யமஹா நிறுவனத்தின் மிக பிரபலமான ரே ஸ்கூட்டர் ஆண்களுககான ஸ்கூட்டராகவும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஸ்கூட்டராக விளங்குகின்றது.யமஹா ஃபிரிக்ஸ் தளம் சில படங்களை வெளியிட்டுள்ளது. யமஹா ரே ஸ்கூட்டரின் ஸ்டைலில் பெரிதும் மாற்றம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களை போலவே ஆண்களையும் நிச்சியமாக கவரும். ரே ஸ்கூட்டர் எஞ்சினே இதில் பொருத்தப்பட்டிருக்கலாம்.
Author: MR.Durai
பஜாஜ் நிறுவனத்தின் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணம் காட்டி அனுமதி அளிக்ககூடாது என சில நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த பொழுதும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.குறைவான பாதுகாப்பு காரணம் காட்டப்பட்டாலும் ஆட்டோரிக்ஷாவை விட கூடுதலான பாதுகாப்பு வசதியாக இருக்கும் என ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். இதனால் பஜாஜ் விரைவில் ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.ஆட்டோரிக்ஷாவிற்க்கு மாற்றாக விளங்கும் என்பதால் ஆண்டுக்கு 60,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். கார்பன் வாயு குறைவாக வெளியிடும் என்பதால் சுற்றுசூழலுக்கும் பாதுகாப்பினை தரும். தற்பொழுது சோதனையில் உள்ள ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் விரைவில் விற்பனைக்கு வரும். பஜாஜ் ஆர்இ60 குவாட்ரிசைக்கிளுக்கு ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளது.
செவர்லே நிறுவனம் தன்னுடைய கார் மாடல்களின் விலையை 1.5 சதவீதம் வரை அதாவது ரூ.10,000 வரை உயர்த்தியுள்ளது .இந்த விலை உயர்வு வருகிற ஜூன் முதல் வாரம் முதல் அமலுக்கு வரும்.இந்த விலை உயர்வு குறித்து ஜெஎம் இந்திய பிரிவு துணைத் தலைவர் பி.பாலேந்திரன் கூறுகையில்,”டீசல் விலை நிரந்தரமற்றதாக மாதந்தோறும் உயர்த்தப்பட்டு வருவதின் காரணமாக போக்குவரத்து செலவுகள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது.இதனை சமாளிக்க முடியவில்லை. எனவே, இதனை வாடிக்கையாளர் மீது தினிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வரும் ஜூன் முதல் கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்,” என்றார்.செவர்லே கார்களின் விலை ரூ.10.000 வரை உயரும்.
ஹோண்டா நிறுவனத்தின் அபரிதான வளர்ச்சியால் மூன்றாம் இடத்திற்க்கு பஜாஜ் சில மாதங்களுக்கு முன் தள்ளப்பட்டது. இதனால் அடுத்த 1ஆண்டிற்க்குள் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்து இதனை ஈடுகட்ட திட்டமிட்டுள்ளது.6 புதிய டிஸ்கவர் மாடல்களை களமிறக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இவற்றில் 4 மாடல்கள் ரூ.40,000 முதல் ரூ.50,000 விலைக்குள் இருக்கும். மேலும் இரு மாடல்கள் இவற்றை விட சற்று கூடுதலான விலையில் இருக்கும்.பல்சர் 150 மற்றும் பல்சர் 375 மாடல் என இரண்டு பல்சர் மாடல்கள் வெளிவரும். இவை அனைத்தும் இன்னும் ஒரு ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
டட்சன் பிராண்டு சிறிய ரக கார்கள் வருகிற 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்க்கான முயற்சியில் நிசான் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றது.இந்தியாவினை மையமாக வைத்து உருவாக்கப்படும் டட்சன் கார்கள் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளர்களுக்கு மிக பெரும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறைவான காராக விளங்கினாலும் மிக சிறப்பான வடிவமைப்பு தரம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை பெற்று இருக்கும். நடுத்தர இந்திய மக்களை பெரிதும் கவரும்.2017 ஆம் ஆண்டிற்க்குள் மொத்த இந்திய சந்தையின் 10 சதவீதத்தை கைப்பற்ற நிசான் திட்டமிட்டுள்ளது. எனவே அடுத்தடுத்து 5 மாடல்களை விற்பைக்கு கொண்டு வரவுள்ளது.முதற்கட்டமாக கே2 என்ற கோடு பெயரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்சின் வடிவமைப்பில் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றதாம். இந்த காரின் அனைத்து பாகங்களும் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படும் என்பதால் விலை குறைவாக இருக்கும். இந்த காரின் விலை 3 லட்சம் முதல்…
ஹார்லி டேவிட்சன் 24×7 ரோடு உதவி சேவையை இந்தியாவில் தொடங்கியுள்ளது. மிக குறைவான டீலர்களை மட்டுமே கொண்டுள்ள டேவிட்சன் அதாவது நாடு முழுவதும் 9 டீலர்களை மட்டுமே உள்ளது. திடீரென பயணத்தின் பொழுது பழுது ஏற்பட்டால் உதவி செய்ய 24 மணி நேர சேவையை தொடங்கியுள்ளது ஹார்லி டேவிட்சன். இதன் அறிமுகத்தின் பொழுது இந்திய பிரிவின் எம்டி கூறியது.. இந்தியா உதவி சேவை மையத்தின் நோக்கம் 24 மணி நேரமும் மிக சிறப்பான தரமான சேவையை மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.