Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மாருதி நிறுவனத்தின் மானசேர் ஆலையின் ஆண்டுக்கான டீசல் என்ஜின் உற்பத்தி திறன் 3 லட்சம் ஆகும். தொடர் விற்பனை சரிவின் காரணமாக டீசல் என்ஜின், ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் அதிகப்படியான இருப்பினை குறைக்கும் விதத்தில் உற்பத்தினை தற்காலிகமாக மாருதி நிறுத்தி வைத்துள்ளது.டிசையர் காரின் விற்பனை கடந்த மாதம் 12,258 என சரிவடைந்து மிக பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது மே மாதத்தினை விட 6000 த்திற்க்கு அதிகமாக குறைந்துள்ளது.அதிகப்படியான போட்டி மற்றும் தொடர்ந்து கடந்த 7 மாதங்களாகவே இந்தியாவின் ஒட்டுமொத்த கார் சந்தையே சரிவை பெருமளவு சந்தித்துள்ளது. மேலும் மானசேர் ஆலையின் 200 கான்டராக்ட் தொழிலாளர்களுக்கு காலவரையற்ற விடுப்பினை தந்துள்ளதாம்.

Read More

உலகின் மிக சிறந்த வடிவமைப்புக்கான விருதினை வென்ற ஜாகுவார் எஃப் டைப் கார் இந்தியாவில் ரூ.1.37 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முழுமையான கட்டமைகப்பட்ட கார்களாக எஃப் டைப் இறக்குமதி செய்யப்படுகின்றது.பல்வேறு விதமான நவீன வசதிகளை கொண்டாதாக எஃப் டைப் கார்கள் கிடைக்கும் . இரண்டு விதமான மாறுபட்டவைகளில் இந்தியாவில் எஃப் டைப் கிடைக்கும். அவை வி8 எஸ் மற்றும் வி6 எஸ் ஆகும்.வி6 எஸ்ஜாகுவார் எஃப் டைப் வி6 எஸ் வேரியண்டில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 375பிஎச்பி மற்றும் டார்க் 480என்எம் ஆகும். 8 வேக ஆட்டோமேட்டிக் டபுள் கிளட்ச் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.0-100கிமீ வேகத்தினை தொட 4.9 விநாடிகளில் எட்டிவிடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 275கிமீ ஆகும்.வி8 எஸ்ஜாகுவார் எஃப் டைப் வி8 எஸ் வேரியண்டில்5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 490பிஎச்பி மற்றும் டார்க் 625 என்எம்…

Read More

ஸ்கோடா ரேபிட் காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பு ரேபிட் லீசர் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் ரேபிட் லீசர் கிடைக்கும்.ரேபீட் லீசர் காரில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை நேவிகேஷன் அமைப்பு, ரீயர் பார்க்கீங் சென்சார், 15 இன்ச் ஆலாய்வீல், லெதர் இருக்கை கவர்கள், மற்றும் சிறப்பு பதிப்பு என்ற முத்திரை பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.ஸ்கோடா ரேபிட் லீசர் காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜினில் 6 வேக ஆட்டோ கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.டீசல் என்ஜினில்5வேக கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஸ்கோடா ரேபீட் லீசர் 9.06 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Read More

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஆப்பரிக்கா கண்டத்தில் முதன்முறையாக விற்பனையை தொடங்கியுள்ளது. கென்யாவில் அசெம்பிளிங் ஆலையை திறந்துள்ளது. முதற்கட்டமாக ஸ்பிளென்டர் புரோ, ஹங்க், கிளாமர், மற்றும் கரீஸ்மா போன்ற பைக்களை களமிறக்கியுள்ளது.கென்யாவை சேர்ந்த சமீர் குரூப் நிறுவனத்தினை தனது ஆஸ்தான டிஸ்டீபூட்டராக நியமித்துள்ளது.ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ திரு பவன் முஞ்சால் இது பற்றி கூறுகையில்ஆப்பரிக்கா கண்டத்தில் முதன்முறையாக கென்யாவில் தொடங்கியுள்ளோம். மிக பெரிய வரவேற்பினை ஹீரோ பெறும் என நம்புகிறோம். முதற்கட்டமாக இங்கு அசெம்பிளிங் மட்டுமே செய்து விற்பனை செய்யப்படும்.கடந்த மே மாதத்தில் மத்திய அமெரிக்காவில் விற்பனையை தொடங்கியது. தற்பொழுது ஆப்பரிக்கா மேலும் அடுத்த வாரத்தில் ஐவரி கோஸ்ட் பகுதியில் விற்பனையை ஹீரோ தொடங்கும்.

Read More

பியாஜியோ நிறுவனத்தின் மிக பிரபலமான வெஸ்பா ஸ்கூட்டரில் டாப் வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது.விஎக்ஸ் வேரியண்ட் சிறப்புகள்புதிய விஎக்ஸ் வேரியண்டில் மெட்டாலிக் கீரின் மற்றும் டுவல் டோன் ரெட் மற்றும் பிங்க் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக், மேம்படுத்தப்பட்ட கிளஸ்டர், பிஜி இருக்கை ஆப்ஷன், கிராப் ரெயில் போன்றவை இனைக்கப்பட்டுள்ளன.மேலும் எம்ஆர்ஃஎப் ஸ்போர்ட்ஸ் ஜேப்பர் டீயூப்பலஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது.வெஸ்பா எல்எக்ஸ் வேரியண்ட்டை விட ரூ.11000 கூடுதலான விலையில் இருக்கும். வெஸ்பா விஎக்ஸ் ஸ்கூட்டர் விலை ரூ.71,380 (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

Read More

டொயோட்டா நிறுவனத்தின் மிக பிரபலமான எம்பிவி இன்னோவா கார் 4 லட்சம் என்ற விற்பனை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் குரோம் பூச்சு கொண்ட ஆக்ச்சரீ பேக்கினை ரூ.31000 விலையில் அறிமுகம் செய்துள்ளது.இந்த குரோம் பூச்சு இன்னோவா ஜிஎக்ஸ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். இந்த பேக் அனைத்து டீலர்களிடமும் கிடைக்கும்.கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த இன்னோவா 4லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.

Read More