டொயோட்டா கரோல்லா ஆல்டிஸ் காரில் டிரைவ் சாஃப்ட்டில் ஏற்ப்பட்டுள்ள தொழில்நுட்ப காரணத்தால் இதனை திரும் பெற உள்ளது. அதாவது 2012 ஆகஸ்ட் 3 முதல் கடந்த பிப்பரவரி 14 வரை உள்ள காலத்தில் தயாரிக்கப்பட்ட 1000 கார்களை மட்டும் திரும்ப பெற உள்ளது.இந்த டிரைவ் சாஃப்ட்டில் பிரச்சனை இருப்பது உறுதியானல் அவற்றை இலவசமாக டொயோட்டா மாற்றிதரும். இதுகுறித்த விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா விரைவில் தெரிவிக்கும்.
Author: MR.Durai
இந்தியாவில் மிக எதிர்பார்க்கப்படும் கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி முதன்மை வகிக்கின்றது. வருகின்ற ஜூன் மாதம் விற்பனைக்கு வருவதனை உறுதி செய்துள்ளது. மேலும் ஜூன் முதல் முன்பதிவு தொடங்குகின்றது.10 விதமான மாறுபட்டவையில் வெளிவரவுள்ள ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்திய எஸ்யூவி சந்தையில் தனியான இடத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஈக்கோஸ்போர்ட் காரில் இந்தியாவிலே முதன்முறையாக அதிநவீன அவசர கால சேவையை வழங்கவுள்ளது. விபத்து நேரிட்டால் உடனடியாக உங்கள் அலைபேசி 108 சேவை மையத்திற்க்கு அழைத்து உதவி கோரும். இதனால் விரைவாக விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி கிடைக்கும்.வரும் ஜூன் 1 முதல் முன்பதிவு தொடங்கின்றது. மேலும் ஜூன் 11 தேதி முதல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டொயோட்டா நிறுவனம் மினி எஸ்யூவி காரை களமிறக்க திட்டமிட்டு வருகின்றது. மேலும் சிறிய ரக கார்களை உருவாக்கும் எண்ணத்திலும் உள்ளதாம். மிக பெரும் வரவேற்பினை பெற்று வரும் மினி எஸ்யூவி சந்தையை குறிவைத்து டொயோட்டா களமிறங்க உள்ளது.டொயோட்டா இன்னோவா விற்பனை கடந்த சில மாதங்களாகவே சரிவினை சந்தித்து வருகின்றது. இந்தியாவின் டொயோட்டா விற்பனையில் பெரும்பங்கு இன்னோவையே சாரும்.எடியாஸ் மற்றும் லீவா போன்ற கார்களும் மிக பெரும் வரவேற்பினை பெற தவறியுள்ளது. சிறிய ரக கார்களில் லீவா மட்டுமே இந்தியாவில் உள்ளது. மேலும் ஒரு சிறிய ரக காரை மற்றும் மினி எஸ்யூவி கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.இந்தியாவில் டீசல் எஞ்சின் தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்க்காக இந்தியாவின் எதிர்கால கொள்கைகளை பொருத்து இந்தியாவில் டீசல் எஞ்சின் ஆலையை உருவாக்கும்.மினி எஸ்யூவி பற்றி அனைத்து ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் சிந்திக்க காரணம் டஸ்ட்டர், வரப்போகின்ற ஈக்கோஸ்போர்ட் ஆகியவை காரணம்.
ஃபோர்டு ஆஸ்திரேலியா பிரிவு ஆலையை மூட ஃபோர்டு முடிவு செய்துள்ளது. 1925 முதல் செயல்பட்டு வரும் மிக பழமையான ஆஸ்திரேலியா ஆலையை மிக கடுமையான நஷ்டத்தால் 2016 ஆண்டு முதல் ஆலையை மூட உள்ளதாம்.ஆஸ்திரேலியவில் உள்ள இரு ஆலைகளும் மூடப்பட்டால் நேரடியாக 1200க்கு மேற்பட்ட தொழிலார்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். மேலும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் உட்ப்பட இன்னும் பல தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.கடந்த நிதி ஆண்டில் சுமார் ரூ.3996 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். அந்நாட்டு அரசு வழங்கிய வரிசலுகைகளும் எடுபடவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் நல்ல லாபத்தினை அடையும் பொழுது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் மிக பெரும் நட்டத்தை அடைந்துள்ளது.ஆஸ்திரேலியா டீலர்களை தொடர்ந்து பராமரிக்க உள்ளதாம். வெளிநாடுகளில் இருந்து மட்டும் கார்களை இறக்குமதி செய்ய உள்ளதாக தெரிகின்றது.மிக பெரும் நஷ்டத்திற்க்கு காரணம் ஆஸ்திரேலியாவில் கார் தயாரிக்கும் செலவுகள் ஐரோப்பாவைவிட இரண்டு மடங்கும்…
நிசான் மைக்ரா மற்றும் சன்னி கார்களை பிரேக் பிரச்சனை காரணமாக திரும்ப பெற உள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது. பிரேக் சிலிண்டரில் நுட்ப பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனை இலவசமாக சரிசெய்யவதாக நிசான் தெரிவித்துள்ளது. பிரேக் பிரச்சனையை காரணம் காட்டி விபத்துகள் நடக்கவில்லை. இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ள 22188 கார்களை திரும்ப பெற உள்ளது. இவற்றில் மைக்ரா மற்றும் சன்னி என இரண்டும் அடங்கும்.மேலும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட 67,089 கார்களை திரும்ப பெற உள்ளதாம். சன்னி மற்றும் மைக்ரா கார்களை செய்து ரெனோ பல்ஸ் மற்றும் ஸ்காலா என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றது. இவற்றை திரும்ப பெறுவதற்க்கான வாய்ப்புகளும் உள்ளன.வாடிக்கையாளர்களுக்கு இதுபற்றி விவரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக நிசான் தெரிவித்துள்ளது.
யமஹா ரே ஸ்கூட்டரினை அடிப்படையாக கொண்ட ஆண்களுக்கான ரே இசட் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேவில் இருந்து சில விதமான மாற்றங்களை செய்து அறிமுகம் செய்துள்ளது. மேலும் இரண்டு 150சிசி பைக்களை அறிமுகம் செய்துள்ளது.ரே ஸ்கூட்டர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஸ்கூட்டராக வலம் வருகிறது. இதே ஸ்கூட்டரின் முகப்பு மற்றும் சில மாற்றங்களை செய்து ரே இசட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் எஞ்சின் ரே ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த 113சிசி எஞ்சினே ஆகும்.மேலும் இரண்டு 150சிசி பைக் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. அவை எஸ் இசட்-எஸ் மற்றும் எஸ்இசட்-ஆர்ஆர் ஆகும்.யமஹா ரே இசட் ஸ்கூட்டர் விலை ரூ.48,555(டெல்லி எக்ஸ்ஷோரூம்)யமஹா 150சிசி எஸ் இசட்-எஸ் விலை ரூ.59,500யமஹா 150சிசி எஸ் இசட்-ஆர்ஆர் விலை ரூ.62,500