Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹூண்டாய் ஐ10 காரினை டாக்சி சந்தையில் களமிறக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் சான்ட்ரோ காரின் உற்பத்தியை நிறுத்த உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கிராண்ட் ஐ10 காரின் வரவிற்க்கு பின்னர் ஐ10 காரின் விற்பனை சற்று பின்தங்கியுள்ளது. மேலும் சான்ட்ரோ டாக்சி சந்தையில் பெற்ற மதிப்பினை ஐ10 காரை கொண்டு ஈடுகட்ட உள்ளனர்.ஐ10 பேஸ் மாடல் டாக்சி மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும். இந்த மாடலானது பவர் ஸ்டீரியங், ஏசி போன்ற வசதிகள் இருக்காது. சிஎன்ஜி கிட் ஆப்ஷனலாக பொருத்தி தரப்படும்.மும்பை, டெல்லி, கோல்கத்தா மற்றும் பெங்களூரூ போன்ற நகரங்களில் முதல்கட்டமாக விற்பனைக்கு வரவுள்ளது.

Read More

2015 ஆம் ஆண்டின் சிறந்த கார் மற்றும் சிறந்த பைக்களுக்கான விருதினை ஜேகே டயர் நிறுவனமும் இந்தியாவின் மிக பிரபலமான ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் கொண்ட குழுவினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.2015ம் ஆண்டின் சிறந்த காராக ஹூண்டாய் எலைட் ஐ20 காரும், சிறந்த பைக்காக ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 தேர்வாகியுள்ளன.சிறந்த கார் (ICOTY-Indian Car of the year) மற்றும் சிறந்த பைக் (IMOTY-Indian Motorcycle of the year) போன்றவற்றை அதன் வடிவமைப்பு, சொகுசு, எரிபொருள் சிக்கனம், கையாளும் திறன், சிறந்த நுட்பங்கள், விலை போன்ற முக்கியமான காரணிகளை கொண்டு தேர்வு செய்யப்படுகின்றது.இம்முறை சிறந்த கார் ஹூண்டாய் எலைட் ஐ20 வென்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதினை பெறுகின்றது. கடந்த வருடம் சிறந்த காராக ஹூண்டாய் கிராண்ட ஐ10 வென்றது.சிறந்த பைக் ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 மிகவும் திறன் மிகுந்த பைக்கான ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட்…

Read More

இந்தியாவில் தயாரிக்கப்படும் பல கார்கள் கிராஷ் டெஸ்ட் எனப்படும் பாதுகாப்பிற்கான சோதனையில் பூஜ்யத்தினை பெற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்திய கார்களில் பாதுகாப்பு இல்லையா ? ஏன் ..ஓர் சிறப்பு அலசல்இந்தியாவில் மிகவும் பிரபலமான கார்கள் பல பூஜ்ய தரத்தினை கொண்டிருப்பதாகவே சில முக்கிய கிராஷ் டெஸ்ட் சோதனை சமீபத்தில் உறுதி செய்துள்ளது.கிராஷ் டெஸ்ட் என்றால் என்ன ?கிராஷ் டெஸ்ட் என்றால் வாகனத்தினை நேரடியாக வாகனத்தின் முன்பறத்தினை குறிப்பிட்ட வேகத்தில் சுவற்றில் மோத செய்து அவற்றின் சேதத்தினை வைத்து அந்த காரின் தர மதிப்பினை கணக்கீடுவார்கள். மேலும் பக்கவாட்டிலும் மோதி சோதனை செய்வர்.அமெரிக்க விதிகளின் படி ஒரு கார் குறைந்தபட்ச வேகமாக மணிக்கு 56 கிமீ வேகத்தில் முன்புறத்திலும் பக்கவாட்டில் கதவுகளில் 50 கிமீ வேகத்திலும் மோதி சோதிப்பார்கள். ஆனால் யூரோ விதிப்படி மணிக்கு 64கிமீ வேகத்தில் முகப்பில் மோதுவார்கள்கார்களின் இருக்கைகளில் மனிதனை போன்ற டம்மிகளை வைத்து சோதனை செய்யப்படும். டம்மிகளுக்கான அடிப்படும் விதம்…

Read More

ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிபி யூனிகார்ன் 160 பைக்கினை ரூ.69,350 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய யூனிகார்ன் டிரிக்கர் பைக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.யூனிகார்ன் 160 பைக்கினை மிகவும் நேர்த்தியான ஸ்போர்டிவான அமைப்புடன உருவாக்கியுள்ளனர்.மிகவும் கவர்ச்சிகரமான இன்ஸ்டுரூமென்டல் பேனல் பெற்றுள்ளது.புதிய யூனிகார்ன் மிகவும் சக்திவாய்ந்த 160சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 14.5பிஎச்பி மற்றும் டார்க் 14.61 ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 106 கிமீ ஆகும்.எச்இடி நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள யூனிகார்ன் என்ஜின் லிட்டருக்கு 62கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.யூனிகார்ன் 160 பைக்கில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும் பின்புறத்தில் மோனோசாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.நான்கு விதமான வண்ணங்களில் கிடைக்கும். அவை வெள்ளை, கருப்பு, கிரே மற்றும் சிகப்பு ஆகும்.ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 விலை(ex-showroom delhi)ஹோண்டா சிபி…

Read More

கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அதிகம் தேடப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார்கள் மற்றும் நிறுவனங்களை கானலாம்.அதிகம் தேடப்பட்ட கார்கள்;முதலிடத்தில் ஹோண்டா மொபிலியோ பெற்றுள்ளது. இந்தியளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்பிவி காரான மொபிலியோ மிகவும் சிறப்பான காராக வலம் வருகின்றது. இரண்டாமிடத்தில் செவ்ர்லே ஸ்பார்க், மூன்றாமிடத்தில் நம்முடைய விருப்பமான மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி உள்ளது.1. ஹோண்டா மொபிலியோ2. செவர்லே ஸ்பார்க்3. மஹிந்திரா ஸ்கார்பியோ4. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்5. லம்போர்கினி (ஹாரோகேன் மற்றும் அவான்டேட்டர்)6. ஹூண்டாய் எக்ஸ்சென்ட்7. டாடா ஜெஸ்ட்அதிகம் தேடப்பட்ட பிராண்டு1. ஹோண்டா2. மாருதி சசுகி3. ஹூண்டாய்4. செவர்லே5. ஆடி6. ஃபோர்டு7. நிசான்மேலும் பல்வேறுவிதமான கூகுள் டிரென்டை அறிய;டிரென்ட்

Read More

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரில் எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாயில் துருப்பிடிப்பதற்க்கான வாய்ப்புகள் இருப்பதனால் அதற்க்கு பதிலாக புதிய குழாய் பொருத்தி தர உள்ளனர்.கடந்த ஜனவரி 2013 முதல் செப்டம்பர் 2014 வரை விற்பனை செய்யப்பட்ட 20,752 கார்களில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்களில் காற்றுப்பைகள் விரிவடைவதில் உள்ள பிரச்சனைகளையும் சோதனை செய்ய உள்ளனர்.மேலும் உங்கள் ஈக்கோஸ்போர்ட் காரில் பிரச்சனை உள்ளதா என தெரிந்து கொள்ள கீழே உள்ள இனைப்பில் உங்கள் வாகனத்தின் விண் நெம்பரை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.https://www.india.ford.com/owner

Read More