Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

செவர்லே கேப்டிவா கிராஸ்ஒவர் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜெனிவா ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்ட மேம்படுத்திய கேப்டிவா புதிய என்ஜினுடன் விற்பனைக்கு வந்துள்ளது.எவ்விதமான விளம்பரமும் விழாவும் இல்லாமல் தன்னுடைய இணையத்தில் முழுவிபரங்கள் மற்றும் விலையை வெளியிட்டு விற்பனைக்கு வந்துள்ளதை செவர்லே இந்தியா உறுதிசெய்துள்ளது.2013 கேப்டிவா தோற்றத்திலும் என்ஜினிலும் புதிய மாற்றங்களை கண்டுள்ளது. முகப்பில் கிரில், விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் போன்றவற்றில் மாற்றங்கள் பெற்றுள்ளன. மேலும் பின்புறத்தில் உள்ள விளக்குகள் மற்றும் பின்புற பம்பரில் எல்இடி விளக்குகள் உள்ளன. குரோம் பூச்சு கொண்ட இரட்டை எஸ்கேஸ்ட் பைப்புகள் கொண்டுள்ளது.மிகவும் கவர்ச்சியான முகப்பு விளக்குகள், மிக நேர்த்தியாக மேருகேற்றப்பட்ட உட்ப்புற கட்டமைப்பு புதிய டேஸ்போர்டு மற்றும் இன்ஸ்டுருமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது. பின்புற இருக்கைகளையும் கவரும் வகையில் ஏசி வென்ட்கள், 2 டின் ஆடியோ அமைப்பு, பூளூடூத் மூலம் பாடல்களை இயக்கும் வசதிகளை கொண்டுள்ளது.பாதுகாப்பு வசதிகள்6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் , இபிடி, டிசிஎஸ்,…

Read More

ஃபியட் புன்டோ ஸ்போர்ட் 2013 ஹைட்ச்பேக் கார் ரூ. 7.60 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முந்தைய மாடலை விட வெளித்தோற்றத்தில் சில மாற்றங்கள் மற்றும் கருப்பு நிற கூரையை தந்துள்ளத்.இரண்டு விதமான வண்ணங்களில் மட்டுமே வெளிவந்துள்ளது. அவை சிகப்பு மற்றும் வெள்ளை ஆகும். ஸ்போர்ட் பேட்ஜ் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது. பெடல்களில் அலுமினிய பிளேட் பொருத்தியுள்ளனர். ஸ்போர்ட் ஃபுளோர் மேட்ஸ், புகைப்போக்கில் குரோம் பூச்சு தரப்பட்டுள்ளது. வெள்ளை நிற காரில் சிகப்பு நிறத்தினை கொண்ட பின்புற பார்க்கும் கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது. சிகப்பு நிற காரில் வெள்ளை நிறத்தினை கொண்ட பின்புற பார்க்கும் கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது.முன்புறத்தில் காற்றுப்பைகள், இம்மொபைல்சர், ஏபிஎஸ், வேகத்தினை பொருத்து தானாகவே சென்ஸ் செய்து தேவையான ஒலி அளவினை தரவல்ல ஆடியோ அமைப்பினை கொண்டுள்ளது.1.3 லிட்டர் ஃபியட் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 93 பிஎஸ் ஆகும். இதன் 209 என்எம் ஆகும்.…

Read More

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் 15 வருடத்தினை பூர்த்தி செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சிறப்பு எடிசனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.இந்த சிறப்பு எடிசனில் உள்ள புதிய அம்சங்கள் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், பிளாபுங்கட் மியூசிக் சிஸ்டம், பின்புற குரோம் கார்னிஷ், பார்க்கிங் சென்சார், தரை விரிப்புகள், ரியர் சன் பிளைன்டு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.சிறப்பு கொண்டாட்ட எடிசன் ஜிஎல் ப்ளஸ் பெட்ரோல் மாடலில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை 3.81 லட்சம் ஆகும்

Read More

ரெனோ டஸ்டர் காம்பெக்ட் எஸ்யூவி வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பெயரில் ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியண்டில் பின்புற ஏசி வென்ட் நீக்கிவிட்டு மேலும் சில வசதிகளை சேர்த்து ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற வேரியண்ட்டினை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.ஆர்எக்ஸ்இசட் ஆப்ஷன் வேரியண்ட்டை விட ரூ.5000 குறைவான விலையில் புதிய ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் கிடைக்கும். மேலும் இவற்றில் உள்ள கூடுதல் வசதிகள் லெதர் இருக்கைகள், சாட்நவ் நேவிகேஷன் சிஸ்டமும், ஃபாக்ஸ் வுட் பினிஷிங்கும் ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் மாறுபட்டவையில் கிடைக்கும்.ரெனோ டஸ்டர் ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் விலை ரூ.12.13லட்சம்(டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Read More

ஃபோர்டு ஃபிகோ விற்பனைக்கு வந்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை எட்டியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது 37 அயல்நாடுகளிலும் ஃபிகோ விற்பனை செய்யப்படுகின்றது.ஃபோர்டு ஃபிகோ காரின் வளர்ச்சி ஃபோர்டு நிறுவனத்தை தனிப்பட்ட அடையாளத்தை தொடர்ந்து உறுதி செய்து வருகின்றது. மேலும் பல புதிய டீலர்ஷிப்களை திறக்க திட்டமிட்டுள்ளது.வருகிற 2015 ஆம் ஆண்டிற்க்குள் 500 டீலர்ஷிப்கள் மற்றும் சிறப்பான சர்வீஸ் வழங்க திட்டமிட்டுள்ளது.

Read More

ஹூண்டாய் நிறுவனம் ஐ10 மற்றும் ஐ20 காருக்கு இடையிலான காரினை சோதனை செய்து வந்தது. தற்பொழுது அந்த காருக்கான பெயர் மற்றும் படங்களை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என பெயரிடப்பட்டுள்ள இந்த காரனது வருகிற செப்டம்பர் மாத முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கிராண்ட் ஐ10 பெட்ரோல் காரின் விலை ரூ.4 லட்சம் மற்றும் டீசல் காரின் விலை ரூ.5 லட்சத்தில் தொடங்கலாம்.புதிய 1.1 லிட்டர் 3சிலிண்டர் கொண்ட டீசல் என்ஜின் பொருத்த வாய்ப்புள்ளது. இந்த என்ஜின் 70எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும் ஐ10 காரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் கப்பா என்ஜின் பொருத்தப்படலாம்.

Read More