Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

கூகுள் நிறுவனத்தின் தானியங்கி கார் விரைவில் சோதனை ஓட்டம் நடத்த உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. எவ்விதமான இயக்க கருவிகளும் இல்லாம்ல் கேமிரா மற்றும் சென்சார் மூலம் இயங்கும் முழுமையான தானியங்கி காராகும்.கூகுள் தானியங்கி காரின் அமைப்புஆட்டோமொபைல் துறையில் புதிய பரினாமத்தில் உருவாகி வரும் தானியங்கி கார்களில் ஸ்டீரியங், பிரேக் பெடல், ஆக்சிலேட்டர் போன்ற எவ்விதமான பாகங்களும் இல்லாமால் தன்னை தானே இயக்கிக் கொள்ளும் முழுமையான தானியங்கி காரினை வடிவமைத்துள்ளனர்.ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பொத்தான்களை மட்டுமே கொண்டிருக்கும். நாம் செல்ல வேண்டிய கூகுள் வரைபடத்தின் மூலம் தேர்வு செய்தால் போதுமானது தானாகவே வழியினை தேர்வு செய்து கொண்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்க்கு கூகுள் தானியங்கி கார் செல்ல உதவும்.ஸ்மார்ட்போன்களை போல இந்த தானியங்கி கார்களை புழக்கத்தில் கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளது.Google self-driving car in test drive

Read More

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ரிவர்ஸ்யில் மட்டுமே தனது ஃபியட் பத்மினி காரினை இயக்கி வருகிறார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹரப்ரீத் தேவி 33 வயதாகும் இவர் கடந்த 11 வருடங்களாக ரிவர்ஸ் கியரில் மட்டுமே காரை இயக்குகிறார்.சாதரணமாகவே நாம் கார் மற்றும் பைக்கினை இயக்குவது சிரமமாக இருக்கையில் ரிவர்ஸ் கியரில் எப்படி வாகனத்தை ஓட்டுகிறார். இவர் தன்னுடைய பத்மினி காரினை பின்புறத்தில் 4 கியரை மாற்றிவிட்டு முன்புறத்தில் செல்ல 1 கியரை மட்டுமே வைத்துள்ளார்.இவருடைய காரில் சைரனையும் பொருத்தியுள்ளார். அவர் பின்புறமாக இயக்குபவர் என்பதனை அறிந்து கொள்ளவதற்க்கு மேலும் பின்புறத்தில் முகப்பு விளக்கினை மாற்றியமைத்துள்ளார்.வாரத்தில் மூன்று முறை ரிவர்ஸ்யில் ஓட்டுவதற்க்கு சிறப்பு அனுமதியை மாநில அரசு அளித்துள்ளது. [youtube https://www.youtube.com/watch?v=aox_4-JNed8]

Read More

இந்தியாவில் ரெனோ நிறுவனம் புதிய லாட்ஜி எம்பிவி காரினை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்பொழுது சோதனை ஒட்டத்தில் உள்ள லாட்ஜி எம்பிவி வரும் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும்.லாட்ஜி எம்பிவி பற்றி சில முக்கிய விபரங்களை ரெனோ வெளியிட்டுள்ளது. சிறப்பான தோற்றத்தினை கொண்டுள்ள ரெனோ லாட்ஜி எம்பிவி பல கார்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் குறிப்பாக எர்டிகா மற்றும் மொபிலியோ போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.லாட்ஜி காரில் 1.5 லிட்டர் கே9கே டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 85 பிஎச்பி ஆகும். மேலும் டஸ்ட்டர் காரில் உள்ள பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரலாம்.வரும் மார்ச் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம். லாட்ஜி எம்பிவி காரின் விலை ரூ8-11 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

Read More

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரே, ரே இசட் மற்றும் ஆல்ஃபா போன்ற ஸ்கூட்டர்களை தொடர்ந்து டி’எலைட் ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.டி’எலைட் ஸ்கூட்டர் பழமையான தோற்றத்தில் உள்ள ஸ்கூட்டராகும். இந்த ஸ்கூட்டர் ஐரோப்பா நாடுகளில் விற்பனையில் உள்ளது. பழமையான தோற்றத்தினை கொண்ட ஸ்கூட்டரான வெஸ்பாவுக்கு சவாலாக விளங்கும்.ஐரோப்பாவில் 114சிசி விசைப்பொறி பயன்படுத்தியுள்ளனர். இதே விசைப்பொறியுடன் இந்தியா வருவதற்க்கான வாய்ப்பில்லை. ரே ஸ்கூட்டரில் உள்ள என்ஜின் பயன்படுத்தப்படலாம்.அதிகப்படியான இடவசதி கொண்ட ஸ்கூட்டராக விளங்கும். டி’எலைட் ஸ்கூட்டர் விலை ரூ.55000 இருக்கலாம்.

Read More

ஜப்பானை சேர்ந்த டெர்ரா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் மூன்று சக்கர எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை அறிமுகம் செய்துள்ளது.டெர்ரா ஆர்6 ஆட்டோரிக்ஷா 1+6 என மொத்தம் 7 நபர்கள் பயணிக்க முடியும்.ஆர்6 எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 100கிமீ வரை பயணிக்கலாம். இதன் மொத்த எடை 278 கிலோ ஆகும் இதன் பேட்டரியின் எடை 150கிலோ ஆகும். 48V 100Ah பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.டெர்ரா ஆர்6 நீளம் 2950மிமீ அகலம் 1090மிமீ மற்றும் 1800மிமீ ஆகும். ட்ரம் பிரேக் பொருத்தியுள்ளனர். வரும் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வர உள்ள டெர்ரா ஆர்6 ஆட்டோரிக்ஷா சிறந்த வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கலாம்.

Read More

4 வது வருட பேருந்து மற்றும் சிறப்பு வாகன கண்காட்சி வரும் 2015 ஜனவரி 15 முதல் 17 வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மாடர்ட்டில் நடைபெற உள்ளது.பஸ் மற்றும் சிறப்பு வாகன கண்காட்சியில் புதிய பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் ஹைபிரிட் பேருந்துகள், கஸ்டமைஸ் பஸ், பள்ளி பேருந்துகள் இலகுரக வாகனங்கள், எஸ்யூவி, எம்யூவி, வேன், பிக்அப் டிரக் மற்றும் கனரக வாகனங்கள் காட்சி மற்றும் அறிமுகம் செய்ய உள்ளனர்.மேலும் இந்த கண்காட்சியில் வங்கி கடன், டயர், டீயூப், பேட்டரி மற்றும் பேருந்து சார்ந்த உதிரிபாகங்கள் காட்சிக்கு வைக்கபடும்.பேருந்து மற்றும் சிறப்பு வாகன கண்காட்சியை சியாம் வழங்குகின்றது.

Read More