மாருதி ஸ்விஃப்ட் காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பாக மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் என்ற பெயரில் மாருதி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்விப்ட் ஆர்எக்ஸ் விஎக்எஸ்ஐ மற்றும் விடிஐ என இரண்டு வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.ஸ்விஃப்ட் ஆர்எஸ்யில் நீளம் மற்றும் கருப்பு வண்ணங்களில் பாடி கிராபிக்ஸ், ரிவைசஸ் செய்யப்பட்ட ரியர் ஸ்பாய்லர் முகப்பு பம்ப்பர் மற்றும் பின்புற பம்ப்பர். மேலும் ஸ்விஃப்ட் எம்பளம் அனைத்து கதவுகளிலும், நீள வண்ணதில் கண்ணாடிகள் மற்றும் ஆடியோ அமைப்பு , ஏயூஎக்ஸ், யூஎஸ்பி இனைப்புடன் வெளிவந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.24,500 ஆகும்.
Author: MR.Durai
மஹிந்திரா நிறுவனம் இருசக்கர வாகன பிரிவில் சிறப்பான வளர்ச்சி பாதையில் பயணித்து வருகின்றது. இன்று விற்பனைக்கு வந்த மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் விலை ரூ.45,000 ஆகும்.4 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ள செஞ்சூரோ முதற்கட்டமாக டாப் வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது. திருட்டினை தடுக்கும் வகையில் இந்த பைக்கில் பாதுகாப்பு ஆலாரம் மற்றும் என்ஜின் இம்மொபைல்சர் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.106.7சிசி எம்சிஐ-5 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதன் ஆற்றல் 8.5 எச்பி மற்றும் 8.5 என்எம் டார்க் ஆகும்.மஹிந்திரா செஞ்சூரோ பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 85.4(ARAI) ஆகும்.இந்தியாவிலே முதன்முறையாக பல வசதிகளை மஹிந்திரா செஞ்சூரோ பைக்கில் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக கீயில் சின்ன விளக்கு, இரவில் வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு நகரும் பொழுது சிறிய தூரத்துக்கான பாதை காட்டும் விளக்குகள் (Guide Me Home Lamp), மற்றும் இருளான இடங்களில் பார்க்கிங் செய்திருந்தால் வாகனத்தினை எளிதாக கண்டுபிடிக்க விளக்குகள்(Find Me Lamp) போன்ற வசதிகள் உள்ளன.5…
32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டட்சன் பிராண்டில் நிசான் நிறுவனம் வருகிற ஜூன் 15ந்த தேதி டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகின்றது. முதற்கட்டமாக வெளிவரவுள்ள காரின் மாதிரி படத்தினை டட்சன் தன் இணையத்தில் வெளியிட்டுள்ளது.நடுத்தர மக்களின் சந்தையை மட்டுமே குறிவைத்து களமிறக்கப்பட உள்ள டட்சன் கார்கள் 3 முதல் 4 லட்சத்திற்க்குள் மட்டுமே இருக்கும். தற்பொழுது கே2 என்ற பெயரில் உருவாகி வரும் சிறிய ரக காரின் மாதிரி படம் வெளிவந்துள்ளது.குறைந்த விலை கார் என்றாலும் மிக சிறப்பான இடவசதியினை கொண்டிருக்கும்.
உலகின் மிக வேகமான எலக்ட்ரிக் ரேஸ் கார் என்ற சாதனையை பிரிட்டன் ட்ரேசன் டெக்னாலஜிஸ் கார் பெற்றுள்ளது. லோலா பி12 69/ இவி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 328.6 கிமீ வேகத்தை தொட்டுள்ளது.யார்க்சிரில் உள்ள ஆர்ஏஃஎப் ரேஸ் டிராக்கில் இந்த சாதனையை நிகழ்த்தியது. கடந்த வாரம் நிசான் நிறுவனம் லீ மேன்ஸ் போட்டியில் ஜியிஒட் ஆர்சி (ZEOD RC Zero Emission On Demand Racing Car) என்ற எலக்ட்ரிக் ரேஸ் காரை பார்வைக்கு வைத்தது. இந்த காரானது பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டிலும் செயல்படும். மேலும் இந்த காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 300 கிமீ என கூறியது. எனவே இந்த கார்தான் உலகின் வேகமான எலக்ட்ரிக் ரேஸ் கார் கடந்த வாரம் சொல்லப்பட்டாலும் இந்த வாரம் ட்ரேசன் மணிக்கு 328 கிமீ என்ற வேகத்தினை எட்டியுள்ளது.2014 செப்டம்பர் மாதம் முதன்முதலாக தொடங்க உள்ள எலக்க்ட்ரிக் ரேஸான ஃஎப்ஐஏ…
இசுசூ நிறுவனம் ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செய்படும் மிக பிரபலமான எஸ்யூவி மற்றும் பிக்அப் வாகனங்களின் தயாரிப்பாளராகும். இந்தியாவின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இனைந்து செயல்பட்டு வருகின்றது.கடந்த சில மாதங்களுக்கு முன் எம்யூ7 எஸ்யூவி மற்றும் டிமேக்ஸ் பிக்அப் டிரக்கை இந்தியாவவில் முழுதும் கட்டமைக்கப்பட்ட வாகனமாக விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவில் ஹைந்திராபாத் மற்றும் கோவையில் மட்டுமே டீலர்களை கொண்டுள்ளது.எச்எம் மற்றும் இசுசூ நிறுவத்துடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தமானது. இசுசூ வாகனங்களின் பாகங்களை தாய்லாந்தில் உள்ள இசுசூ ஆலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள எச்எம் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.இசுசூ மோட்டர்ஸ் பிரிஷிடென்ட் தக்காசி க்கிச்சூ கூறுகையில் இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பினை நாங்கள் பெருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முன்பு அறிமுகம் செய்யப்பட்ட எம்யூ7 எஸ்யூவி மற்றும் டிமேக்ஸ் பிக்அப் என இரண்டும் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் எம்டி மற்றும் சிஇஒ உத்தம் போஸ் கூறுகையில் இசுசூ…
பஜாஜ் சக்கன் ஆலையில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதால் சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கேடிஎம் 390 பைக்கின் டெலிவரி மிக தாமாதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த ஆலையில்தான் பஜாஜ் பல்சர் 200என்எஸ், கேடிஎம் 390, கேடிஎம் 200 மற்றும் கவாஸகி பைக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே இவற்றின் டெலிவரி போன்றவை பெருமளவு பாதிக்கும்.கேடிஎம் 390 பைக் டெஸ்ட் டிரைவ்களுக்கான பைக்கள் கூட இல்லையாம்.