Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் கார் நாளை விற்பனைக்கு வரவுள்ள நிலையில் கிராண்ட் ஐ10 காரின் பல விவரங்கள் வெளிவந்துள்ளன. சிறிய கார்களின் மத்தியில் கடும் போட்டியை கிராண்ட் ஐ10 ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது.ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 5 விதமான மாறுபட்டவைகளல் கிடைக்கும். அவை எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா ஆப்ஷனல் போன்றவைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. மிகவும் நேர்த்தியான ஃபூளூடியக் டிசைன் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள கிராண்ட் ஐ10 மாபெரும் வரவேற்பினை பெறும்.தற்பொழுதுள்ள ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் உருவாக்கப்பட்டுள்ள கிராண்ட் ஐ10 3765மிமீ நீளமும், 1660மிமீ அகலமும் மற்றும் 1520மிமீ உயரத்தினை கொண்டுள்ளது.ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 83பிஎஸ் மற்றும் டார்க் 114என்எம் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.புதிய 1.1 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.…

Read More

டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் இந்தியாவில் ரூ.29.75 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு விதமான ஆற்றலை கொண்டு செயல்படும் ஹைபிரிட் நுட்பத்தில் டொயோட்டாவின் கை உலகயளவில் ஓங்கிநிற்கின்றது.பெங்களூரில் உள்ள ஆலையில் இதற்க்கான தனி பிரிவில் ஹைபிரிட் கேம்ரி உற்பத்தி செய்யப்படுகின்றது. 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்த்து வெளிப்படுத்தும் ஆற்றல் 205பிஎஸ் ஆகும். எலக்ட்ரானிக் சிவிடி கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.ஹைபிரிட் கேம்ரி லிட்டருக்கு 19.16கிமீ மைலேஜ் தரும் என டொயோட்டா தெரிவித்துள்ளது. 1 கிலோமீட்டருக்கு 122.8 கிராம் கார்பன் வெளிப்படுத்தும். 4 விதமான வண்ணங்களில் கிரே மெட்டாலிக், வெள்ளை பியரல் கிரஸ்டல் சைன், சில்வர் மெட்டாலிக் மற்றும் ஆட்டியூட் பிளாக்.17 இன்ச்ஆலாய் வீல் , 3 விதமான கிளைமேட் கன்ட்ரோல் கொண்ட ஏசி, டிராக்ஸன் கன்ட்ரோல், 4 காற்றுப்பைகள் என பல வசதிகளை கேம்ரி கொண்டுள்ளது.டொயோட்டா ஹைபிரிட் கேம்ரி விலை ரூ29.75 லட்சம்…

Read More

எஸ்யூவி கார்களுக்கான புதிய விதிமுறையை சில மாதங்களுக்கு முன் வெளிவந்த மத்திய பட்ஜெட்டில் மாற்றியமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதாவது 170மிமீ உயரத்திற்க்கு அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட் கார்களை எஸ்யூவியாக வரையறுத்தது.இதுபோன்ற கார்களுக்கு ரூ.30000 வரை வரி உயர்த்தப்பட்டது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது நாட்டின் மிக பெரிய யூட்லட்டி வாகன தயாரிப்பாளாரான மஹிந்திரா நிறுவனம்தான.வரியினை தவிர்க்க மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காருக்கு ஸ்டோன் கார்டு என்ற கவரினை பயன்படுத்தி 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை 160 ஆக குறைத்தது. இதனால் வரி உயர்வில் இருந்து தப்பித்தது.ஆனாலும் மத்திய அரசு விடுவதாக இல்லை மீண்டும் புதிய விதியை வகுக்க திட்டமிட்டுள்ளதாம். அதாவது முழுமையாக நிரப்பட்ட நிலையிலே கிரவுன்ட் கிளியரன்ஸ் அளக்கப்படுகிறது. ஆனால் இந்த விதியை மாற்றி முழுமையாக கட்டமைக்கப்படாதா நிலையில் கிரவுன்ட் கிளியரன்ஸ் அளக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளது.இதனால் பெரிதும் பாதிக்கப்போவது மீண்டும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம்தான் .இந்த திருத்தங்கள் அனைத்தும் மஹிந்திராவுக்கு எதிராகவே…

Read More

டொயோட்டா நிறுவனத்தின் பிராடோ மிக பிராமாண்டமான தோற்றத்தினை கொண்ட எஸ்யூவி காராகும். இந்தியாவில் முழுமையாக கட்டமையக்கப்பட்ட காராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.2009 லேண்ட் குரூஸர் பிராடோக்கு பிறகு தற்பொழுதுதான் அதாவது 2014 பிராடோவில் சில மாற்றங்ளை தந்துள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், மிக பிரமாண்டமான தோற்றதை தரக்கூடிய புதிய கிரில், முகப்பு பம்பர் போன்றவற்றில் மாற்றத்தினை கொண்டுள்ளது.உட்புறத்தில் சென்ட்ரல் கன்சோல் புதிய மீட்டர் வடிவம், மேம்படுத்தப்பட்ட இருக்கைகள் என பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. லேண்ட் குரூஸர் பிராடோ விலை ரூ.97.82 லட்சம் (மும்பை எக்ஸ்ஷோரூம்)

Read More

போலரிஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 என்ற ஆல் டெரரின் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது.875சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 மிக சிறப்பான ஆஃப் ரோடு அனுபத்தினை தரவல்ல ஏடிவி ஆகும். இதன் ஆற்றல் 85எச்பி ஆகும். 4 வீல்களுக்கும் ஆற்றலை கடத்தும்.மிக சிறப்பான வடிவமைப்பினை கொண்டு விளங்கும் ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 ஏடிவி விலை ரூ.24.5 லட்சம் ஆகும். இந்தியாவில் 14 டீலர்கள் மற்றும் 16 போலரிஸ் எக்ஸ்பிரியன்ஸ் இடங்கள் மேலும் 10 ரைடர்ஸ்டாப்ஸ்களை கொண்டுள்ளது.

Read More

ஃபோக்ஸ்வேகன் இந்தியா கிராஸ்போலோ ஹேட்ச்பேக் காரை சில கூடுதலான வசதிகளுடன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டீசல் என்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டுள்ள கிராஸ்போலோ விலை ரூ7.75 லட்சம் ஆகும்.1.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 75 பிஎஸ் மற்றும் டார்க் 180என்எம் ஆகும். 5 வேக மேனுவல் கியர் பாகஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.பல வசதிகள் மற்றும் மாற்றங்களை கிராஸ்போலோ கார் பெற்றுள்ளது. அவை முகப்பு கிரிலில் குரோம் பூச்சூ, புதுவிதமான பம்பர்கள், 5 ஸ்போக் ஆலாய் வீல், சிறப்பான வசதிகளை கொண்ட உட்புறத்தில் 75கிலோ கொள்ளவு உள்ள லக்கேஜ் டிரே, சன் கிளாஸ் வைப்பதற்க்காக குலோவ் பாக்ஸ்யில் தனி அறை போன்றவைகள் உள்ளன.ஏபிஎஸ், காற்றுப்பைகள், இம்மொபைல்சர் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ விலை ரூ. 7.75 லட்சம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Read More