Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

பஜாஜ் 125cc பைக்குகளின் சிறப்புகள் மற்றும் விலை பட்டியல்

By MR.Durai
Last updated: 3,January 2025
Share
SHARE

bajaj 125cc bikes on road price list

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 125சிசி சந்தையில் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி, பல்சர் 125, பல்சர் N125 மற்றும் பல்சர் NS125 என நான்கு மாடல்களின் நுட்ப விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.

Contents
  • Bajaj Freedom 125 CNG
  • Bajaj Pulsar 125
  • Bajaj Pulsar N125
  • Bajaj Pulsar NS125

125சிசி பைக் சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிக சிறப்பான வளர்ச்சியை தற்போது பதிவு செய்து வருகின்றது குறிப்பாக இந்நிறுவனத்தின் பல்சர் பைக் மற்றும் சிஎன்ஜி பைக்குகள் அமோகமான வரவேற்பினை பெற்று வருகின்றது. குறிப்பாக ஹீரோ மற்றும் ஹோண்டா என இரண்டு நிறுவனங்களுக்கும் மிகுந்த சவாலினை இந்த பிரிவில் ஏற்படுத்தி வருகின்றது.

Bajaj Freedom 125 cng on-road

Bajaj Freedom 125 CNG

உலகின் முதல் சிஎன்ஜி பைக் என அறியப்படுகின்ற பஜாஜ் ஆட்டோவின் ஃபிரீடம் 125 பைக் மாடல் 2 கிலோ சிஎன்ஜி மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் கொண்டு மொத்தமாக சுமார் 330 கிமீ பயண தொலைவினை வழங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 கிலோ சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பைக்கிற்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை என்றாலும் மற்ற 125சிசி பைக்குகளுடன் சந்தையில் உள்ளது.

பஜாஜ் ஃபிரிடம் 125 பைக்கின் ஆரம்ப விலை ₹ 94,997 முதல் ₹ 1,09,997 (எக்ஸ்ஷோரூம்) வரை உள்ளது.

2024 Bajaj Freedom 125 CNG
என்ஜின் (CC) 125 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 9.5 bhp @ 8000 rpm
டார்க் (Nm@rpm) 9.7 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ் 5 Speed
மைலேஜ் (CNG+Petrol) 330 Km

NG04 Drum, NG04 Drum LED, மற்றும் NG04 Disc LED என மூன்று விதமான வேரியண்டுளை பெற்று இரு பக்க டயரிலும் டிரம் அல்லது முன்புறத்தில் மட்டும் டிஸ்க் வசதியுடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் கருப்பு, கிரே, வெள்ளை, சிவப்பு, மற்றும் நீலம் என 5 நிறங்களின் அடிப்படையில் 7 விதமான நிறங்கள் கிடைக்கின்றது.

2024 பஜாஜ் ஃபிரீடம் 125 ஆன்-ரோடு தமிழ்நாடு விலை ₹ 1,17,560 முதல் ₹ 1,36,051 வரை கிடைக்கும்.

  • NG04 Drum – ₹ 1,17,560
  • NG04 Drum LED – ₹ 1,30,389
  • NG04 Disc LED – ₹ 1,36,051

bajaj pulsar 125cc bike

Bajaj Pulsar 125

பல்சர் வரிசை பைக்கில் குறைந்த விலை மாடலாக உள்ள பல்சர் 125 ஆனது மிக ரெட்ரோ ஸ்டைலை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த மாடலில் நியான் மற்றும் கார்பன் ஃபைபர் என இரண்டு வேரியண்டின் அடிப்படையில் கருப்பு நிறத்துடன் கூடிய ப்ளூ, பச்சை, மற்றும் சில்வர் என 6 நிறங்களுடன் சிங்கிள் இருக்கை , ஸ்பிளிட் இருக்கை என இருவிதமாக கிடைக்கின்றது.

2024 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் ஆரம்ப விலை ₹ 85,542 முதல் ₹ 1,00,077 (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

2024 Bajaj Pulsar 125
என்ஜின் (CC) 124.4 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 11.8 bhp @ 8500 rpm
டார்க் (Nm@rpm) 10.8 Nm @ 6500 rpm
கியர்பாக்ஸ் 5 Speed
மைலேஜ் 55 Km

முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் பெற்று பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி கொண்டுள்ள பல்சர் 125 மாடலுக்கு போட்டியாக கிளாமர் 125, ஹோண்டா சைன் 125 மற்றும் சூப்பர் ஸ்ப்ளெண்டர் 125 போன்ற மாடல்கள் உள்ளன.

