நெதர்லாந்து நாட்டின் ஸ்பைக்கர் சொகுசு கார் நிறுவனம் 2013 இறுதிக்குள் இந்தியாவில் தன்னுடைய கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே டெல்லியில் இறக்குமதியாளர் மற்றும் டீலரை நியமித்துள்ளது.ஸ்பைக்கர் நிறுவனம் பார்முலா-1 பந்தயங்களில் 2007 ஆம் ஆண்டு பங்கேற்றது. இந்த அணிதான் தற்பொழுது விஜ்ய மல்லையாவின் கீழ் செயல்படும் சஹாரா ஃபோர்ஸ் இந்தியா ஆகும்.ஸ்பைக்கர் நிறுவனம் இரண்டு விதமான கார்களை விற்பனை செய்து வருகின்றது. அவை சி8 அலிரான் மற்றும் பி6 வெனேட்டர் ஆகும்.சி8 அலிரான் காரில் ஆடி நிறுவனத்தின் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 400பிஎஸ் மற்றும் டார்க் 480என்எம் ஆகும்.பி6 வெனேட்டர் காரில் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 380பிஎஸ் ஆகும்.ஸ்பைக்கர் கார்களின் விலை ரூ.2 கோடியை தாண்டும்.
Author: MR.Durai
சாதரண சாலைகளில் பயன்படுத்தும் கார்களை போல ரேஸ் கார் நுட்பத்தினை அஸ்டன் மார்டின் வேண்டேஜ் எஸ் காரில் அஸ்டன் மார்டின் புகுத்தியுள்ளது. புதிய வி12 வேண்டேஜ் எஸ் 6.2 லிட்டர் எஞ்சினுடன் சீறுகின்றது.6.2 லிட்டர் எஞ்சின் 12 சிலிண்டர்களை கொண்டு விளங்குகின்றது. இதன் ஆற்றல் 565பிஎச்பி மற்றும் டார்க் 620 என்எம் ஆகும். 7 ஸ்பீடு முடுக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.வேண்டேஜ் எஸ் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 328கிமீ ஆகும்.மூன்று விதமான மோட்களை புதிய வேண்டேஜ் எஸ் கொண்டுள்ளது. அவை சாதரண பயணம், ஸ்போர்ட் பயணம் மற்றும் டிராக் பயணம் ஆகும்.மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டு விளங்கும் வேண்டேஜ் எஸ் கார் கார்பன் ஃபைபர் பாடியை கொண்டதாக விளங்கும். இனி படங்களை முழுதாக ரசிங்க…
இந்திய சந்தையின் தொடர் விற்பனை சரிவின் காரணமாக அனைத்து கார்களுக்கு சலுகைகளை நிறுவனங்கள் வாரி வழங்கியுள்ளது. இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மாருதி சுஸூகிஇந்தியாவின் முதன்மையான விற்பனையாளராக விளங்கும் மாருதி கடந்த சில மாதங்களாகவே சரிவை கண்டுள்ளது.ரூ.3000(ஆம்னி) முதல் ரூ.70,000 (எக்ஸ்4 டீசல்)வரை சலுகைகள் வழங்கியுள்ளது.ஹூண்டாய்ஹூண்டாய் மோட்டார்ஸ் சரிவை சந்தித்துள்ளது. ரூ.19,262 (இயான்)முதல் ரூ.65,327 (சொனாட்டா) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.டாடாடாடா மோட்டார்ஸ் மற்ற நிறுவனங்களை விட மிக பெரும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.30000 (இண்டிகா இவி2)முதல் ரூ.1,00,000(ஆர்யா) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.மஹிந்திராமஹிந்திரா வரி உயர்வினால் பெரும் சரிவை சந்தித்துள்ளது. ரூ.5000 (பொலிரோ)முதல் ரூ.58,888(குவான்ட்டோ) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.செவ்ரோலெட்செவர்லே ரூ.5,000(செயில்)முதல் ரூ.35,000 (டவேரா) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.டொயோட்டாடொயோட்டா நிறுவனத்தின் பிரபலமான இன்னோவா காரின் விற்பனை சரிந்துள்ளது. ரூ.17,500(எடியாஸ் மற்றும் லீவா) முதல் ரூ.35,000 (இன்னோவா மற்றும் ஆல்டிஸ்) வரை சலுகைகள் வழங்கியுள்ளது.ஹோண்டாஹோண்டா அமேஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ஆனால் மற்ற கார்களின்…
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது.டீசல் மாடல் ஏ180 சிடிஐ என்ற பெயருடன் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 109பிஎச்பி ஆகும் . ஏ180 ஸ்டைல் உச்சகட்ட வேகம் மணிக்கு 190கிமீ ஆகும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி முடுக்கிபெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் ஏ180 ஸ்போர்ட் பெயருடன் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 122பிஎச்பி ஆகும் . ஏ180 ஸ்டைல் உச்சகட்ட வேகம் மணிக்கு 202கிமீ ஆகும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி முடுக்கிபெட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. 17 இன்ச் ஆலாய் வீல், ஈக்கோ முறையில் ஆன்/ஆஃப் வசதி, 7 காற்றுப்பைகள், பூளுடூத், யூஎஸ்பி, ஐ-பாட் இனைப்பு என பல வசதிகள் உள்ளன.மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் கார் விலை( மும்பை எக்ஸ்ஷோரூம்)மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் பெட்ரோல் மாடல் ஏ180 ஸ்போர்ட் ரூ.22.73 லட்சம்மெர்சிடிஸ் ஏ-கிளாஸ் டீசல் மாடல் ஏ180 சிடிஐ…
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மூன்றாவது இருசக்கர வாகன ஆலையை பெங்களூர் அருகில் திறந்துள்ளது.பெங்களூர் நரசப்பூர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலைக்கான முதலீடு ரூ.1350 கோடியாகும். சுமார் 96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில் வருடத்திற்க்கு 12 லட்சம் பைக்கள் உற்பத்தி செய்ய முடியும். அடுத்த மாதம் முதல் உற்பத்தியை இந்த ஆலையில் தொடங்க உள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார் வரும் ஜூன் 11ந்த தேதி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.ரூ.50000 செலுத்தி ஈக்கோஸ்போர்ட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை துவக்கத்திலோ ஈக்கோஸ்போர்ட் டெலிவிரி செய்யலாம் என கூறப்படுகின்றது. எனவே உங்கள் அருகில் உள்ள டீலரை அனுகவும்.விலை விபரங்கள் பற்றி இதுவரை எந்த அதிகார்ப்பூர்வ தகவலும் இல்லை.