கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான 10 கார்களின் விவரங்களை கானலாம். மாருதி சுசூகி தொடர்ந்து இந்திய சந்தையில் 44 சதவீத சந்தை மதிப்பினை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.1. மாருதி ஆல்டோ 800மாருதி ஆல்டோ 800 கார் தொடர்ந்து சிறப்பான விற்பனை பெற்று வருகின்றது. 2014 ஆம் வருடத்தில் 264,544 கார்களை விற்பனை செய்துள்ளது. குறைவான விலை அதிகப்படியான எரிபொருள் சிக்கனம் போன்ற காரணங்களால் தொடர்ந்து விற்பனையில் முதன்மை பெற்று வருகின்றது.2. மாருதி சுசூகி டிசையர்ஆல்டோ 800 காரை தொடர்ந்து சுசூகி டிசையர் உள்ளது. கடந்த ஆண்டில் 210,882 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. சிறப்பான செடான் காராக இந்திய சந்தையில் நிலைத்துவிட்ட டிசையர் காரில் தானியங்கி பரப்புகை வர வாய்ப்புகள் உள்ளது.3. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்பலரின் விருப்பமான ஹேட்ச்பேக் என்றால் அது ஸ்விஃப்ட கார்தான். டிசையரை தொடர்ந்து 202,831 கார்கள் விற்றள்ளது. கடுமையான போட்டியிலும் ஸ்விஃப்ட் காரின் விற்பனை…
Author: MR.Durai
ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டில் அதிக கார்கள் விற்பனை செய்து கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து சாதனை செய்து வருகின்றது.கடந்த 111 வருட ரோல்ஸ்ராய்ஸ் வரலாற்றில் அதிகப்படியான கார்களை 2014 ஆம் வருடத்தில் 4063 கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2013 ஆம் ஆண்டில் விட 12% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.அமெரிக்கா ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் அதிகப்படியான கார்களை விற்பனை செய்துள்ளனர். இவற்றை தொடர்ந்து சீனாவிலும் கனிசமான விற்பனையை பதிவு செய்துள்ளது.ரோல்ஸ் ராய்ஸ் விற்பனை தொகுப்பு;ரயீத் மற்றும் கோஸ்ட் II மாடல்கள் இந்த வளர்ச்சியில் பெரும்பங்கினை வகித்து வருகின்றது. தற்பொழுது உலக முழுவதும் 127 டீலர்களை கொண்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் மேலும் டீலர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.மேலும் அறிய ; ரோல்ஸ் ராய்ஸ் கார்Rolls-Royce deliver 4063 cars in 2014
நாட்டின் மிக பெரிய யுட்டலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் 50 இலட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனை செய்துள்ளது.மேலும் இந்த மைல்கல்லை சாதனை கொண்டாடும் வகையில் தனது தொழிலாளர்களை 3000 பேரை கொண்டு 4கிமீ தூரத்திற்க்கு மனித சங்கலியாக நிற்க வைத்து கொண்டாடி உள்ளது.எஸ்யூவி மற்றும் எம்பிவி சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் மஹிந்திரா நிறுவனம் தனது மாடல்களான ஸ்கார்பியோ, பொலிரோ, எக்ஸ்யூவி500 கார்களின் மூலம் வலுவான அடிதளத்தினை கொண்டுள்ளது.மேலும் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரினை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.மேலும் சில: மஹிந்திரா புதிய கார்கள்
இந்தியாவின் பிரிமியம் எஸ்யூவி சந்தையில் தனித்துவமான ஆளுமையை கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் 4×4 தானியங்கி பரப்புகையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.டொயோட்டா இன்னோவா காரினை தொடர்ந்து பார்ச்சூனர் காருக்கும் புது தெம்பினை புகுத்தியுள்ளனர். கடந்த வருடம் 4×2 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டு விற்பனைக்கு வந்த பார்ச்சூனர் தற்பொழுது 4×4 ஏடி விற்பனைக்கு வந்துள்ளது.பிரிமியம் எஸ்யூவி சந்தையில் முதன்மையாக விளங்கி வரும் ஃபார்ச்சூனர் கார் பல சிறப்புகளை பெற்ற எஸ்யூவியாக திகழ்கின்றது. புதிய 4×4 யில் 17 இன்ச் கருப்பு கிரே ஆலாய் வீல், பிளாக் இன்டிரியர், தொடுதிரை அமைப்பு மேலும் நேவிகேஷன் மற்றும் குரல் வழியாக இயக்கலாம்.3.0 லிட்டர் என்ஜினில் மாற்றங்கள் இல்லை. இரு காற்றுபைகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும் அவை ப்ரோன்ஸ் மெட்டாலிக் மற்றும் ஸ்ல்வர் மெட்டாலிக் ஆகும்.ஃபார்ச்சூனர் 2.5 லிட்டர் என்ஜின்2.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷனிலும் ஃபார்ச்சூனர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த என்ஜின் ஆப்ஷனில் டிஆர்டி…
டொயோட்டா கார் நிறுவனத்தின் இன்னோவா எம்பிவி காரினை இந்தியாவில் அறிமுகம் செய்து 10 வருடங்களை கடந்துள்ளதால் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பினை விற்பனைக்கு கொண்டு வந்த விலை உயர்த்தியுள்ளது.இன்னோவா கார் விலை உயர்வுடொயோட்டா இன்னோவா காரினை போல மிக சிறப்பான சொகுசு வசதி கொண்ட எம்பிவி காரை இந்திய சந்தையில் கண்டுபிடிப்பதே அரிதாக உள்ள நிலையில் இன்னோவா காரின் விலை மேலும் மேலும் உயர்ந்து வருகின்றது.பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து இன்னோவா மாடல்களிலும் காற்றுப்பைகளை நிரந்தரமாக்கியுள்ளனர். மேலும் புதிய கருப்பு கிரே என இரு வண்ண ஆலாய்வீல், மரவேலைப்பாடு மிக்க ஸ்டீயரியங், புதிய லெதர் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.மேலும் வரி சலுகையை அரசு ரத்து செய்துள்ளதாலும் கூடுதலான விலை உயர்வினை பெற்றுள்ளது.இன்னோவா வரையறுக்கபட்ட பதிப்பு10 வது வருடத்தினை கொண்டாடும் வகையில் சிறப்பு எடிசனை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு எடிசனில் உள்ள அம்சங்கள் தொடுதிரை ஆடியோ அமைப்பு, முகப்பு விளக்கு குரோம் பூச்சு, பின்புற…
ஐஷர் மற்றும் போலாரிஸ் நிறுவணங்கள் இணைந்த விவசாயத்திற்க்கு தேவையான இடுபொருட்களை எடுத்து செல்லக்கூடிய வகையில் இலகுரக டிரக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.சிறிய ரக டிரக்கள் மிக குறைவான விலையிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும் வகையில் உருவாக்க உள்ளனர்.ஐஷர் மற்றும் போலாரிஸ் இணைந்து ரூ.250 கோடி முதலீட்டில் தொடங்க உள்ளனர். ஆண்டிற்க்கு 10000 முதல் 12000 வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளனர்.600சிசி க்ரீவஸ் காட்டன் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. விவசாய பயன்பாட்டிற்க்கு தயாரிக்கப்படும் இலகுரக டிரக் என்பதால் மிகுந்த வரவேற்பினை பெற வாய்ப்புள்ளது.