Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஃபோக்ஸ்வேகன் புதிய என்ஜின் பொருத்தபட்ட வென்டோ ஜிடி மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதி செய்துள்ளது. தற்பொழுது பொருத்தப்பட்டுள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக 1.2 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.1.2 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் போலோ ஜிடி மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே என்ஜின் ஆகும். இதன் ஆற்றல் 103 பிஎச்பி ஆகும். 7 வேக இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.வெளிப்புறம் மற்றும் உட்ப்புற கட்டமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் கிடையாது. ஜிடி என்ற முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை தருவதற்க்காகவே என்ஜினை புதிதாக ஃபோக்ஸ்வேகன் உருவாக்கியுள்ளது

Read More

இந்திய சந்தையில் புதிய உத்வேகத்துடன் ஃபியட் களமிறங்கிய பின்னர் அதிரடியாக லீனியா செடான் காரினை ரூ5.99 லட்சத்தில் லீனியா கிளாசிக் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.தற்பொழுது விற்பனையில் உள்ள லீனியா பேஸ் மாடலை விட ரூ.1 லட்சம் குறைவான விலையில் லீனியா கிளாசிக் வெளிவந்துள்ளது கார் சந்தையில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.15 இஞ்ச் அலாய் வீல்களுக்கு பதிலாக 14 இன்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திசை திருப்பும் சக்கரத்தில் உள்ள கட்டுப்பாடு பொத்தான்கள், ஆடியோ சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், பின்புறம் பவர் விண்டோ போன்ற வசதிகள் இருக்காது.மேலும் ஃபியட் புன்டோ காரில் உள்ளதினை போல டேஸ்போர்டு மாற்றப்பட்டுள்ளது.டீசல் காரில் 1.3 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் காரில் 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபியட் லீனியா கிளாசிக் விலை விபரம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்) ஃபியட் லீனியா கிளாசிக் பெட்ரோல் ரூ.5.99 லட்சம் ஃபியட் லீனியா கிளாசிக் டீசல்–ரூ6.95 லட்சம் ஃபியட் லீனியா கிளாசிக் ப்ளஸ் டீசல்–ரூ.7.51 லட்சம்

Read More

டொயோட்டா கிரிலோஷ்கர் மோட்டார் நிறுவனம் தனது அனைத்து கார்களின் விலையை 1.5 % வரை உயர்த்தியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு சரிந்து வருவதே இதன் காரணமாகும்.டொயோட்டா இன்னோவா காரின் விலை ரூ7000 முதல் 11000 வரை உயர்ந்துள்ளது.எடியோஸ் விலை ரூ.4000 முதல் 8000 வரை உயர்ந்துள்ளது.எடியோஸ் லிவா விலை ரூ.4500 முதல் 8500 வரை உயர்ந்துள்ளது.கரோல்லா அல்டிஸ் விலை ரூ.11000 முதல் 24000 வரை உநர்ந்துள்ளது.இவை அனைத்து டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை உயர்வாகும்.இதுபற்றி டிகேஎம் (டொயோட்டா கிரிலோஷ்கர் மோட்டார் )கூறுகையில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு சரிந்து வருவதனால் மூலப்பொருட்களின் விலை உயர்வினை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ளது.மேலும் இன்னோவா காரின் டாப் மாடலாக புதிய இசட் வேரியன்டினை விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மாடலில் முகப்பு கிரில் மற்றும் பின்புறத்திலும் சில மாற்றங்களை கண்டிருக்கும் விலை தற்பொழுது உள்ள டாப் மாடலை விட ரூ.30000 வரை விலை…

Read More

ஹோண்டா கார் நிறுவனத்தின் பிரியோ காரினை அடிப்படையாக கொண்ட மொபிலியோ எம்பிவி காரினை ஹோண்டா இந்தினோசியாவில் அறிமுகம் செய்துள்ளனர்.பிரியோ அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மொபிலியோ அமேஸ் மற்றும் பிரியோ காரின் முகப்பினை ஏற்றுக்கொள்ளமால் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.மிக சிறப்பான இடவசதியினை கொண்ட காராக மொபிலோ விளங்கும் இதன் நீளம் 4390மிமீ ஆகும். 185மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸை கொண்டிருக்கும். மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள மொபிலியோ வாடிக்கையாளர்களின் மத்தியில் மிக பெரும் வரவேற்பினை பெறும்.இந்தோனேசியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் வெளிவரவுள்ளது. மேலும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.இந்தியாவில் அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவரவுள்ளது.

Read More

ரெனோ டஸ்டர் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மிக சிறப்பான வளர்ச்சியடைந்து வரும் ரெனோ டஸ்டர் மேம்படுத்தப்பட்ட வகையும் வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது.முகப்பு கிரில் பெரிதாக மாற்றமடைந்துள்ளது மேலும் உட்டப்புற கட்டமைப்பிலும் பல மாற்றங்களை தந்துள்ளது. டேஸ்போர்டிலும் மாற்றத்தினை தந்துள்ளது.4 வீல் டிரைவீலும் கிடைக்கும். மேலும் என்ஜின் மாற்றங்கள் இருப்பதற்க்கான உறுதியான தகவல்கள் இல்லை.

Read More

டட்சன் பிராண்டின் கோ ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்ட கோ+ என்ற பெயரில் பல பயன் வாகனத்தை இந்தோனோசியாவில் நிசான் பார்வைக்கு வைத்துள்ளது.7 இருக்கைகளை கொண்ட காம்பெக்ட் எம்பிவி கோ+ மிக சிறப்பான வடிவமைப்பினை கொண்டுள்ளது. மேலும் மிகவும் நேர்த்தியான வடிவம் சிறப்பான இடவசதியினை கொண்டிருக்கும்.3995மிமீ நீளம் மட்டுமே உள்ள இந்த எம்பிவி இந்திய சந்தையிலும் சிறப்பான வரவேற்பினை பெறும் என எதுர்பார்க்கப்படுகின்றது. 4 மீட்டருக்குள் இருப்பதனால் வரி உயர்வினை தவிர்க்க முடியும்.டட்சன் கோ காரில் பயன்படுத்தப்பட்ட உள்ள அதே 1.2லிட்டர் என்ஜினே இதிலும் பொருத்தப்பட உள்ளதாம்.இந்த காரின் விலையும் ரூ 4 முதல் 7 லட்சத்திலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ள கோ ஹேட்ச்பேக்கினை தொடர்ந்து கோ+ எம்பிவி விற்பனைக்கு வரவுள்ளது.

Read More