டாடா நிறுவனத்தின் புதிய பாதைக்கு அடிப்படையாக அமைய உள்ள டாடா போல்ட் காரின் சிறப்புகள் மற்றும் தனித்தன்மையை கானலாம்.டாடா நிறுவனத்தின் கார் விற்பனை சற்று சரிவினை கண்டு வந்த நிலையில் ஜெஸ்ட் செடான் காரின் அறிமுகத்தின் மூலம் ஈடுகட்டி வருகின்றது. ஜெஸ்ட் செடான் காரின் அடிப்படையாக கொண்ட போல்ட் ஹேட்ச்பேக் கார் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. போல்ட் காரின் வரவு மாருதி ஸ்விஃப்ட், போலோ, புன்டோ எவோ, கிரான்ட் ஐ 10 போன்ற கார்களுக்கு நேரடியான சவாலினை தரவுள்ளது.போல்ட் எஞ்சின்போல்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும்.1.2 லிட்டர் ரெவட்ரான் ட்ர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 90பிஎஸ் மற்றும் டார்க் 140என்எம் ஆகும். 5 ஸ்பீடு மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இவற்றில் மூன்று விதமான டிரைவிங்கினை பெற்றுள்ளது. அவை ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகும். 1.3 லிட்டர் குவாட்ராஜெட் டீசல் எஞ்சின்…
Author: MR.Durai
போர்ஷே நிறுவனத்தின் கேயேன் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேயேன் எஸ்யூவி காரில் வடிவத்தில் சில மாற்றங்களும் புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.புதிய போர்ஷே கார் டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலைவிட கூடுதலான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் என்ஜின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.4 விதமான வித்தியாசத்தில் போர்ஷே கேயேன் கிடைக்கும். அவை பெட்ரோல் மாடலில் கேயேன் எஸ் மற்றும் கேயேன் டர்போ ஆகும். டீசல் வகையில் பேஸ் மற்றும் கேயேன் எஸ் கிடைக்கும்.பெட்ரோல் என்ஜின் விபரம்1. கேயேன் எஸ் வகை காரில் 3.6 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 420எச்பி மற்றும் முறுக்குவிசை 550என்எம் ஆகும்.2. கேயேன் எஸ் வகை காரில் 4.8 லிட்டர் பை-டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 520எச்பி மற்றும் முறுக்குவிசை 750என்எம் ஆகும்.டீசல் என்ஜின் விபரம்1. கேயேன் பேஸ் டீசல் வகையில் 3.0 லிட்டர்…
டொயோட்டா நிறுவனத்தின் 11வது தலைமுறை கரோல்லா அல்டிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அடிப்படை மாடலான ஜெ(எஸ்) ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.கரோல்லா அல்டிஸ் புது விதமான வடிவமைப்பில் நேர்த்தியான கட்டமைப்பில் உருவாகியுள்ள அல்டிஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜினிலும் கிடைக்கும்.கரோல்லா அல்டிஸ் பெட்ரோல் மாடலில் 1.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 138எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். பெட்ரோல் காரில் 6 வேக மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 வேக சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.கரோல்லா அல்டிஸ் டீசல் காரில் 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 87எச்பி ஆகும். 6 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.கரோல்லா அல்டிஸ் பெட்ரோல் மாடல்1.8 ஜெ(எஸ்) – ரூ.11.99 லட்சம்1.8 ஜி – ரூ.13.74 லட்சம்1.8 ஜி (ஆட்டோ)- ரூ.15.04 லட்சம்1.8 ஜிஎல் – ரூ.15.38 லட்சம்1.8 விஎல்(ஆட்டோ) – ரூ.16.89 லட்சம்கரோல்லா அல்டிஸ் டீசல் மாடல்1.4 ஜெ(எஸ்)…
ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 காரினை ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறிதான வெளிப்புற மற்றும் உட்டப்புற கட்டமைப்பில் மாற்றங்களை தந்துள்ளது.என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. ட்வீன் ட்ர்போசார்ஜ்டு 6.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 563பிஎச்பி ஆகும்.பவர்டெரியினில் மாற்றத்தினை தந்துள்ளது ரெயீத் காரில் உள்ளது போல சாலைகளின் தன்மையை அறிந்த அதற்க்கு ஏற்றார்போல செயல்படும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலைகளின் தன்மையை செயற்கைகோள் உதவிமூலம் அறிந்த இயங்கும்.முகப்பு கிரில் சில மாற்றங்களை சந்தித்துள்ளது. பகல் நேர விளக்குகள், பயனிக்கும் அனைவருக்கும் வைஃபை இனைப்பினை ஏற்ப்படுத்தியுள்ளது. மிக சிறப்பான இருக்கை வசதியினை தந்துள்ளது. எலக்ட்ரானிக் அட்ஜஸ்மென்ட் இருக்கைகளை பெற்றுள்ளது.
உலகின் அதிவேகமான காராக இருந்து வந்த புகாட்டி வேயரான் காரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஹேன்னிஸி வேனோம் கார் படைத்துள்ளது.புகாட்டி வேயரான் கார் 2010 ஆம் ஆண்டில் மணிக்கு 434.4கிமீ வேகத்தினை பதிவு செய்திருந்தது. இதன் சாதனையை ஹேன்னிஸி வேனோம் கார் 435.31 கிமீ வேகத்தினை பதிவு செய்துள்ளது.7 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 1244 எச்பி வரை வெளிப்படுத்தும். குறைந்தபட்சம் 30 கார்களையாவது விற்றால்தான் இந்த சாதனையை தக்கவைத்துக் கொள்ளமுடியும். இதுவரை 11 கார்களை ஹேன்னிஸி வேனோம் ஜிடி விற்றுள்ளது.ஹேன்னிஸி வேனோம் ஜிடி காரின் வீடியோ[youtube https://www.youtube.com/watch?v=gWAavCjVQvM]
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களுக்கும் இலவச சர்வீஸ் முகாமை வரும் மார்ச் 3 முதல் 9 வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.எம்- ப்ளஸ் இலவச முகாமில் 75 விதமான செக் பாயின்ட்களை சோதனை செய்ய உள்ளனர். குறிப்பாக என்ஜின் செயல்திறன், ஏசி, வாகனத்தின் அனைத்து பாகங்களும், எலெக்ட்ரிக் உபகரணங்கள். மேலும் உதிரிபாகங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கவும் உள்ளனர்.இதுகுறித்து மேலும் விவரங்கள் அறியவும் உங்கள் மஹிந்திரா வாகனத்தினை பரிசோதிக்கவும் உங்கள் அருகாமையில் உள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.மஹிந்திரா எம்-ப்ளஸ் கேம்ப் பற்றி மேலும் அறிய தொடர்பு கொள்ள; 1800-209-6006