இந்தியன் மோட்டார்சைக்கிள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை நிர்வகித்து வருவது போலரிஸ் ஆகும்.போலரிஸ் நிறுவனம் தன்னுடைய பிராண்ட்களை இந்தியாவில் களமிறக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது. இந்தியன் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சென் நிறுவனத்திற்க்கு கடும் போட்டியை தரும்.வருகிற ஆகஸ்ட் மாதம் ஸ்டூருகிஸ் மோட்டார் விழாவில் 2013 இந்தியன் சிஃப் (indian cheif) என்ற பைக் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த பைக் இந்தியாவிற்க்கு 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம்.2013 இந்தியன் சிஃப் பைக்கில் 1819சிசி தன்டர்ஸ்டோர்க் வி-டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 116பிஎஸ் இருக்கலாம்.போலரிஸ் நிறுவனத்தின் விக்டரி பிராண்டின் கீழ் விற்பனைக்கு வரும். இதற்க்காக புதிய டீலர்களை நியமிக்க உள்ளது. முழுமையான கட்டமைப்பில் விற்பனைக்கு வருவதனால் விலை கூடுதலாகத்தான் இருக்கும்.
Author: MR.Durai
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் 2013 காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதனை விம்பிள்டன் வீரர் போரீஸ் பெக்கர் அறிமுகம் செய்தார்.2013 ஜிஎல் கிளாஸ் 100 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதன் முந்தைய பதிப்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.ஜிஎல் கிளாஸ்யில் புதிய ஜிஎல் 350சிடிஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய எஞ்சினை விட 22 % டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் co2 குறைக்கப்பட்டுள்ளது. இது 258பிஎஸ் ஆற்றல் மற்றும் டார்க் 650 என்எம் வரை வெளிப்படுத்தும்.இதன் ஸ்டார்ட்டிங் முறையானது ஈக்கோ முறையில் உள்ளது. டிராஃபிக் சிக்கனல்களில் காத்திருக்கும் பொழுது தானாகவே எஞ்சின் ஆஃப் ஆகிவிடும். இயக்கும்பொழுது தானாகவே இயங்கும்.புதிய மெர்சிடிஸ் ஜிஎல் கிளாஸ் காரில் பலதரப்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மேலும் புதிய கம்பீரத்தை தரக்கூடிய சக்திவாய்ந்த காராகும்.புதிய மெர்சிடிஸ் ஜிஎல் கிளாஸ் விலை ரூ.77.5 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)
ஹோண்டா நிறுவனம் பார்முலா 1 பந்தயங்களில் மீண்டும் வருகிற 2015 முதல் மெக்லாரன் காருக்கு எஞ்சின் சப்ளை செய்ய உள்ளதை உறுதி செய்துள்ளது.கடந்த 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார பின்னடைவால் விலகியது. 1988 முதல் 1992 வரை மெக்லாரன் நிறுவனத்துக்கு எஞ்சின் சப்ளை செய்தது. இந்த காலகட்டங்களில் 4 முறை பட்டங்களை வென்றுள்ளது. தற்போழுது மெக்லாரன் நிறுவனத்துக்கு மெர்சிடிஸ் எஞ்சின்களை சப்ளை செய்து வருகின்றது.தற்பொழுது பார்முலா 1 விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் 1.6 லிட்டர் வி6 டர்போசார்ஜ்டு எஞ்சின்களை மெக்லாரன் நிறுவனத்துக்கு அளிக்கும். இதன் மூலம் ஹோண்டா மீண்டும் ஃஎப் 1 பந்தயங்களில் களமிறங்குகின்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் 2014 அறிமுகம் செய்துள்ளனர். புதிய எஸ் கிளாஸ் நவீன நுட்பங்களுடனும் பலரதரப்பட்ட வசதிகளுடனும் வெளிவந்துள்ளது. மெர்சிடிஸ் ஸ் கிளாஸ் செடான் மிக நேர்த்தியான வடிவமைப்பில் விளங்குகின்றது. எஸ் கிளாஸ் காரின் அதிகார்வப்பூர்வ படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.முந்தைய எஸ் கிளாஸ் காரைவிட பன்மடங்கு உயர்வு பெற்றுள்ளது. எஸ் கிளாஸ் 2007 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ளது. புதிய எஸ் கிளாஸ் செடான் காரில் 4 விதமான வேரியண்ட் உள்ளன. அவை 1. எஸ்350 ப்ளூடெக்கில் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 258எச்பி மற்றும் டார்க் 620என்எம் ஆகும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். 0-100கிமீ வேகத்தினை 6.8 விநாடிகளில் எட்டிவிடும் இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.2. எஸ்300 ப்ளூடெக் ஹைபிரிட்டில் 2.1 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 240எச்பி மற்றும் டார்க்…
ஹீரோ மோட்டோகார்ப் மத்திய அமெரிக்க நாடுகளில் விற்பனையை தொடங்கியுள்ளது. இண்டி மோட்டாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து விற்பனையை தொடங்கியுள்ளது.மத்திய அமெரிக்காவில் உள்ள குவான்ட்மாலா, இஐ சால்வேடார் மற்றும் ஹாண்டூராஸ் போன்ற நாடுகளில் முதற்கட்டமாக விற்பனையை தொடங்கியுள்ளது.ஹீரோ பைக் மாடல்களான ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி, சூப்பர் ஸ்பிளென்டர், எச்எஃப் டான், கிளாமர், அச்சிவர், ஹங்க் மற்றும் கரீஷ்மா பைக்களை விற்பனை செய்ய உள்ளது.மேலும் வரும்காலங்ளில் லத்தின் அமெரிக்கா, மற்ற மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலும் விற்பனை செய்ய தனது டீலர்களை அங்குள்ள தனது கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து தொடங்க உள்ளனர்.தற்பொழுது விற்பனையில் உள்ள வெளிநாடுகள் இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் கொலம்பியா ஆகும்.
லம்போர்கினி உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு வருவதனை லம்போர்கினி உறுதி செய்துள்ளது. உரஸ் எஸ்யூவி 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.லம்போர்கினி எல்எம்002 எஸ்யூவி 1986 முதல்1993 வரை விற்பனையில் இருந்தது. அதன் பின்பு உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது. இதன் வடிவமைப்பானது எம்எல்பி தளத்தில் உருவாக்கப்படுவதனால் இலகு எடையாக இருக்கும். அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனால் வாகனத்தின் எடை மிக குறைவாக இருக்கும்.50வது ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ள லம்போர்கினி ஈகோஸ்டா என்ற கான்செப்ட்டை அறிமுகம் செய்தது. தற்பொழுது லம்போர்கினி உரஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதிசெய்துள்ளது