Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 மாருதி சுசூகி டிசையர் மைலேஜ் உட்பட முக்கிய சிறப்பம்சங்கள்

by நிவின் கார்த்தி
6 November 2024, 7:58 am
in Car News
0
ShareTweetSend

Maruti Suzuki dzire

இந்தியாவின் மிகவும் பிரபலமான காம்பேக்ட் செடான் மாடலாக விளங்குகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் வரும் நவம்பர் 11ம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது முழுமையான விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விபரங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தலைமுறை வரை ஸ்விஃப்ட் மாடலும் டிசையரும் ஒரே மாதிரியான தோற்ற அமைப்பை முன்புறத்தில் பகிர்ந்து கொண்டு வந்த நிலையில் தற்போது இனி அவ்வாறு இருக்கப் போவதில்லை என்பதனை உறுதி செய்யும் வகையில் புதுமையான ஒரு டிசைன் அமைப்பினை மாருதி சுசூகி நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

புதிய டிசையர் எஞ்சின் விபரம்

சமீபத்தில் வெளியான ஸ்விஃப்ட் மாடலை போலவே புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. இதன் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக  மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

  • டிசையர் காரின்  மைலேஜ் 5 வேக மேனுவல் பெற்ற மாடல் 24. Kmpl
  • டிசையர் காரின் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் உள்ள 25.71 Kmpl வெளிப்படுத்தும்.

சிஎன்ஜி ஆப்ஷனில் வரும்பொழுது பவர் 69bhp மற்றும் 102Nm டார்க் வழங்கி ஐந்து ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

டிசையர் சிஎன்ஜி காரின் மைலேஜ் 5 வேக மேனுவல் பெற்ற மாடல் 33.73 Km/kg ஆகும்.

மாறுபட்ட டிசையரின் இன்டீரியர்

அடிப்படையில் ஸ்விஃப்ட் காரில் இருந்து பெறப்பட்ட இன்டீரியர் டேஸ்போர்டு டிசைனை கொண்டிருந்தாலும், மாறுபட்ட கலர் காம்பினேஷன் உடன் சிறப்பான வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கின்றது.

அடர் பழுப்பு நிறத்தை அடிப்படையாக கொண்ட உட்புறத்தில் கருமையான பிரவுன் நிறத்துடன் மரத்திலான தோற்றத்தை வெளிப்படுத்தும் வூட்  ஃபினீஷ் மற்றும் பிரஷ்டூ செய்யப்பட்ட அலுமினியத்தை கொண்டுள்ளது.

மற்றபடி, வசதிகளில் க்ரூஸ் கண்ட்ரோல், ஒற்றை பேன் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, MID (multi-information display) கிளஸ்ட்டருடன் 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது. குறைந்த விலை வேரியண்டுகளில் 7 அங்குல சிஸ்டம் உள்ளது.

Maruti Suzuki dzire interior

பிரீமியம் தோற்றத்தில் டிசையர்

ஸ்விஃப்ட் காரில் இருந்து மாறுபட்ட டிசைன் பெற்ற புதிய டிசையர் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ஒரு மாறுபட்ட கிரில் அமைப்பினை முன்புறத்தில் மிக ஸ்டைலிஷ் ஆக அதே நேரத்தில் பிரீமியமாக விளங்கும் வகையில் கிடைமட்டமான ஸ்லாட் கிரில் பெற்று எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் (crystal vision headlamps) கொண்டு இருக்கின்றது.

பக்கவாட்டில் புதிய டைமன்ட் கட் அலாய் வீல் கொண்டுள்ள காரில் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி டெயில் விளக்கினை மாருதி “3D Trinity LED elements” என

புதிய டிசையர் காரி்ன் அளவுகள் 3,995மிமீ நீளம், 1,735மிமீ அகலம் மற்றும் 1,525மிமீ உயரம், 2,450மிமீ வீல்பேஸ் மற்றும் 163மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

Maruti Suzuki dzire 2024 model

டிசையர் போட்டியாளர்கள்

புதிய மாருதி டிசையருக்கு சமீபத்தில் டீசர் வெளியான புதிய ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

டிசையர் விலை, அறிமுகம் தேதி, புக்கிங் விபரம்

நவம்பர் 4ஆம் தேதி முதல் மாருதி டிசையர் காருக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூபாய் 11,000 வசூலிக்கப்பட்டு வருகின்றது விலை நவம்பர் 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டு டெலிவரி நவம்பர் மத்தியில் துவங்க உள்ளது.

புதிய மாருதி சுசுகி டிசையர் காரின் ஆரம்ப விலை ரூபாய் 6.80 லட்சத்திற்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

new Maruti Suzuki dzire 2024 model

Related Motor News

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

BNCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற 2025 மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகியின் 2025 டிசையர் டூர் S விற்பனைக்கு வெளியானது

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

30 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி டிசையர்..!

2025 ஜனவரி முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4% வரை உயருகிறது..!

Tags: Maruti Suzuki Dzire
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Tata Sierra suv

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது

tata harrier suv

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம்

ஓலா எலக்ட்ரிக்கின் பட்ஜெட் விலை காரின் காப்புரிமை படம் வெளியானது

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்

டிசம்பர் முதல் வாரத்தில் e Vitara எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் மாருதி சுசூகி

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan