Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

சவாலை தரக்கூடிய விலையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே எஸ்யூவி சந்தையில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி பற்றி முழுவிபரங்கள் அனைத்தும் முன்பே வெளிவந்துவிட்டன. ரூ.5.59 லட்சதில் தொடங்கும் ஈக்கோஸ்போர்ட் டாப் வேரியண்ட்டின் விலையே 8.99 லட்சம்தான்.3 விதமான என்ஜின்களில் 4 விதமான வேரியண்ட்டில் கிடைக்கும். அவற்றில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆகும். அவைஉலகின் சிறந்த என்ஜினுக்கான விருதினை வென்ற ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் டாப் வேரியண்டான டைட்டானியத்தில் மட்டுமே கிடைக்கும். ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் என்ஜின் ஆனது 125 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 112 பிஎஸ் ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்யிலும் கிடைக்கும்.1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 91 பிஎஸ் ஆற்றலை…

Read More

அசத்தலான ஸ்போர்ட்ஸ் பைக்ககான கேடிஎம் 390 டியூக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.1.80 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.ஏபிஎஸ் வசதியுடன் வெளிவந்துள்ள கேடிஎம் 390 டியூக் பைக் மிகவும் சிறப்பான ஸ்போர்டிவ் அனுபவத்தினை தரும் என்பதில் எவ்விதமான மாற்றமுமில்லை. கேடிஎம் பைக்கின் டியூக் 200 இந்தியாவில் மிக வேகமாக விற்பனையாகும் பிரிமியம் பைக் என்ற பெருமையை எட்டியது.373.2சிசி ஒரு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 45பிஎஸ் மற்றும் டார்க் 35என்எம் ஆகும்.முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும்.எம்ஆர்ஃப் மெட்டீலசர் ஸ்போர்டிவ் டயர்கள் தனித்துவமான அம்சமாக விளங்கும் என்பதில் எவ்விதமான ஐயமில்லை. மேலும் பலவிதமான சிறப்பு அம்சங்களுடன் விளங்குகின்றது.போஸ் நிறுவனத்தின் 9எம்பி டூ சானல் ஏபிஎஸ் நிரந்தரம் அம்சமாக விளங்கும் என்பதால் மிக சிறப்பான பாதுகாப்பினை தரும்.கேடிஎம் 390 டியூக் பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும்.கேடிஎம் 390 டியூக் பைக்கின்…

Read More

2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிகுந்த சக்திவாய்ந்த புகாட்டி வேரான் வெளிவரவுள்ளது. 1500எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மிகுந்த சக்தி வாய்ந்த 9.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.2014 புகாட்டி வேரான் கார்பன் ஃபைபரால் கட்டமைக்கப்பட உள்ளதால் எடை மிக குறைவாக இருக்கும். அதாவது காரின் எடை 1888 கிலோ மட்டுமே இருக்கும். புதிய புகாட்டி விலை 5 மில்லியன் பவுண்டுகள் அதாவது ரூ.45 கோடியை தொடும்.புகாட்டி வேரான் உச்சகட்ட வேகம் மணிக்கு 450கிமீ தாண்டும். தற்பொழுதுள்ள புகாட்டி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 431கிமீ ஆகும்

Read More

மாருதி சுசூகி ரீட்ஸ் காரின் வரையறுக்கப்பட்ட பதிப்பாக ரீட்ஸ் @buzz என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எல்எக்ஸ்ஐ, எல்டிஐ, விஎக்ஸ்ஐ மற்றும் விடிஐ வேரியண்டில் மட்டும் இந்த கூடுதல் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.@buzz எடிசன் சிறப்புகள்சிறப்பு பாடி கிராபிக்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார், யுஎஸ்பி, புளூடூத் இணைப்பு வசதிகளுடன் கூடிய ஆடியோ அமைப்பு, ரிட்ஸ் பெயர் பதிக்கபட்ட லெதர் சீட் கவர்கள்,ஸ்டீயரிங் வீல் கவர், பம்பர் புரொடெக்டர், டோர் சில் கார்டுகள், ரியர் பார்சல் டிரே , 6 ஸ்பீக்கர்கள் என வசதிகளை தந்துள்ளது.இவற்றின் மொத்த மதிப்பு ரூ.17,990 ஆகும்.எல்எக்ஸ்ஐ: Rs 4.50 லட்சம்விஎக்ஸ்ஐ: Rs 4.85 லட்சம்எல்டிஐ: Rs 5.60 லட்சம்விடிஐ: Rs 5.92 லட்சம்

Read More

மேப்மை இந்தியா நிறுவனம் பைக்களுக்கான நேவிகேஷன் சிஸ்டத்தை டிரைல்பிளாசர் 2 என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நேவிகேஷன் மட்டுமல்லாது பாடல்கள், சினிமா மற்றும் புகைபடங்களையும் கான முடியும்.8.9 செமீ அகலமுள்ள தொடுதிரையை கொண்டுள்ளது. Don’t Panic மென்பொருளும் பொருதத்ப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி 50 நகரங்களின் வீட்டு முகவரிகள் மற்றும் 5000 மேற்பட்ட நகரங்களின் தெருக்கள் என முக்கியமான அனைத்தும் அடங்கியுள்ளது. இந்த டிரைல்பிளாசர் 2 அமைப்பினை தேவைப்படும் பொழுது மட்டுமே பொருத்தி கொள்ளலாம்.மேப்மை இந்தியா டிரைல்பிளாசர் விலை ரூ.16,900 மட்டுமே.

Read More

லம்போர்கினி கல்லர்டோ காருக்கு மாற்றாக லம்போ கப்ரேரா வெளிவர உள்ளதாக கார்பஸ் தளம் சில ஊக படங்களை வெளியிட்டுள்ளது. 2003 முதல் விற்பனையில் உள்ள கல்லர்டோ மிக சிறப்பான வெற்றி பெற்ற காராக வலம் வருகின்றது.மிக குறைவான எடை கொண்ட கார்பன் ஃபைபர்களால் இந்த கார் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 5.2 லிட்டர் வி10 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 600எச்பி வரை இருக்கலாம்.இந்த வருட செப்டம்பரில் நடைபெறவுள்ள ஃபிரான்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த வருடம் உற்பத்தி தொடங்கலாம்.

Read More