Skip to content

ரூ.12.86 லட்சத்தில் வந்த ஹோண்டா எலிவேட் ஏபெக்ஸ் எடிசன் சிறப்புகள்

elevate apex edition

ஹோண்டா இந்தியா நிறுவனம் எலிவேட் காரில் புதிதாக பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு எலிவேட் ஏபெக்ஸ் எடிசனை விற்பனைக்கு ரூபாய் 12.86 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. விற்பனையில் உள்ள மற்ற மாடல்களை விட ரூபாய் 15,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கின்றது.

எலிவேட் ஏபெக்ஸ் மாடலை பொருத்தவரை என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் முன்புற ஸ்பாய்லரில் கருப்பு நிறத்துடன் கூடிய சில்வர் அக்சென்ட்ஸ், பக்கவாட்டில், பின்புறத்தில் பம்பர் பகுதியிலும் கருப்பு நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் Apex Edition பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. இன்டீரியரில் ஐவரி மற்றும் கருப்பு நிறத்துடன் கூடிய உட்புறம், Apex பேட்ஜிங் பெற்ற இருக்கை கவர், சிறிய மெத்தை, ஆம்பியண்ட் விளக்குகள் ஆகியவற்றை பெற்றுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடலில் 1.5-லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 4300 rpm-ல் 121hp பவர், 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான பவர்டிரையின் கிடைக்கின்றது.

Elevate Apex Editon Price list

  • V MT – Rs 12.86 லட்சம்
  • V CVT – Rs 13.86 லட்சம்
  • VX MT – Rs 14.25 லட்சம்
  • VX CVT – Rs 15.25 லட்சம்

(ex-showroom)