்ற புதிய மல்டிஸ்டிராடா V4 ஆர்எஸ் மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த எடிசன் ஆகும்.

Desmosedici Stradle 1,103cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 12,250 நிமிட சுழற்சியில் 180 HP, 9,500 நிமிட சுழற்சியில் 118 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த அட்வென்ச்சர் மாடலில் கார்பன் ஃபைபர் பாகங்கள் கொடுக்கப்பட்டு 225 கிலோ கொண்டுள்ளது.

முன்பக்கத்தில் இரட்டை 330மிமீ டிஸ்க்குகளில் பிரெம்போ ஸ்டைல்மா காலிப்பர்கள் மற்றும் பின்புறத்தில் பிரெம்போ டூ-பிஸ்டன் காலிபர் கொண்ட 265மிமீ டிஸ்க் உள்ளது.

ஓஹ்லின்ஸ் ஸ்மார்ட் EC செமி-ஆக்டிவ் சஸ்பென்ஷன் பெறுகின்ற இந்த பைக்கில் முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் என இரண்டையும் கட்டுப்படுத்தும் வகையிலான எலக்ட்ரானிக்ஸ் கொடுக்கப்பட்டு, ரேஸ், ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் ரைடிங் மோடுகளும் உள்ளது.