Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மத்திய அரசு குவாட்ரிசைக்கிள் என்ற புதிய பிரிவு வாகனங்களுக்கான அனுமதி வழங்கியுள்ளது. இதற்க்கான தனிப்பட்ட விதிகளை வகுத்துள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 13 முதல் குவாட்ரிசைக்கிள் சாலைகளில் இயங்கும்.குவாட்ரிசைக்கிள் விதிமுறைகள்1. குவாட்ரிசைக்கிள் வாகனங்களில் “Q” வார்த்தை பெரிய அளவுகளில் முன்னால் எழுதியிருக்க வேண்டும்.2. நெடுஞ்சாலைகளில் இயக்ககூடாது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் மட்டுமே இயக்க வேண்டும்.3. குவாட்ரிசைக்கிளின் உச்சகட்ட வேகம் மணிக்கு 70கிமீ மட்டுமே.4. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.5. பயணிகளுக்கான வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து 4 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. மேலும் சரக்கு வாகனத்தில் டிரைவருடன் சேர்த்து 2 நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும்.6. பயணிகளுக்கான குவாட்ரிசைக்கிள் 450கிலோ எடை மட்டுமே இருத்தல் அவசியம் சரக்கு வாகனங்களின் எடை 550 கிலோ மட்டுமே இருக்க வேண்டும்.பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக குவாட்ரிசைக்கிளை விற்பனைக்கு கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து மஹிந்திரா, டாடா, பியாஜியோ போன்ற நிறுவனங்களும் களமிறக்கலாம்.ஆட்டோரிக்‌ஷாவிற்க்கு மாற்றாக…

Read More

மாருதி ஆல்டோ 800 காரின் விஎகஸ்ஐ வேரியண்ட் கூடுதல் வசதிகளுடன் ஜூன் மாதம் விற்பனைக்கு வந்தது. தற்பொழுது காற்றுப்பைகள் ஆப்ஷனலாக விற்பனைக்கு வந்துள்ளது.சென்ட்ரல் லாக்கிங், ஃபுல் வீல் கவர்கள், அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோ, ரியர் ஸ்பாய்லர், ஆகியவை கூடுதலாக விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தன. மேலும் 4 ஸபீக்கருடன் மற்றும் ஸ்டீரியோவுடன் கூடிய யூஎஸ்பி இணைப்பு, இடதுபுற ரியர் வியூ கண்ணாடி, மற்றும் காற்றுப்பைகள்.ஆல்டோ 800 விஎக்எஸ்ஐ வேரியண்டில் காற்றுப்பைகள் ஆப்ஷனலாக பொருத்திக்கொள்ளலாம். இதன் மதிப்பு ரூ.18000 ஆகும். சென்னை விலை ரூ3.93 லட்சம் ஆகும்.

Read More

ஜாகுவார் நிறுவனம் முதல் எஸ்யூவி காரினை களமிறக்க உள்ளது வாகனவியல் துறையினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை தூண்டியுள்ளது. வருகிற பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் தன்னுடைய முதல் எஸ்யூவி காரை பார்வைக்கு வைக்க உள்ளது.ஜாகுவார் எஸ்யூவி காரின் பெயர் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. ஆனால் க்யூ டைப் அல்லது எஸ்க்யூ டைப் என்ற பெயரில் இருக்கலாம். ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.4 வீல் டிரைவ் கொண்டிருக்கும். இதன் என்ஜின் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் 2.0 லிட்டர் ட்ர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும் லேண்ட் ரோவர் எவோக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள 2.2 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

Read More

லம்போர்கினி கல்லார்டோ ஸ்போர்ட்ஸ் காரை சிறிய ரேஸ் காராக மாற்றி லம்போர்கினி வருகிற பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.லம்போ சூப்பர் ட்ரோஃபியா பேஸ் காரில் உள்ள 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் குதிரைதிறன் 570 ஆகும். 6 வேக கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிக எடை குறைவான கார்பன் ஃபைபரால் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மிகவும் எடை குறைவாக இருக்கும்.0-96 கிமீ வேகத்தினை தொட 3.4 நொடிகளை மட்டுமே எடுத்துகொள்கின்றது. லம்போ கல்லார்டோ எல்பி 570-4 ஸ்குவாட்ரா கார்ஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 320கிமீ ஆகும்.

Read More

ரெனோ டஸ்டர் எஸ்யூவியை அடிப்படையாக கொண்ட நிசான் டெரானோ வருகிற ஆகஸ்ட் 20 அறிமுகம் செய்ய உள்ளதை நிசான் உறுதிப்படுத்தியுள்ளது.டஸ்டரை அடிப்படையாக கொண்ட டெரானோ டஸ்டரை விட ரூ.50000 முதல் 75000 வரை கூடுதலான விலையில் இருக்குமாம். டஸ்டரை விட கூடுதலான வசதிகளை டெரானோ கொண்டிருக்கும். வருகிற அக்டோபர் முதல் விற்பனைக்கு வரும்.

Read More

ஹோண்டா அமேஸ் செடான் காரின் காத்திருப்பு காலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் உற்பத்தியை அதிகரிக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது. எனவே இதன் மூலம் மாதம் 5500 கார்கள் வரை தயாரிக்க உள்ளது. தற்பொழுது மாதம் 5000 அமேஸ் கார்களை தயாரிக்கின்றது.கிரேட்டர் நொய்டா ஆலையின் மூன்றாவது ஸ்ஃபிட்டிலும் அமேஸ் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதால் காத்திருப்பு காலம் 5 மாதத்தில் இருந்த மூன்றாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More