2024 பஜாஜ் பல்சர் 125 ஆன்-ரோடு தமிழ்நாடு விலை ₹ 1,01,340 முதல் ₹ 1,19,651 வரை கிடைக்கும்.

  • Neon Single Seat – ₹ 1,01,340
  • Carbon Fiber Single Seat – ₹ 1,12,321
  • Carbon Fiber Split Seat – ₹ 1,19.651

bajaj pulsar n125cc bike

Bajaj Pulsar N125

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள பல்சர் என்125 மாடல் ஆனது மிக நேர்த்தியாக கூர்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் LED Disc BT, LED Disc என இரண்டு விதமான வேரியண்ட் ஆப்ஷனை பெறுகின்றது. இந்த மாடலில் கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் நீலம் என 4 நிறத்துடன் டாப் வேரியண்டில் கருப்புடன் இணைந்த நீலம், சிவப்பு மற்றும் சிட்ரஸ் ரஷ் என மொத்தமாக 7 நிறங்களை பெற்றுள்ளது.

2024 பஜாஜ் பல்சர் N125 பைக்கின் ஆரம்ப விலை ₹ 94,707 முதல் ₹ 98,707 (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

2024 Bajaj Pulsar N125
என்ஜின் (CC) 124.59 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 12 bhp @ 8500 rpm
டார்க் (Nm@rpm) 11 Nm @ 6000 rpm
கியர்பாக்ஸ் 5 Speed
மைலேஜ் 52km

முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொண்டுள்ள மாடலில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் இந்த மாடலுக்கு போட்டியாக ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், ஹோண்டா எஸ்பி 125 மற்றும் டிவிஎஸ் ரைடர், ஹீரோ கிளாமர் போன்ற மாடல்கள் கிடைக்கின்றன.

2024 பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு தமிழ்நாடு விலை ₹ 1,10,140 முதல் ₹ 1,15,437 வரை கிடைக்கும்.

  • LED Disc – ₹ 1,10,140
  • LED Disc – ₹ 1,15,437

2024 பஜாஜ் பல்சர் NS125 விலை

Bajaj Pulsar NS125

4 வால்வுகளை கொண்ட 125சிசி எஞ்சின் பெற்றுள்ள பல்சர் என்எஸ் 125 பைக்கில் எல்இடி விளக்குகள், டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று ஆரஞ்ச், சிவப்பு, நீளம் மற்றும் கிரே என நான்கு நிறங்களுடன் ஸ்போர்ட்டிவான ரைடிங் அனுபவத்தை வெளிப்படுத்துகின்றது.

2024 பஜாஜ் பல்சர் NS125 பைக்கின் ஆரம்ப விலை ₹ 1,08,960 (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

2024 Bajaj Pulsar NS125
என்ஜின் (CC) 124.45 cc
குதிரைத்திறன் (bhp@rpm) 11.8 bhp @ 8500 rpm
டார்க் (Nm@rpm) 11 Nm @ 7000 rpm
கியர்பாக்ஸ் 5 Speed
மைலேஜ் 50 Km

பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று 17 அங்குல வீல் கொண்டுள்ள பைக்கில் முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் உடன் கிடைக்கின்றது. இந்த மாடலுக்கு போட்டியாக பல்சர் N125, கேடிஎம் 125 டியூக், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், ஹோண்டா எஸ்பி 125 மற்றும் டிவிஎஸ் ரைடர், ஹீரோ கிளாமர் போன்ற மாடல்கள் கிடைக்கின்றன.

2024 பஜாஜ் பல்சர் NS125 ஆன்-ரோடு தமிழ்நாடு விலை ₹ 1,29,653 வரை கிடைக்கும்.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள். கூடுதல் ஆக்செரிஸ் இணைக்கும் பொழுது விலை மாறுபடும்.

onroad price Tamil Nadu updated – 28-10-2024

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:125cc BikesBajaj Freedom 125Bajaj Pulsar 125Bajaj Pulsar N125Bajaj Pulsar NS 125
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்
Ather energy
2025 ஏதெர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms