Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

தங்கம் விற்கின்ற விலையில் தங்கத்தினால் சைக்கிள் செய்து அசத்தியுள்ளது இங்கிலாந்தை சேர்ந்த கோல்ட்ஜெனி நிறுவனம் தங்கத்தால் மதிவண்டியை இழைத்துள்ளது.கோல்ட்ஜெனி நிறுவனம் தங்கத்தினால் இழைக்கப்பட்ட பல பொருட்களை செய்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன், கடிகாரம், ஐ-பாட்ஸ் ஐ-போன் போன்றவற்றை தங்கம், காப்பர், குரோம்,பிளாட்டினம் போன்றவற்றை பயன்படுத்தி வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப தயாரிக்கின்றது.24 கேரட் தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த சைக்கிளின் விலை ரூ,2.47 கோடியாகும். அதாவது பல சொகுசு கார்களின் விலையை விட அதிகம்.மேலும் வைரம், பிளாட்டினம் போன்றவற்றால் உருவாக்க வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப தயாரிக்க உள்ளனராம்.தகவல்;dailymail.co.uk

Read More

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை குஜாராத் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த காரை குஜாராத்தின் கோல்டன் ஏரோஸ் வயர்லெஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்தியாவிலே உருவாகியுள்ள முதல் சூற்றுசூழல் ஸ்போர்ட்ஸ் காராகும். இந்த காரின் பெயர் சூப்பர் நோவா எலக்ட்ரிக் வாகனம்(super nova electric vehicle). இந்த காரானது 1000கிமீ வரை சிங்கிள் சார்ஜ் மூலம் செல்லக்கூடியதாம். இந்த காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 150கிமீ ஆகும்.சூப்பர் நோவா காரில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொடுத்துள்ளனர். அவை லெட்-ஆசிட், லித்தியம் -ஐன் மற்றும் சூப்பர் கேப்பாசிட்டர் ஆகும். இவற்றில் லெட் பேட்டரி சார்ஜ் ஆக 8 மணி நேரமும், லித்தியம் 2 மணி நேரமும், மற்றும் சூப்பர் கேப்பாசிட்டர் 5 நிமிடத்தில் சார்ஜ் ஆகுமாம்.வரும் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள சூப்பர் நோவா எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இன்னும் ஆராய்…

Read More

ஸ்கோடா சூப்பர்ப் காரின் அடுத்த தலைமுறையின் முதல் படத்தினை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மூன்றாம் தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் கார் வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வர உள்ளது.போக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபீ தளத்தில் உருவாகியுள்ள சூப்பர்ப் விற்பனையில் உள்ள மாடலை விட 75கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. சிறப்பான கட்டுமானத்தில் உருவாகியுள்ள சூப்பர்ப் கார் பல நவீன வசதிகளை தாங்கி இருக்கும்.1.4 மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.6 மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் விற்பனைக்கு வரும். அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.இது ஸ்கோடா சூப்பர்ப் சோதனை படம்

Read More

நானோ காரினை அனைவருக்கும் தெரியும் 1 லட்சத்தில் விற்பனைக்கு வந்த நானோ கார் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் முழுமையான வரவேற்பினை பெற தவறிவிட்டது.கோவையை சேர்ந்த ஜேஏ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நானோ காரினை சூப்பர் நானோவாக மாற்றி அமைத்துள்ளனர். இதற்காக ரூ.25 லட்சத்தினை செலவிட்டுள்ளனர். மேலும் இந்த சூப்பர் நானோ ரேஸ் டிராக்கில் மட்டுமே இயக்க முடியும்.1.3 லிட்டர் என்ஜினை பொருத்தியுள்ளனர். இதன் உச்சகட்ட ஆற்றல் 230பிஎச்பி ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 190கிமீ ஆகும். மேலும் வெளிப்புற தோற்றத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர். குறிப்பாக முகப்பு விளக்கு, பின்புற மற்றும் முன்புற பம்பர்களை மாற்றியமைத்துள்ளனர்.சூப்பர் நானோ காரினை ஆட்டோமொபைல் ஆர்வலர்களை கவனிக்க வைத்துள்ளது. ஆட்டோகார் பெர்ஃபார்மன்ஸ் ஷோவில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

Read More

இன்ஃபினிட்டி க்யூ60 காரின் முதல் டீசல் வெளிவந்துள்ளது. வரும் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வர உள்ள நிலையில் முதல் டீசரை வெளியிட்டுள்ளனர்.க்யூ60 காரின் டீசர் ஆனது க்யூ30 மற்றும் க்யூ80 போன்ற கார்களின் அடிப்படையில் வெளிவர உள்ளதாக தெரிகின்றது. மிக சிறப்பான நவீன வடிவமைப்பினை இந்த கார் பெற்றிருக்கும். 2 டோர் கொண்ட கூபே ரக காராக விளங்கும்.5 ஸ்போக் ஆலாய் வீல் பெறலாம்.இதன் உறபத்தி நிலை மாடலானது ஜனவரி 12யில் தொடங்க உள்ள டெட்ராய்ட் ஷோவில் காட்சிக்கு வைக்க உள்ளனர். மேலும் இன்ஃபினிட்டி க்யூ60 கார் 2016 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்

Read More

புதிய ஆடி க்யூ7 காரின் படங்கள் மற்றும் முழுமையான நுட்ப விவரங்களை ஆடி வெளியிட்டுள்ளது. புதிய ஆடி க்யூ7 காரில் பல புதிய வசதிகளை கொண்டிருக்கும் க்யூ7 வரும் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வர உள்ளது.2015 ஆடி க்யூ7 போக்ஸ்வேகன் குழுமத்தின் எம்எல்பி பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள மாடலை விட 325 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நீளம் மற்றும் அகலத்தினை குறைத்துள்ளது. எடை மற்றும் அளவுகளை குறைத்திருந்தாலும் கட்டமானத்தில் முன்பை விட உறுதியாகவும் உட்ப்புற இடவசதியும் மேம்படுத்தியுள்ளது.இலகுவான அலுமினிய அடிசட்டத்தினை கொண்டு வடிவமைத்துள்ள காரணத்தால் அடிசட்டத்தில் மட்டும் 100கிலோ எடையை குறைத்துள்ளது. மேலும் சஸ்பென்ஷன் அமைப்பில் 71கிலோ மற்றும் கதவுகளில் 24 கிலோவினை குறைத்துள்ளது.புதிய க்யூ7 காரில் நீளம் 5050மிமீ , அகலம் 1970மிமீ மற்றும் உயரம் 1740 ஆகும். மேலும் வீல்பேஸ் 2990மிமீ ஆகும். முந்தூய மாடலைவிட 37மிமீ நீளத்தையும், அகலம் 15 மிமீ குறைத்துள்ளனர்.…

Read More