லம்போர்கினி நிறுவனத்தின் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் காரான அவேன்டேட்டர் 2000 கார்கள் என்ற உற்பத்தி இலக்கினை எட்டியுள்ளது. அறிமுகம் செய்த 2 வருடங்களில் மிக விரைவாக 2000 கார்கள் என்ற இலக்கினை எட்டியுள்ளது.4000 கார்கள் என்ற உற்பத்தி இலக்கினை கொண்ட அவேன்டேட்டர் 2000 கார்கள் இலக்கை கடந்துள்ளது. லம்போர்கினி நிறுவனத்தின் மிக பிரபலமான காரான முர்ச்சிலொகோ 2000 என்ற இலக்கை எட்ட 5 வருடமாகியதாம். ஆனால் அவேன்டேட்டர் 2 வருடங்களிலே இந்த இலக்கினை எட்டியுள்ளது.இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள அவேன்டேட்டர் படம் டிரான்ஸ்ஃபார்மர் 4 திரைபடத்தில் பயன்படுத்தப்படும் லம்போர்கினி அவேன்டேட்டர் காரின் படம் ஆகும். 2014 ஆம் ஆண்டு டிரான்ஸ்ஃபாமர் 4 வெளிவரும்
Author: MR.Durai
2014 டொயோட்டா கரொல்லா இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிக நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா கரொல்லா காரின் உற்பத்தி நிலை படங்கள் மற்றும் தகவல்களை டொயோட்டா வெளியிட்டுள்ளது. ஃப்யூரியா என்ற கான்செப்ட் காரினை அடிப்படையாக வைத்து 2014 கரொல்லா வெளிவந்துள்ளது. 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சினும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பெட்ரோல் எஞ்சினில் மட்டும் இருக்கும். புதிய முகப்பு தோற்றம், கிரில் மாற்றம், எல்இடி விளக்குகள், புதிய எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரீங் முந்தைய ஸ்டீயரீங்கைவிட 5 % வரை மேம்படுத்தப்பட்டுள்ளது. உட்ப்புற கட்டமைப்பு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடுதிரை, எஞ்சின் ஸ்டார்டர் பொத்தான் என மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும்.
ஸ்கோடா நிறுவனம் ஆக்டிவா விஆர்எஸ் மூன்றாவது தலைமுறை படங்கள் மற்றும் விபரங்களை வெளியிட்டுள்ளது. மிக நேர்த்தியான வடிவமைப்பில் பல விதமான மாற்றங்களுடன் மிக சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தக்கூடிய காராக ஸ்கோடா ஆக்டிவா விஆர்எஸ் வலம் வரும்.ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் ஆக்டிவா விஆர்எஸ்யில் பொருத்தப்பட்டிருக்கும். 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 217பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிடீ டீசல் எஞ்சின் ஆக்டிவா விஆர்எஸ்யில் பொருத்தப்பட்டிருக்கும். 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 181பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.இரண்டிலும் 6 வேக முடுக்கி பெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய ஆக்டிவாவை விட 17 % எரிபொருள் சிக்கனத்துடன் புதிய ஆக்டிவா செயல்படும்.ஸ்போர்ட் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. எலக்ட்ரானிக் எக்ஸ்டிஎஸ் டிஃப்ரியண்டல் பயன்படுத்தியுள்ளனர். புதிய கிரீல், முகப்பு விளக்குகள், எல்இடி விளக்குகள் என நவீனமயமாகப்பட்டுள்ளது.17,18,19 இன்ச் என மூன்று விதமான ஆலாய் வீல்களில் கிடைக்கும். புதிய இன்ஸ்டூருமென்டல் பேனல், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரீங் என அசத்துகின்றது.இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு…
ஹோண்டா அமேஸ் அறிமுகம் செய்த சில நாட்களிலே அட்டகாசமான முன்பதிவை பதிவு செய்ததை அறிவோம். தற்பொழுது ஹோண்டா அதிரடியாக அமேஸ் காரின் விலையை உயர்த்தியுள்ளது.அமேஸ் காரின் விலையை ரூ.3000 முதல் ரூ.8,000 வரை உயர்த்தியுள்ளது. மேலும் சிஆர்-வி விலையை ரூ.6000 முதல் ரூ.14,000 வரை உயர்த்தியுள்ளது,இந்த விலை உயர்வானது ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாம்.ஹோண்டா அமேஸ் பற்றி படிக்க ஹோண்டா அமேஸ்
மஹிந்திரா வெரிட்டோ வைப் ஹேட்ச்பேக் கார் ரூ.5.63 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளனர். டீசலில் மட்டுமே வைப் கிடைக்கும். 3 விதமான மாறுபட்டவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வைப் எடியாஸ் லீவா, செயில் யுவா போன்ற கார்களுக்கு சவாலாக விளங்கும்.செடான் பிரிவில் வெளிவந்த வெரிட்டோ காரை 4 மீட்டருக்குள் குறைத்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. ரெனோ கே9கே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருககும். இதன் ஆற்றல் 64 பிஎச்பி மற்றும் டார்க் 180என்எம் ஆகும்.மஹிந்திரா வெரிட்டோ வைப் மைலேஜ் லிட்டருக்கு 20.8கிமீ ஆகும். டாப் வேரியண்டில் ஏபிஎஸ், காற்றுப்பைகள் என பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மேலும் யூஎஸ்பி, பூளூடூத் இனைப்பு, டீஃபோக்கர் போன்றவை உள்ளன.மஹிந்திரா வெரிட்டோ வைப் விலை(எக்ஸ்ஷரூம் மும்பை)டி2 ரூ.5.63 லட்சம் டி4 ரூ.5.89 லட்சம் டி6 ரூ.6.49 லட்சம்
பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு வர்த்தக ரீதியான சந்தையில் மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ள பஜாஜ் நிறுவனத்துக்கு ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.என்ன அதிர்ச்சி என்றால் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பியாஜியோ, போலரிஸ் போன்ற நிறுவனங்களும் குவாட்ரிசைக்கிளுக்கு ஆர்வம் தெரிவித்துள்ளது. பியாஜியோ நிறுவனம் ஐரோப்பா சந்தையில் குவாட்ரிசைக்கிள் விற்பனையில் நல்ல இடத்தினை பெற்றுள்ளது.எனவே இந்திய சந்தையில் பல நிறுவனங்கள் ஆர்வம் தெரிவிப்பதால் பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு கடும் நெருக்கடி ஏற்படுவது உறுதி என்பதே வல்லுனர்களின் கருத்து குவாட்ரிசைக்கிளுக்கு அரசு வகுக்க உள்ள முழுமையான திட்டமே இந்த நிறுவனங்களின் வருகையை உறுதிப்படுத்தும்.எனவே பஜாஜ் ஆர்இ60க்கு கடுமையான போட்டி காத்திருக்கின்றது.