டிவிஎஸ் மோட்டாரின் 2025 ஆம் ஆண்டிற்கான OBD2B ஆதரவினை பெற்ற அப்பாச்சி RTR 200 4V விலை ரூ. 1,53,990 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பாச்சி பிராண்டினை டிவிஎஸ் வெளியிட்டு வெற்றிகரமாக 20 ஆண்டுகளை கடந்து சுமார் 60 லட்சம் பைக்குகளுக்கு கூடுதலாக விற்றுள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் தொடர்ந்து புதிய மாசு விதிகளுக்கு உட்பட்ட ஓபிடி-2பி ஆதரவுடன் கூடிய 9,000 rpm-ல் 20.8 PS பவர் மற்றும் 7,250 rpm-ல் 17.25 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மற்றபடி, 2025 மாடலில் முக்கிய மாற்றங்களாக முன்புறத்தில் கோல்டன் நிற 37மிமீ அப்சைட் டவுன் சஸ்பென்ஷன், ஹைட்ரோஃபார்ம் செய்யப்பட்ட ஹேண்டில்பார், ரெட் அலாய் வீலுடன் வந்துள்ள 2025 மாடலில் தற்பொழுது கிளாஸி பிளாக், மேட் பிளாக், மற்றும் கிரானைட் கிரே ஆகிய மூன்று நிறங்களை பெற்றதாக கிடைக்கின்றது. ஆர்டிஆர் 200 4வி மாடலில்…
Author: MR.Durai
யெஸ்டி அட்வென்ச்சர் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதுப்பிக்கப்பட்ட இரட்டை பிரிவு கொண்ட முகப்பு விளக்குடன், புதிய நிறங்கள், பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களுடன் பாடி கிராபிக்ஸ் பெற்று ரூ. 2.15 லட்சம் முதல் ரூ.2.27 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. Yezdi Adventure முந்தைய ஒற்றை முகப்பு விளக்கிற்கு பதிலாக தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள இரட்டை பிரிவில் வலதுபுறத்தில் ரிஃபெலக்டர், அடுத்து புராஜெக்டர் LED ஹெட்லைட் ஆனது இடதுபுறத்தில் இடம்பெற்று பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி டெயில் லைட் இரண்டு பிரிவாக வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, ஃபென்டர், அட்ஜெஸ்ட்பிள் முறையிலான விண்ட்ஸ்கீரின் உள்ளிட்ட மாறுதல்களுடன் தற்பொழுது 6 விதமான புதிய நிறங்களை கொண்டுள்ளது. தொடர்ந்து 334சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 29.20bhp மற்றும் 29.6Nm டார்க்கை உருவாக்குகிறது. இது ஆறு வேக கியர்பாக்ஸுடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யெஸ்டி அறிமுகத்தின் போது கூறுகையில் சிறப்பான செயல்திறனுக்காக மேம்படுத்தப்பட்ட…
65KWh மற்றும் 75Kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனுடன் டாடா ஹாரியர்.EV எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.21.49 லட்சம் முதல் துவங்குகின்ற நிலையில் டாப் மாடலில் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 120Kw DC விரைவு சார்ஜர் ஆதரவினை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த வசதிகளில் BNCAP மற்றும் GNCAP 5 நட்சத்திர ஆதரவுக்கு 7 ஏர்பேக்குகள் (6 ஸ்டாண்டர்டு மற்றும் கூடுதல் முழங்கால் பகுதிக்கான ஏர்பேக்) மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் லெவல் 2 ADAS ஆதரவுடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆட்டோ ஹோல்டுடன் அமைந்துள்ளது. 65kwh பேட்டரி ஆப்ஷனை பற்றி முழுவிபரங்களை வெளியிடாத நிலையில் சில அடிப்படையான தகவல்களை 75Kwh பேட்டரி பற்றி தகவலை வெளியிட்டுருந்த நிலையில் பின் வருமாறு;-, முன்புற மோட்டார் 158 PS (116 kW) சக்தியையும், பின்புற மோட்டார் 238 PS (175 kW) பவரை வெளிப்படுத்துகின்று.…
மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் நியோ டிரைவ் 48V மற்றும் லெஜெண்டர் நியோ டிரைவ் 48V என இரு மாடல்களின் விலை முறையே ரூ.44,72,000 முதல் ரூ. 50,09,000 எக்ஸ்ஷோரூம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் எஸ்யூவி சந்தையில் முதன்முறையாக நியோ டிரைவ் 48V மூலமாக மேம்பட்ட எரிபொருள் திறன் மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் செயல்திறனை வழங்க வடிவமைக்கப்பட்ட பிரிவு-முதல் 48-வோல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. டொயோட்டாவின் 2.8 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-டீசல் எஞ்சின், உடன் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரியை உள்ளடக்கிய 48-வோல்ட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் உதவி தொழில்நுட்பத்தின் மூலம் மிகச் சிறப்பான மைலேஜ் வழங்கவும், ரீஜெனேரேட்டிவ் பிரேக்கிங் மூலம் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. ஆஃப் ரோடு சாகசங்களுடன் மல்டி-டெரெய்ன் செலக்ட் சிஸ்டத்தை பெற்றதாகவும், ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் நியோ டிரைவ் என இரண்டிலும் 360-டிகிரி பனோரமிக் கேமரா மற்றும்…
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் குறிப்பாக நான்கு சக்கர வாகனங்கள் பிரிவில் புதிதாக பல்வேறு மாடல்கள் விற்பனைக்கு வெளியாகி வரும் நிலையில் ஜூன் 2 முதல் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் ஹாரியர்.ev, காரன்ஸ் கிளாவிஸ்.ev, வின்ஃபாஸ்ட் VF7, VF6, மாருதி சுசூகி e விட்டாரா, டெஸ்லா, மஹிந்திரா 3XO EV, சுமார் ஏழுக்கு மேற்பட்ட எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இவை மட்டுமல்ல எம்ஜி செலக்ட் மூலம் சைபர்ஸ்டெர், M9 உள்ளிட்ட பல்வேறு பிரிமீயம் மாடல்கள் டாடா சியரா இவி ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். டாடா ஹாரியர்.ev ஜூன் 3 ஆம் தேதி வரவுள்ள ஹாரியர்.இவி எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 600கிமீ மேல் எதிர்பார்க்கப்படும் நிலையில் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் பெற்று பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் ஆரம்ப விலை ரூ.20 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா காரன்ஸ் கிளாவிஸ்.ev சமீபத்தில் சந்தைக்கு வந்துள்ள கேரன்ஸ்…
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னிலையில் இருந்தாலும், மஹிந்திரா மற்றும் எம்ஜி என இரண்டும் கடும் சவாலினை ஏற்படுத்த துவங்கியுள்ளது. முதலிடத்தில் உள்ள டாடா மோட்டார்சின் எலக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கை Vahan தரவுகளின் அடிப்படையில் மே 2025ல் சுமார் 4,319 யூனிட்டுகளை டெலிவரி வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எம்ஜி எலக்ட்ரிக் எண்ணிக்கை 3,732 ஆக உள்ளது. குறிப்பாக இந்நிறுவன விண்ட்சர் இவி அமோக ஆதரவினை கொண்டுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள மஹிந்திரா BE 6, XEV 9e ஆகிய இரண்டுக்கும் கிடைத்துள்ள அமோக வரவேற்பின் காரணமாக மஹிந்திரா சுமார் மே 2025ல் 2,604 யூனிட்டுகளை டெலிவரி வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 509 யூனிட்டுகளும், ஐந்தாம் இடத்தில் BYD நிறுவன எண்ணிக்கை 491 ஆக உள்ளது, மேலும், பிஎம்டபிள்யூ நிறுவனம் 172 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. TOP 5 E-4Ws…