ஃப்யட் கிறைசலர் குழுமத்தின் அங்கமான ஜீப் எஸ்யூவி கார்கள் இந்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதால் முதற்கட்டமாக 15 டீலர்களை திறக்க திட்டமிட்டுள்ளனர்.2015 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 15 டீலர்களை திறக்க உள்ளதாக முதலில் முழுவதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் வருங்காலத்தில் இந்தியாவிலே பாகங்களை இறக்குமதி செய்து கட்டமைக்க ஃபியட் திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக ஜீப் செரோக்கீ மற்றும் ரேங்கலர் மாடல் கார்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
Author: MR.Durai
மெர்சிடிஸ்-பென்ஸ் தானியங்கி காரின் மேலும் சில டீசர் படங்களை மெர்சிடிஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தானியங்கி காரின் புதிய படங்களில் முகப்பு லோகோ மற்றும் உட்புறத்தினை வெளியிட்டுள்ளது.ஓட்டுனர் இல்லா தானியங்கி காரில் பல்வேறு நவீன வசதிகளை மற்றும் மிக அகலமான தகவமைப்புகளை பெற்று விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் அறிய; மெர்சிடிஸ்-பென்ஸ் தானியங்கி கார்
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் அடுத்த தலைமுறை மாடல் 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில் 7 சீரிஸ் படங்கள் இனையத்தில் வெளியாகியுள்ளது.பாதுகாப்பிற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட மாடலான 7 சீரீஸ் காரில் வரவிருக்கும் புதிய தலைமுறையிலும் மிக அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்தாக தெரிகின்றது.மிக நேர்த்தியான முகப்பு விளக்குளை பெற்றுள்ளது. டேஸ்போர்டு புதியவையாக இருக்கின்றது மேலும் ஐ டிரைவ் கட்டுபாட்டினை பெற்றுள்ளது. செல்ஃப் பார்க்கிங் கீ உதவியுடன் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளனர்.பிஎம்டபிள்யூ ஐ8 காரை போல கார்பன் ஃபைபரால் உருவாக்கப்படுவதால் தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட 150கிலோ வரை குறைவான எடையை கொண்டிருக்கும்.மூன்று விதமான என்ஜின் வகைகளில் கிடைக்கும். மேலும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப ஹைபிரிட் மாடலும் கிடைக்கும்.ஆதாரம்;autoweek.nl
பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. மிக குறைவான எடை கொண்ட ஐ8 கார் மிக சிறப்பான பெர்பாஃர்மன்ஸ் காராக விளங்குகின்றது.முழுதாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படுவதால் ஐ8 காரின் விலை ரூ. 2 கோடியாக இருக்கும் மிக நேர்த்தியான தோற்றத்தினை பெற்றுள்ள ஐ 8 கார் கார்பன் ஃபைபரால் உருவாக்கி உள்ளதால் இதன் எடை வெறும் 1485 கிலோ மட்டுமே.1.5 லிட்டர் பெட்ரோல் விசைப்பொறி மற்றும் மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் 228பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மேலும் எலக்ட்ரிக் மோட்டார் 129பிஎச்பி ஆற்றல் தரவல்லதாகும், இரண்டும் இனைந்து 357 பிஎச்பி ஆற்றலை தரும்.எலக்ட்ரிக் மோட்டார் மூலம் மட்டுமே 37கிமீ பயணிக்க முடியும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்ல முடியும்.0-100கிமீ வேகத்தினை வெறும் 4.4 விநாடிகளில் எட்டிவிடும். வரையறுக்கபட்ட உச்சகட்ட வேகம் மணிக்கு…
உலகின் மிக சிறந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கு தனிமதிப்பு உள்ள நிறுவனமாகும். எதிர்கால உலகத்தினை கருத்தில் கொண்டு தானியங்கி காரின் டீசர் படத்தினை வெளியிட்டுள்ளது.மெர்சிடிஸ்-பென்ஸ் தானியங்கி கார்தானியங்கி கார்களின் மீது நிறுவனங்கள் தனி கவனத்தினை செலுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தானியங்கி காரின் டீசரை வெளிப்படுத்தியுள்ளது.சென்சார்கள் மற்றும் கேமாராவின் உதவியுடன் நாம் செல்ல நினைக்கும் இடத்திற்க்கு அழைத்து செல்லும் கார்தான் தானியங்கி கார்களாகும்.மெர்சிடிஸ்-பென்ஸ் வெளியிட்டுள்ள டீசர் படத்தில் மிக நவீன எரோடைனமிக்ஸ் நுட்பத்தால் உருவாக்கப்படும். மேலும் பல நவீன பொழுதுபோக்கு வசதிகளை பெற்ற காராக விளங்கும். ஜனவரி 6 முதல் 9 வரை நடக்கவுள்ள 2015 கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் மெர்சிடிஸ் தானியங்கி கார் காட்சிக்கு வரவுள்ளது.முதன்முதலாக சென்சார்கள், கேமரா போன்றவற்றின் உதவியுடன் இயங்கும் கூகுள் தானியங்கி காரினை பிரபல இனையதளமான கூகுள் முதலில் உருவாக்க தொடங்கியது. தற்பொழுது இந்த கார் சோதனை ஓட்டத்தில் உள்ளதுமேலும் அறிய; கூகுள்…
மஹிந்திரா கார் பிரிவில் வரும் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம்.இந்தியாவின் முதன்மையான யூட்டலிட்டி கார் தயாரிப்பு நிறுவனம் மஹிந்திரா ஆகும்.1. மஹிந்திரா பொலிரோஇந்தியாவிலே அதிகம் விற்பனையாகும் எம்யூவி கார் பொலிரோ தான் குறைந்தபட்ச மாதம் 9000 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றது. புதிய தளத்தில் உருவாகி வரும் பொலிரோ தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ளது. ஸ்கார்பியோ போல பொலிரோ எம்யூவி காரும் புதிய அடிச்சட்டம் முற்றிலும் மாறுபட்ட முகப்பு என உயர்வு பெற்றுள்ளது. மேலும் 4 மீட்டருக்குள் இருக்கலாம்.2. மஹிந்திரா எக்ஸ்யூவி 500மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் சோதனை ஓட்டத்தில் உள்ளது. மேலும் தானியங்கி கியர்பாக்ஸ் பெற்று விற்பனைக்கு வரலாம் மேலும் புதிய வேரியன்ட் மற்றும் ஹைபிரிட் மாடல் மேலும் சிறிய வெளிப்புற தோற்றங்களில் மாறுதல் பெற்றிருக்கும்.3. மஹிந்திரா குவான்டோகுவான்டா கார் விற்பனையில்…