Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

கேடிஎம் டியூக் 200 பைக்கின் வரவிற்க்கு பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கேடிஎம் டியூக் 390 வருகிற ஜூன் 25 விற்பனைக்கு வருவதனை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட படத்தின் மூலம் பஜாஜ் கேடிஎம் உறுதிப்படுத்தியுள்ளது.373சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 43பிஎச்பி மற்றும் டார்க் 35என்எம் ஆகும். ஏபிஎஸ் பிரேக்குடன் வெளிவரவுள்ளது. இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 170கிமீ ஆகும்.கேடிஎம் டியூக் 390 பைக் விலை ரூ.2 இலட்சம் இருக்கலாம்.

Read More

இந்தியாவில் தனித்து களமிறங்கும் முதல் சீனா நிறுவனம் என்ற பெருமையுடன் கிரேட் வால் விளங்கும். எஸ்யூவி பிரிவில் பிரபலமாக விளங்கும் கிரேட் வால் தனது ஆலையை புனேவில் அமைக்கின்றது.முதலில் தமிழகம் அல்லது குஜாரத் மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டுருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் புனேவில் ஆலையை கட்டமைக்க உள்ளது.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதல் காரை பார்வைக்கு வைக்க உள்ளது. அதனை தொடர்ந்து விற்பனைக்கு வரும். முதலில் ஹவால் எச்5 என்ற காரை விற்பனைக்கு வரும். ரூ.1676 கோடியில் ஆலை உருவாகின்றது.

Read More

ஃபியட் நிறுவனம் இந்தியாவில் டாடாவுடன் இணைந்து செயல்பட்ட பொழுது தனக்கென வளமையான கட்டமைப்பை உருவாக்க தவறியதால் லீனியா டி-ஜெட் காரை கடந்த ஆண்டு விற்பனை குறைவால் முற்றியிலும் நிறுத்தப்பட்ட லீனியா டி-ஜெட் மீண்டும் களமிறங்கியுள்ளது.நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக டீலர்களை திறந்து வருகின்றது. முதலில் 8 மெட்ரோ நகரங்களில் மட்டும் லீனியா டி-ஜெட் விற்பனைக்கு வந்துள்ளது.முன்பு இரண்டு விதமான மாறுபட்டவையில் மட்டும் இருந்த டி-ஜெட் தற்பொழுது கூடுதலாக ஒரு வேரியண்ட்டை இணைத்துள்ளது. சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தக்கூடிய காராக டி-ஜெட் வலம் வரும்.1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 114 பிஎச்பி ஆகும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.மழை வரும்பொழுது வைப்பர் தானாகவே இயங்கும், ஏபிஎஸ், காற்றுப்பைகள், இபிடி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , 16 இஃச் ஆலாய் வீல் மற்றும் லெதர் இருக்கைகள் கொண்டு இருக்கின்றது.இம்முறை கூடுதலாக எமோஷன் வேரியண்ட் இணைத்துள்ளது.லீனியா டி-ஜெட்…

Read More

மஹிந்திரா வெரிட்டோ செடான் காரை அடிப்படையாக கொண்ட வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் என்று சொல்வதற்க்கு பதிலாக சிறிய செடான் என சொல்லாலம். மஹிந்திராவின் நோக்கம் வெரிட்டோவை 4 மீட்டரூக்குள் கொண்டு வரவேண்டும் என்பதாகவே இருந்துள்ளது.3991மிமீ நீளமுள்ள வைப் சிறிய செடான் கார் வாங்க விரும்புபவர்கள் அதற்க்கு மாற்றாக வெரிட்டோ வைப் காரினை வாங்கலாம். செடான் கார்களுக்கு இனையான 330 லிட்டர் பூட் இடவசதியை தந்துள்ளது.பூட் வசதி அதிகம் இருந்தாலும் பின்இருக்கையில் 3 பெரியவர்கள் அமர்ந்தாலும் இயல்பாக அமர்ந்து பயணிக்க முடியும். மேலும் உயரமானவர்களும் இயல்பாகவே பயணிக்க முடியும். 5 நபர்கள் இயல்பாக அமர்ந்து பயணிக்கலாம்வெரிட்டோ காரின் முன்பகுதியில் எந்த மாற்றமும் செய்யாமல் வைப் காருக்கு பயன்படுத்தியுள்ளது. பின்பறத்தில் சி பில்லரை நீக்கிவிட்டு ஹேட்ச்பேக் காராக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.மூன்று விதமான மாறுபட்டவையில் வெளிவந்திருக்கும் வைப் டீசல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கும். தற்பொழுது பெட்ரோல் எஞ்சினுடன் களமிறக்கும் திட்டம் இல்லை.ரெனோ 1.5 லிட்டர்…

Read More

2013 மே மாத கார் சந்தை நிலவரங்களை கானலாம். இந்திய கார் சந்தையை சில மாதங்களாகவே சரிவு பாதையிலே உள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் பயணிக்கின்றது.ஹாட் மே1. ஹோண்டா நிறுவனம் 4ஆம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. டாடா மற்றும் டொயோட்டா நிறுவனங்களை பின்னுக்கு தள்ளியது.2. மாருதி ஆல்டோ 800 காரை விட மாருதி டிசையர் விற்பனை அதிகரித்துள்ளது.3. செவர்லே என்ஜாய் சிறப்பான வரவேற்பினை பெற்று ஜிஎம் நிறுவனத்துக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளது. 2173 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.4. கடந்த ஆண்டு மே மாதத்தை விட 9 % விற்பனை சரிவை சந்ததித்துள்ளது. இது மிக பெரிய வீழ்ச்சியே ஆகும்.5. மாருதி சுசூகி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா உள்ளது.6. ஸ்கார்பியோ விற்பனை அதிகரித்துள்ளது. டஸ்ட்டர் விற்பனை சரிவடைந்துள்ளது.7. சரிவில் இருந்த டொயோட்டா இன்னொவா விற்பனை அதிகரித்துள்ளது.8. இந்திய சந்தையின் பெரும் பகுதியை யூட்டிலிட்டி…

Read More

ரெனோ டஸ்ட்டர் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற எஸ்யூவி காராக வலம் வருகின்றது. பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்த ஸ்கார்பியோ காரை வீழ்த்தியது. நிசான் நிறுவனத்தின் கீழ் டஸ்ட்டர் வெளிவரவுள்ளது.ரெனோ டஸ்ட்டர் காரை நிசான் டெரானோ என்ற பெயரில் பெயர் மாற்றி இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது. டஸ்ட்டர் விற்பனை சரிய வாய்ப்புள்ளது. மேலும் டெரானோ மற்றும் டஸ்ட்டர்க்கு கடும் சவால் காத்திருக்கின்றது ஈக்கோஸ்போர்ட் வடிவில் இன்னும் சில தினங்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வரலாம்.நிசான் டெரானோ டஸ்ட்டரை விட சிறப்பான தோற்றத்துடன் மிக அழகான உட்ப்புற கட்டமைப்புடன் வெளிவரும். மேலும் டஸ்ட்டரைவிட சற்று விலை கூடுதலாக இருக்கலாம்

Read More